மாவட்டக் கிளை நூலகம், திருப்பத்தூர்
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
திருப்பத்தூர் கிளை நூலகம் என்பது தமிழ்நாட்டின், வேலூர் மாவட்டத்தின், திருப்பத்தூரில் அமைந்துள்ள ஒரு நூலகமாகும். இது நகராட்சி முதல் நிலை மாவட்டக் கிளை நூலகமாகும். இது அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ளது. இது 05. 11. 1954 அன்று தொடங்கப்பட்டது. இந்நூலகத்தில் இரண்டாம் நிலை நூலகர் ஒருவரும், இரண்டு நூலகப் பணியாளர்களும் பணிபுரிகிறார்கள். இதில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. நூலகம் இரு பகுதிகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. அவை, இரவல் நூல் பகுதி மற்றும் குறிப்புதவி நூல் பகுதி என்பவை ஆகும். நூல்கள் 35-க்கும் மேற்பட்ட பிரிவுகளாக பிாித்து வைக்கப்பட்டுள்ளன.
நூல்கள் மட்டும் அன்றி இங்கு நாளேடுகள், வார இதழ்கள், மாதமிருமுறை இதழ்கள், மாத இதழ்கள் மற்றும் படிப்பதற்கென தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளன.