மாளவிகா சபர்வால்
மாளவிகா சபர்வால் (Malvika Sabharwal) என்பவர் அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் நோவா சிறப்பு மருத்துவமனை[1] மற்றும் புது தில்லியில் உள்ள ஜீவன் மாலா மருத்துவமனையின் இந்திய மகளிர் மருத்துவ நிபுணர், நுண்அறுவைச்சிகிச்சை அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் மகப்பேறியல் மருத்துவர் ஆவார்.[2][3] இவர் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய நார்த்திசுக்கட்டியை அகற்றுவதில் வெற்றிகரமான செயல்திறனுக்காக இவது தலைமையிலான குழு பாராட்டப்பட்டது.[4] மகப்பேறு மருத்துவம் தொடர்பான நுண்அறுவைச்சிகிச்சை நடைமுறைகளில் ஈடுபட்டுள்ள 140 மருத்துவர்கள் கொண்ட கியானே நுண்அறுவைச்சிகிச்சை குழுவின் தலைவராக இருந்தார்.[5]
மாளவிகா சபர்வால் Dr Malvika Sabharwal | |
---|---|
பிறப்பு | புது தில்லி, இந்தியா |
பணி | மகப்பேறு மருத்துவர் |
அறியப்படுவது | லப்பிரச்கொப்பி |
வாழ்க்கைத் துணை | மருத்துவர் வினை சபர்வால் |
விருதுகள் | பத்மசிறீ |
சபர்வால் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். இதே நிறுவனத்தில் தனது முதுநிலை படிப்பினை மகளிரியலில் கருப்பை அக நோக்கல் பயிற்சியினை முடிக்கும் முன்னர் முடித்துள்ளார். இதன் பின்னர் வாம்சுதெக்கர் (Wamsteker), கார்லெம் (Haarlem), நெதர்லாந்து மற்றும் ஆதம் மகோசு மருத்துவமனைகளில் பயிற்சி பெற்றார்.[6] இவர் இந்திய மகளிர் மருத்துவ நுண்அறுவைச்சிகிச்சை சங்கம், இந்திய கருத்தரிப்பு சங்கம், இந்திய மாதவிடாய் நின்ற சங்கம், நுண்அறுவைச்சிகிச்சை அறுவை சிகிச்சை நிபுணர்களின் இந்திய சங்கம், பன்னாட்டு மகளிர் மருத்துவ நுண்அறுவைச்சிகிச்சை சங்கம், கேஸ்லெஸ் பன்னாட்டு, மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவ சங்கம் மற்றும் நுண்அறுவைச்சிகிச்சை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் போன்ற பல மருத்துவ சங்கங்களில் உறுப்பினராக உள்ளார். சபர்வால் பல மருத்துவ சொற்பொழிவுகள் மற்றும் முக்கிய உரைகளை நிகழ்த்தியுள்ளார்.[7] பெண்கள், குழந்தைகள் மற்றும் பணியாளர்களுக்குப் பல இலவச சுகாதார முகாம்களை நடத்தியுள்ளார்.[8] மருத்துவத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 2008ஆம் ஆண்டில் பத்மசிறீ என்ற நான்காவது உயரிய குடிமக்கள் விருதை வழங்கியது.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Fight cervical cancer through prevention and early detection". Alive. 7 February 2014. பார்க்கப்பட்ட நாள் 8 February 2016.
- ↑ "On Sehat". Sehat. 2016. பார்க்கப்பட்ட நாள் 8 February 2016.
- ↑ "Dr.Malvika Sabharwal - Book Appointment Online, View Fees, Feedbacks| Timesmed".
- ↑ "Delhi doctors remove world's largest fibroid". Times of India. 27 October 2010. பார்க்கப்பட்ட நாள் 8 February 2016.
- ↑ "About Gynae Endoscopy". Gynae Endoscopy. 2016. Archived from the original on 26 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 8 February 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Dr. Malvika Sabharwal on Practo". Practo. 2016. பார்க்கப்பட்ட நாள் 8 February 2016.
- ↑ "Sabharwal on Credi Health". Credi Health. 2016. பார்க்கப்பட்ட நாள் 8 February 2016.
- ↑ "Medical Tourism profile". Medical Tourism. 2016. பார்க்கப்பட்ட நாள் 8 February 2016.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
வெளி இணைப்புகள்
தொகு- "Civil Investiture Ceremony - Padma Shri". Web Gallery. Gynae Endoscopy. 2016. Archived from the original (PDF) on 26 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 8 February 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)