மிக்ஜாம் புயல்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
மிக்ஜாம் புயல் (Cyclone Michaung) என்பது வங்கக் கடலில் உருவாகிய புயலைக் குறிக்கும். வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், டிசம்பர் 3 அன்று புயலாக வலுப்பெற்றது. டிசம்பர் 5 அன்று பகல் வேளையில் நெல்லூருக்கும் மச்சிலிப்பட்டணத்துக்கும் இடையே கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 80 முதல் 90 கி.மீ வேகத்துடன் காற்று வீசியது.[1]
திசம்பர் 4 அன்று மிக்ஜாம் புயல் | |
வானிலை வரலாறு | |
---|---|
தோற்றம் | 1 திசம்பர் 2023 |
கலைவு | 6 திசம்பர் 2023 |
ஒட்டுமொத்த விளைவுகள் | |
இறப்புகள் | 17 |
பாதிக்கப்பட்ட பகுதிகள் | இந்தியா (குறிப்பாக தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்) |
பகுதி: 2023 வட இந்தியப் பெருங்கடல் சூறாவளிப் பருவம் |
பாதிப்புகள்
தொகுகடலோர மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகியவற்றில் மிகக் கனமழை பெய்தது.[2] இதன் காரணமாக சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள புறநகரப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. சென்னையின் முக்கிய ஆறுகளான கூவம், கொசஸ்தலை ஆறு, அடையாறு ஆகியவற்றில் வெள்ளம் ஏற்பட்டு கரையோரப் பகுதிகள் நீர் சூழ்ந்தது. குறைந்தது 17 நபர்கள் பலியானர் மேலும் சுமார் 32,158 மக்கள் தமிழ்நாட்டிலும் 9,500 மக்கள் ஆந்திரப்பிரதேசத்திலும் வெளியேற்றப்பட்டனர்.[3] மழையின் காரணமாக நகரின் பல பகுதிகளுக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டது.[4]
சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் ஓடுபாதைகளில் நீர் சூழ்ந்ததால் டிசம்பர் 4 ஆம் நாள் முதல் டிசம்பர் 5 நாள் காலை வரை தனது பயணச் சேவையை நிறுத்தியது.[5] மேலும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலுள்ள கல்லூரி, பள்ளிகள் தொடர்ந்து சில நாட்கள் விடுமுறை அறிவித்தன.[6] தென்னக இரயில்வே மற்றும் கிழக்கு கடற்கரை தொடருந்து மண்டலம் ஆகியவற்றின் பல் வேறு தொடருந்துகள் நிறுத்தப்பட்டன.[7] சென்னையில் உள்ள தொழிற்பேட்டைகள், சிறு மற்றும் குறு தொழில்கள் வெள்ள நீராலும் மின்தடையாலும் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகின.[8] ஆந்திராவில் பல விளை நிலங்களும் பயிர்களும் இந்த புயலால் பாதிக்கப்பட்டன.[9]
வேளச்சேரியில் ஐந்து பர்லாங் சாலையில் டிசம்பர் 4 அன்று திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் அருகில் இருந்த எரிபொருள் நிறுவனப் பகுதிகளும் ஒரு புதிய கட்டுமானக் கட்டடமும் பள்ளத்தில் சிக்கின. அதில் கட்டுமானத் தொழிலாளர்கள் நான்கு நபர்கள் உட்பட ஐவர் சிக்கியிருந்த நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தீவிர புயலாகும் ‘மிக்ஜாம்’ சென்னையை நெருங்குகிறது: 4 மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்பு". தி இந்து (தமிழ்). 4 டிசம்பர் 2023. https://www.hindutamil.in/news/tamilnadu/1163152-severe-storm-michaung-approaches-chennai-heavy-rain-likely-in-4-districts-today-1.html. பார்த்த நாள்: 4 டிசம்பர் 2023.
- ↑ "Michaung cyclone: Heavy rains lash several district of Andhra Pradesh, schools declare holiday". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 4 December 2023 இம் மூலத்தில் இருந்து 5 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231205015842/https://timesofindia.indiatimes.com/city/visakhapatnam/michaung-cyclone-triggers-heavy-rains-in-tirupati-nellore-chittoor-and-few-other-districts-heavy-rains-continue-in-most-parts-of-the-state-schools-declared-holiday/articleshow/105723246.cms.
- ↑ "Chennai rain death toll rises to 17 as Cyclone Michaung makes landfall in Andhra Pradesh" (in en). இந்தியன் எக்சுபிரசு. 5 December 2023 இம் மூலத்தில் இருந்து 6 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231206121752/https://indianexpress.com/article/india/chennai-rain-death-toll-cyclone-michaung-landfall-andhra-9055801/.
- ↑ "Chennai still flooded, no power for third straight day, hundreds in relief camps" (in en). இந்தியா டுடே. 6 December 2023 இம் மூலத்தில் இருந்து 7 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231207055519/https://www.indiatoday.in/cities/chennai/story/cyclone-michaung-chennai-floods-power-cut-waterlogging-tamil-nadu-2472731-2023-12-06.
- ↑ "Cyclone Michaung: Heavy rains in southern India as storm makes landfall" (in en-GB). BBC. 4 December 2023 இம் மூலத்தில் இருந்து 5 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231205060038/https://www.bbc.com/news/world-asia-67617727.
- ↑ "Chennai airport runway flooded as Cyclone Michaung nears India". Reuters. 4 December 2023 இம் மூலத்தில் இருந்து 4 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231204222711/https://www.reuters.com/world/india/india-shuts-schools-offices-evacuates-thousands-cyclone-michaung-nears-2023-12-04/.
- ↑ "Cyclone Michaung: Southern Railway cancels train services". தி இந்து. 4 December 2023 இம் மூலத்தில் இருந்து 5 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231205005813/https://www.thehindu.com/news/national/tamil-nadu/cyclone-michaung-southern-railway-cancels-train-services/article67603712.ece.
- ↑ "Cyclone Michaung leaves Chennai businesses bruised". தி இந்து. 7 December 2023 இம் மூலத்தில் இருந்து 7 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231207132909/https://www.thehindubusinessline.com/news/national/cyclone-michaung-leaves-chennai-businesses-bruised/article67612045.ece.
- ↑ "Cyclone Michaung: Massive waterlogging in Chennai, Koovam River rages". Business Standard. 7 December 2023. https://www.business-standard.com/india-news/cyclone-michaung-massive-waterlogging-in-chennai-koovam-river-rages-123120500141_1.html.
- ↑ "வேளச்சேரி ராட்சத பள்ளத்தில் சிக்கிய ஒருவர் சடலமாக மீட்பு, இன்னொருவரை தேடும் பணி தீவிரம்". ஜீநியூஸ். பார்க்கப்பட்ட நாள் 9 December 2023.