மாஸ்டர் தன்ராஜ்
தன்ராஜ் மாஸ்டர் அல்லது மாஸ்டர் தன்ராஜ் (Master Dhanraj (also credited as Dhanraj Master) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத் தலைநகரான சென்னையில் உள்ள மைலாப்பூரைச் சேர்ந்த இசை ஆசிரியர், இசைக் கலைஞர் மற்றும் பல்வேறு இசைக் கருவிகளை வாசிக்கும் திறன் கொண்ட பன்முக இசைக் கலைஞர் ஆவார்.[1] இவர் மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளுவதிலும், வாசிப்பதிலும் வல்லவர்.[2]. 1948-இல் வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படமான சந்திரலேகா திரைப்படத்தில், முரசு நடனக் காட்சியில், இவர் முதன் முதலில் மேற்கத்திய இசையை அறிமுகப்படுத்தினார்.[3]
தன்ராஜ் மாஸ்டர் | |
---|---|
பிறப்பிடம் | மைலாப்பூர், சென்னை, இந்தியா |
தொழில்(கள்) | இசை ஆசிரியர், இசைக் கலைஞர், மேற்கத்திய இசைக் கருவிகள் வாசிப்பவர் |
இவரிடம் இசை பயின்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இளையராஜா[4], ஏ. ஆர். ரகுமான்[4][5]மெல்லிசை மன்னர் வித்தியாசாகர் [6]தேவா, மலையாள இசை அமைப்பாளர் சியாம் மற்றும் இசை அமைப்பாளர் எம். ஏ. அப்துல் சத்தார் ஆவார்.
இவர் இளையராஜாவின் இயற்பெயரான இராசய்யா என்பதை இராஜா என மாற்றி வைத்தவர்.[7] [8]
புத்தகங்கள் தொகு
- பிரம்மா மேளா பிராமணம்
- இசை விதி
- 180 டிகிரி
பாராட்டு தொகு
தன்ராஜ் மாஸ்டர் சென்னையில் மேற்கத்திய இசையின் அடிப்பாகமாக கருதப்பட்டார். சென்னை மேற்கத்திய பாரம்பரிய இசையின் மையமாக மாறுவதற்கு அடித்தளம் அமைத்த மூவரில் இவரும் ஒருவர்.
தன்ராஜின் புகழ்பெற்ற மாணவர்கள்,
இசை பயின்றவர்கள் |
---|
இளையராஜா |
ஏ. ஆர். ரகுமான் |
வித்யாசாகர் |
ஷியாம் |
தேவா |
அப்துல் சட்டார் |
மேற்கோள்கள் தொகு
- ↑ https://www.thehindu.com/news/cities/chennai/trinity-of-western-classical-music/article7595499.ece
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2008-08-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080815111230/http://www.hindu.com/fr/2008/08/08/stories/2008080850910200.htm.
- ↑ Kolappan, B. (2019-02-02). "Maestro remembers Dhanraj Master" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/chennai/maestro-remembers-dhanraj-master/article26164549.ece.
- ↑ 4.0 4.1 Kolappan, B. (2015-08-30). "Trinity of western classical music" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/news/cities/chennai/trinity-of-western-classical-music/article7595499.ece.
- ↑ Mathai, Kamini (2009-01-01) (in en). A.R. Rahman: The Musical Storm. Penguin Books India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780670083718. https://books.google.com/books?id=gfCTmjEAChIC&pg=PA20&lpg=PA20&dq=dhanraj+master&source=bl&ots=CCkTgYimuS&sig=5wntboXKvQMi7U9nVcnK80wIzeU&hl=en&sa=X&ved=0ahUKEwjtodLN4LDQAhWKsI8KHdBqALI4ChDoAQg7MAY#v=onepage&q=dhanraj%20master&f=false.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2010-06-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100620231004/http://www.indiaglitz.com/channels/tamil/gallery/events/22528.html.
- ↑ https://www.thehindu.com/news/cities/chennai/maestro-remembers-dhanraj-master/article26164549.ece
- ↑ Slobin, Mark (2008-09-29) (in en). Global Soundtracks: Worlds of Film Music. Wesleyan University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780819568823. https://books.google.com/books?id=VQw5Ci7sbasC&pg=PA124&dq=dhanraj+master&hl=en&sa=X&ved=0ahUKEwiV64Lt4LDQAhUJN48KHRTbA9wQ6AEIOzAE#v=onepage&q=dhanraj%20master&f=false.
வெளி இணைப்புகள் தொகு
- இசை அமைப்பாளர்களின் துரோணர் தன்ராஜ் மாஸ்டர் பரணிடப்பட்டது 2020-11-23 at the வந்தவழி இயந்திரம்