மிசோ மக்கள்

மிசோ மக்கள் வடகிழக்கு இந்தியாவில் உள்ள மிசோரம் மாநிலத்தில் வாழும் மலைவாழ் பூர்வகுடி மக்கள் ஆவார். மிசோ மக்கள் திபெத்திய-பர்மிய மொழிக் குடும்பத்தின் மிசோ மொழியைப் பேசுகின்றனர். மிசோ மக்கள் இந்தியாவிலும்; மியான்மரிலும் ஏறந்த்தாழ 8.25 இலட்சம் பேர் வாழ்கின்றனர். பெரும்பானமையான மிசோ மக்கள் தங்கள் பழங்குடி பண்பாட்டுடன் கிறித்தவத்தின் பல பிரிவுகளை பின்பற்றுகின்றனர்.

மிசோ மக்கள்
பாரம்பரிய ஆடையில் மிசோ பழங்குடி இளம் பெண்கள்
மொத்த மக்கள்தொகை
ஏறத்தாழ 8,25,000[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மிசோரம், இந்தியா மற்றும் மியான்மர்
மொழி(கள்)
மிசோ மொழிஆங்கிலம்
சமயங்கள்
கிறித்தவம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
குகி மக்கள்  · சோ மக்கள்  · தேடியம் மக்கள்  · மாரா மக்கள்  · பினெய் மெனெசெ மக்கள்

மிசோ மக்கள் மிசோ ரால்டே, பைட், லாய், ஹ்மர், லூசி, மாரா மற்றும் தாடூ/குகி உட்பட பல குலங்களாகப் பிரிந்துள்ளனர். மிசோரம் மாநிலத்தைத் தவிர திரிபுரா, அசாம், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து போன்ற பிற மாநிலங்களில் மிசோ மக்கள் வசிக்கின்றனர். இந்தியாவிற்கு வெளியே உள்ள மிசோவின் பெரும்பான்மையான மக்கள் அண்டை நாடான பர்மாவின் சாகாயிங் பிராந்தியத்தில் எல்லைக்கு அப்பால் வாழ்கின்றனர்.

1959-60களில் மிசோரம் பகுதியில் ஏற்பட்ட பஞ்சத்திற்கு மிசோ மக்கள் அதிருப்தி அடைந்தனர். 1959இல் பஞ்ச நிவாரணத்திற்காக உருவாக்கப்பட்ட மிசோ தேசிய பஞ்ச முன்னணி மற்றும் 1961இல் நிறுவப்பட்ட மிசோ தேசிய முன்னணி என்ற புதிய அரசியல் அமைப்புகள் உருவாக்கப்பட்டது.[2] 1960களில் போராட்டங்கள் மற்றும் ஆயுதமேந்திய கிளர்ச்சிகளின் காலம், மிசோ தேசிய முன்னணி இந்தியாவில் இருந்து சுதந்திரம் கோரியது.[3]

1971ஆம் ஆண்டில், மிசோ மலைப்பகுதியை இந்தியாவின் ஒன்றியப் பிரதேசமாக மாற்ற இந்திய அரசு ஒப்புக்கொண்டது. 1986இல் இந்திய அரசுக்கும், மிசோ தேசிய முன்னணிக்கும் இடையே மிசோ அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதன் அடிப்படையில், 1987இல் மிசோரம் இந்தியாவின் மாநிலமாக மாறியது.[4]

மிசோ மக்கள் வரலாற்று ரீதியாக திபெத்திய-பர்மிய மொழிக் குடும்பத்தின் மிசோ மொழியைப் பேசுகிறார்கள். ஆனால் அதிகாரப்பூர்வமான மற்றும் மிகவும் பரவலாக பேசப்படும் டுஹ்லியன் மொழி, மிசோ குலங்களுக்கிடையில் ஒரு மொழியாக செயல்படுகிறது. மிசோரமில் மிசோ அல்லாதவர்கள் அதிகம் பயன்படுத்தப்படும் மொழி ஆங்கிலம் ஆகும். 90%க்கும் அதிகமான கல்வியறிவு விகிதங்களைக் கொண்ட மாநிலம் இந்தியாவிலேயே அதிக எழுத்தறிவு விகிதங்களைக் கொண்டுள்ளது.

சொற்பிறப்பியல்

தொகு

மிசோ என்ற சொல் இரண்டு மிசோ சொற்களிலிருந்து பெறப்பட்டது: மி மற்றும் சோ. மிசோவில் மி என்றால் "நபர்" அல்லது "மக்கள்" என்று பொருள். சோ என்ற சொல்லுக்கு, சோ என்றால் 'மேட்டு நிலம்', சோ எனில் "மலையடிவாரம்" அல்லது "உயர்ந்த மலைகளில் வாழும் மக்கள்" அல்லது "தொலைதூரப் பகுதிகளில்" என மொழிபெயர்க்கப்பட்டாலும், இந்த சொல் குறிப்பாக மிசோ இன உறுப்பினர்களைக் குறிக்கும்.

