மிசுடர். மகோரியம்சு வன்டர் எம்போரியம்

மிசுடர். மகோரியம்சு வன்டர் எம்போரியம், 2007-ம் ஆண்டு வெளியான அமெரிக்க ஆங்கில நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை சாக் எல்ம் எழுதி இயக்க, மேன்டேட் பிக்சர்சு, வால்டன் மீடியா. ரிச்சர்ட் என். கிளாட்சுடை‌ன் தயாரிக்க அல்க்சேண்டர் டெசுப்லாட்டும் ஆரோன் சிக்மென்னும் இசையமைத்திருந்தனர். டசுட்டின் ஆப்மேன், மாயசால பொம்மைகள் விற்கும் கடையை வைத்துள்ளார். நேடலி போர்ட்மன் அக்கடையின் ஊழியராக நடித்துள்ளார். சேசன் பேட்மன், கணக்காளராக அக்கடையில் வேலை பார்க்கிறார். சாக் மில்சு தொப்பி சேகரிப்பவராகவும் அக்கடையில் தன்னார்வலராகவும் உள்ளார். இத்திரைப்படம் 2007-ம் ஆண்டு நவம்பர் 16-ம் நாள் 20ஆம் சென்சுரி பாக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

மிசுடர். மகோரியம்சு வன்டர் எம்போரியம்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்சாக் எல்ம்
தயாரிப்புரிச்சர்ட் என். க்ளாட்சிடீன்
சேம்சு க்ராவென்டீ
கதைசாக் எல்ம்
கதைசொல்லிசாக் மில்சு
இசைஅலெக்சாண்ட்ரே டெசுபிளாட்
ஆரோன் சிக்மேன்
நடிப்புடசுடின் ஓப்மேன்
நேடலி போர்ட்மேன்
சேசன் பேட்மேன்
சாக் மில்சு
ஒளிப்பதிவுரோமன் ஓசின்
படத்தொகுப்புசப்ரினா ப்ளிசுகோ
கலையகம்மான்டாட்டே பிக்சர்சு
வால்டன் மீடியா
பிலிம்காலனி
விநியோகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்
(அமெரிக்கா)
ஐகான் புரொடக்சன்சு
(ஐக்கிய ராச்சியம்)
ரோடுசோ எண்டர்டெய்ன்மென்ட்
(ஆசுத்திரேலியா)
வெளியீடுநவம்பர் 16, 2007 (2007-11-16)
ஓட்டம்95 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்க நாடுகள்
மொழிஆங்கிலம்
மொத்த வருவாய்$69.5 மில்லியன்[1]

கதைச்சுருக்கம் தொகு

மாயாசால பொருட்களைக் கொண்ட ஒரு கடையினை வயதான எட்வார்ட் மகோரியம் என்றொருவர் நடத்துகிறார். அவர் தனக்கு 243 வயதென்றும் தனக்குப் பின் இக்கடையினை நடத்த அக்கடையின் ஊழியரும், பியானோ இசைக்கலைஞருமான மோலி மகோனி(நேடலி போர்ட்மன்) என்ற பெண்ணிடம் ஒப்படைக்கிறார். தன்னுடைய கணக்குகளை பார்த்துக்கொள்ள என்றி, என்றொரு கணக்காளரையும் பணிக்கு அமர்த்துகிறார். இவர்களுக்கு தினமும் அக்கடைக்கு வரும் எரிக் (சாக் மில்சு) என்ற சிறுவனும் உதவியாக இருக்கிறான்.

தான் இறப்பதற்கு முந்தைய நாள் அனைவரிடமும் இதுபற்றி கூறுகிறார் மகோரியம், அவர் கடையிலுள்ள அனைத்துப் பொருட்களும் சோகத்தில் மூழ்குவதால் அப்பொருட்களின் நிறங்களையும் மாற்றிக்கொள்கிறது. இறுதியாக மகோரியம் இறந்தபிறகு என்றி மாயாசாலங்களை நம்புவதும், மோலிக்கு நம்பிக்கை வருவதும் என இனிமையாக நிறைவுறுகிறது.

நடிப்பு தொகு

  • எட்வார் மகோரியமாக, டசுடின் ஓப்மேன்
  • மோலி மகோனேவாக நேடலி போர்ட்மன்
  • என்றி வெசுடனாக சேசன் பேட்மேன்
  • எரிக் ஆப்பிள்பாமாக சாக் மில்சு

தயாரிப்பு தொகு

மார்ச்சு 2006 முதல் சூன் 6, 2006 வரையிலும் ரொறன்ரோவில் தயாரிப்பு பணி நடைபெற்றது. இத்திரைப்படத்தின் பெயர் நியூ செர்சியிலுள்ள சாக்கின் உறவினரின் பெயரில் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. 1999-ற்குப்பிறகு பிரபலமான கெர்மிட் த ஃபுராக் உருவத்தின் வாயிலாக இத்திரைப்படத்திலும் அதைப் போன்ற பாத்திரம் இணைக்கப்பட்டது.

