மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், மாயனூர்
கரூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கரூர் மாவட்டத்தில் மாயனூர் என்ற ஊரில் அமைந்துள்ளது.[1]
அமைவிடம்
தொகுகரூரிலிருந்து சுமார் 20 கி.மீ துாரத்தில் திருச்சி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
ஏழு கிளைகள்
தொகு- பணிமுன் பயிற்சி
- பணியிடைப் பயிற்சி
- பணிஅனுபவக் கல்வி
- மாவட்ட வள அலகு
- திட்டமிடலும் மேலாண்மையும்
- கலைத்திட்டம் பாடப்பொருள் உருவாக்கம் மதிப்பிடுதல்
- கல்வி நுட்பவியல்
ஏழு துறைகளின் செயல்பாடுகள்
தொகுபணிமுன் பயிற்சி பிரிவு
தொகு- ஆசிரியர் கல்வியை அளித்தல், அதாவது மேனிலைக் கல்வியில் (பனிரெண்டாம் வகுப்பு) தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியரை மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்து இரண்டாண்டுக் கல்வியாக வழங்கப்படுகிறது. இவர்கள் 1முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் தகுதியைப் பெறுவர். [2]
- கற்போரை மையமாகக் கொண்ட கல்வியையும், ஆளுமை வளர்ச்சிக்கான கல்வியையும் நன்னெறி பண்பாட்டுக் கல்வியையும் மற்றும் கற்றல் பொருள் துணைக்கருவிகள் தயாரித்தல் மற்றும் பயன்படுத்தலையும் ஆராய்ச்சி வாயிலாக பரப்புதல்.
- கற்பிக்கும் முறைகளை கவனித்தல்.
- உளவியல் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்.
பணியிடை பயிற்சி பிரிவு
தொகு- மாவட்டம் முழுமையிலுள்ள தொடக்ககல்வி,உயர்நிலை, மேல்நிலை கல்வி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், கருத்தாளர்கள் ஆகியோருக்கு திட்டமிட்டு பணியிடைப் பயிற்சி அளித்தல்.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://karur.nic.in/ta/public-utility/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-26. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
- ↑ http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=505707&cat=504[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ https://www.dailythanthi.com/News/State/numeracy-training-for-primary-school-teachers-950928