மிசோ என்பது இந்தியாவில் மிசோரம் (காலனித்துவ காலத்தில் லுஷாய் மலைகள்), மியான்மரில் உள்ள சின் மலைகள் மற்றும் வங்காள தேசத்தில் உள்ள சிட்டகாங் மலைகள் என அழைக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் துணைக்குழுக்களின் பரந்த இன வகைப்பாடு ஆகும். மிசோ என்பது பெரும்பாலும் மிசோரமில் வசிப்பவர்களைக் குறிக்கிறது. சோ குடும்பத்தின் பல துணைக்குழுக்களின் உறுப்பினர்கள் மிசோ வகையைச் சேர்ந்தவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[5]

மிசோ என்ற சொல் ஒட்டுமொத்த இனத்தை பெயரிட அடிக்கடி பயன்படுத்தப்பட்டாலும், இது ஹ்மர், ரால்டே, லூசி, மாரா, பைட், பாம், பாங், தாடூ, வைபே, காங்டே மற்றும் பியட் போன்ற பல்வேறு குலங்களைக் குறிக்கும் ஒரு குடைச் சொல்லாகும்.[6] இந்த குறிப்பிடப்பட்ட குலங்களின் குடையின் கீழ் பல கிளைமொழிகள் இன்னும் பேசப்படுகின்றன;[10] அவற்றில் சில மிசோ டவ்ங் (மிசோராமின் அதிகாரப்பூர்வ மொழி), ஹ்மார் மொழிகள், பைட் மொழிகள், லாய் மொழிகள், ரால்டே மொழி மற்றும் பாங் மொழிகளைப் பேசுகின்றனர்.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி மிசோரம் மாநில மக்கள் தொகை 10,97,206ஆகும். அதில் ஆண்கள் 555,339 மற்றும் பெண்கள் 5,41,867 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 976 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 89.27% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் மிசோ பட்டியல் பழங்குடியினர் 87.16% ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் கிறித்தவர்கள் 87.16%, இந்துக்கள் 2.75%, இசுலாமியர் 1.35% மற்றும் பௌத்தர்கள் 8.51%, ஆகவுள்ளனர். [7]பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது கிறிஸ்வத திருச்சபையினர் மிசோ மக்களை பல்வேறு கிறிஸ்தவப் பிரிவுகளில் மதம் மாற்றப்பட்டனர் மிசோரம் மாநிலத்தின் கிழக்கு மற்றும் தெற்கில் மியான்மர் மற்றும் மேற்கில் வங்காளதேசம், வடக்கில் மணிப்பூர் மற்று அசாம் எல்லைகளாக கொண்ட இம்மாநிலத்தில் மிசோ மொழி மற்றும் ஆங்கிலம் பேசும் மிசோ மக்கள் வாழ்கின்றனர். மிசோ மக்களை இந்திய அரசு பட்டியல் பழங்குடிகள் சமூகத்தினர் பிரிவில் வைத்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடும் வழங்குகிறது.

சமயம்

தொகு

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிக்கு முன்னர் மிசோ மக்கள் முன்னோர்களையும், ஆவிகளையும், இயற்கை சக்திகளையும் வணங்கினர். வடகிழக்கு இந்தியாவை கைப்பற்றிய பிரித்தானிய இந்தியா ஆட்சியின் போது கிறிஸ்தவ திருச்சபையினர், 98% பழங்குடி மிசோ மக்களை கிறிஸ்தவ சமயத்திற்கு மதம் மாற்றினர்.தற்போது கிறிஸ்தவம் தழுவிய மிசோ மக்கள் பல்வேறு கிறிஸ்தவ திருச்சபைகளில் வழிபாடு நடத்துகின்றனர்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "Statement 1: Abstract of speakers' strength of languages and mother tongues – 2011". www.censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 1 April 2022.
  2. Kumāra, Braja Bihārī (1 சனவரி 1998). Small States Syndrome in India. Concept. p. 75. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7022-691-8. Archived from the original on 31 திசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 28 ஆகத்து 2013.
  3. Dommen, A. J. (1967). Separatist Tendencies in Eastern India. Asian Survey, Vol. 7, No. 10 (Oct. 1967), 726-739
  4. Stepan, Alfred; Linz, Juan J.; Yadav, Yogendra (2011). Crafting State-Nations: India and Other Multinational Democracies. Johns Hopkins University Press. p. 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-9723-8. Archived from the original on 31 December 2013. பார்க்கப்பட்ட நாள் 28 August 2013.
  5. van Schendel, Willem (2002). "Geographies of knowing, geographies of ignorance: Jumping scale in Southeast Asia". Environment and Planning D: Society and Space 20 (6): 653 (note 13). doi:10.1068/d16s. https://www.researchgate.net/publication/254901953. பார்த்த நாள்: 16 April 2022. 
  6. KHAWTINKHUMA, VANTHUAMA. "MEMORANDUM SUBMITTED TO HIS MAJESTY'S GOVERNMENT BY MIZO UNION". ZOLENTHE.NET. Archived from the original on 7 பெப்பிரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 17 ஆகத்து 2012.
  7. Mizoram Population | Sex Ratio | Literacy Census 2011
  8. Kima (17 October 2007). "Chp 149. Mizoram: The Denominations". Blogger. பார்க்கப்பட்ட நாள் 17 August 2012.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசோ_மக்கள்&oldid=3773162" இலிருந்து மீள்விக்கப்பட்டது