புதினம் தொகு

சூசேன் வெய்ன், என்பவரால் 2007-ம் ஆண்டு நாவலாக எழுதப்பட்டு வெளியானது இத்திரைப்படம்.[2][3]

வெளியீடு தொகு

மிசுடர். மகோரியம்சு வன்டர் எம்போரியம் திரைப்பட முன்னோட்டத்தில் நாடாலி போர்ட்மேனும் டசுடினும் கலந்துகொண்டனர். இதில் கிடைத்த பணத்தை பர்னார்டோ குழந்தைகள் காப்பகத்திற்கும் சில பிரித்தானிய நாடுகளிலுள்ள தொண்டு நிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட்டது.

வரவேற்பு தொகு

அமெரிக்காவில் நவம்பர் 16, 2007 அன்று வெளியான இத்திரைப்படம் சுமார் $9.6 மில்லியன் தொகையை 3,164 திரையரங்குகள் வாயிலாக முதல் வார இறுதியில் பெற்றது, பாக்சு ஆபிசுவில் 5-ம் இடத்தில் இருந்தது.[4] அமெரிக்காவில் சுமார் $32.1 மில்லியனும், பிறபகுதிகளில் $35.4 மில்லியன தொகையுமாக சேர்ந்து மொத்தமாக $67.5 மில்லியன் வருமானம் பெற்றது இத்திரைப்படம்.[1]

பல்வேறு தரப்பட்ட கருத்துகளை இத்திரைப்படம் பெற்றது. ரோட்டன் எக்சு தளத்தில் நன்றாக இல்லை எனவும்,[5] மெட்டாகிரிட்டிக் தளத்தில் நூற்றுக்கு நாற்பத்தி எட்டு மதிப்பெண்களும்,[6] பீர் டிராவர்சு இதனை 2007-ம் ஆண்டின் மோசமான திரைப்படமென்றும்,[7] குறிப்பிட்டிருந்தார். இது குழந்தைகளுக்கான படமென்று வில்லியம் அர்னால்டு தெரிவித்திருந்தார்.[8] மிக அதிகமான எதிர்மறை கருத்துகள் வந்தபோதும் இத்திரைப்படம் இரு விருதுகளை வென்றது.

பிற வடிவங்களில் தொகு

இத்திரைப்படம் குறுந்தகடுகளிலும், இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டுகளிலும், நீலக்கதிர் வட்டுகளிலும், 2008-ம் ஆண்டு மார்ச் 4-ம் நாள் வெளியானது.

விருதுகள் தொகு

விருதுகளும் பரிந்துரைகளும்
விருது வகை பரிந்துரைகள் முடிவு
கோல்டன் ட்ரைலர், ஐஎப்எம்சிஏ விருதும் இளைய நடிகர் விருதும் சிறந்த அசைவூட்டம்/குடும்ப திரைப்படம், சிறந்த அறிவியல் புனைவுக் கதைத் திரைப்படம் - முன்னனி இளைய நடிகர் அலெக்சான்ட்ரே தெசுப்ளாட், ஆரோன் சிக்மேன் மற்றும் சாக் மில்சு போட்டியாளர்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Mr. Magorium's Wonder Emporium (2007)". Box Office Mojo. IMDb. பார்க்கப்பட்ட நாள் March 10, 2015.
  2. Weyn, Suzanne (2007). Mr. Magorium's Wonder Emporium : magical movie novel. New York: Scholastic. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-439-91250-1. https://archive.org/details/mrmagoriumswonde00weyn. 
  3. "Mr. Magorium's Wonder Emporium". Goodreads. பார்க்கப்பட்ட நாள் March 10, 2015.
  4. "Mr. Magorium's Wonder Emporium (2007) – Weekend Box Office Results". Box Office Mojo. IMDb. பார்க்கப்பட்ட நாள் November 21, 2007.
  5. "Mr. Magorium's Wonder Emporium (2007)". Rotten Tomatoes. Flixter. பார்க்கப்பட்ட நாள் November 21, 2007.
  6. "Mr. Magorium's Wonder Emporium (2007)". Metacritic. CBS Interactive. பார்க்கப்பட்ட நாள் November 21, 2007.
  7. Travers, Peter (December 19, 2007).
  8. Arnold, William (November 15, 2007). "Gentle whimsy of Emporium will appeal to children – and win over their parents". Seattle Post-Intelligencer. SeattlePI.com. பார்க்கப்பட்ட நாள் March 5, 2008.

வெளி இணைப்புகள் தொகு

மிசுடர். மகோரியம்சு வன்டர் எம்போரியம்