மிச்சிகன் வோமின் இசை விழா

பெண்ணிய இசைத் திருவிழா

மிச்சிகன் வோமின் இசை விழா ( Michigan Womyn's Music Festival ) பெரும்பாலும் மிக்பெஸ்ட் என குறிப்பிடப்படும்[1] இது ஓர் பெண்ணியப் பெண்கள் இசை விழாவாகும். இது 1976 முதல் 2015 வரை மிச்சிகனில் உள்ள ஓசியானா கவுண்டியில், ஹார்ட் டவுன்ஷிப் அருகே தனியாருக்குச் சொந்தமான வனப்பகுதியில் "தி லேண்ட்" என்று குறிப்பிடப்படும் அமைப்பாளர்களாலும் மற்றும் பங்கேற்பாளர்களாலும் நடத்தப்படுகிறது.[2][3] பிரத்தியேகமாக இந்த நிகழ்வில் பெண்கள், சிறுவர்/சிறுமிகள் மற்றும் சிறு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர்.[4][5][2]

மிச்சிகன் வோமின் இசை விழா
வகைபெண்கள் இசைவிழா
நாள்ஆகஸ்ட்
அமைவிடம்(கள்)ஹார்ட் டவுன்ஷிப், மிச்சிகன்
இயக்கத்திலுள்ள ஆண்டுகள்1976–2015
வலைத்தளம்
https://www.michfest.com (MWMF Archive)

1991 முதல், திருவிழாவில் திருநங்கைகளை அனுமதிப்பதில்லை என்ற கொள்கை வகுக்கப்பட்டது.[6] இது அதிகளவில் விமர்சனங்களை ஈர்த்தது. 1990களில் கேம்ப் டிரான்ஸ் நிறுவனம் அதன் விலக்கு கொள்கைக்காக திருவிழாவில் மறியல் செய்தது. நங்கை, நம்பி, ஈரர், திருனர் ஆகியோரின் வழக்கறிஞர்கள் குழுவான சமத்துவ மிச்சிகன் என்ற அமைப்பு 2014 இல் நிகழ்வைப் புறக்கணித்தது. மிக்பெஸ்ட் மனித உரிமைகள் பிரச்சாரம், அமெரிக்க அரசு சாரா ஊடக கண்காணிப்பு அமைப்பான கிளாட்,[7] நேர்பாலீர்ப்பாளர்கள் உரிமைகளுக்கான தேசிய மையம் மற்றும் தேசியப் பணிக்குழு[7] போன்றவற்றில் இருந்து விமர்சனங்களைப் பெற்றது. திருவிழா அதன் இறுதி நிகழ்வை ஆகஸ்ட் 2015 இல் நடத்தியது[8][9]

வரலாறு

தொகு

அமெரிக்காவில் சாக்ரமெண்டோ மாநிலம் மற்றும் சான் டியாகோ மாநில பல்கலைக்கழக வளாகங்களில் ஒரு நாள் விழாக்கள், மிசோரியில் மத்திய மேற்கு பெண்கள் விழா, பாஸ்டன் பெண்கள் இசை விழா மற்றும் அர்பானா-சாம்பேனில் உள்ள இல்லினொய்சு பல்கலைக்கழகத்தில் தேசிய பெண்கள் இசை விழா போன்ற முதல் பெண்கள் இசை விழாக்கள் 1970 களின் முற்பகுதியில் நிறுவப்பட்டன. பெண்கள்-மட்டும் கலந்து கொள்ளும் பிராந்திய நிகழ்வுகள் பார்வையாளர்களை பெண்ணிய மற்றும் வெளிப்படையாக நேர்பாலீர்ப்பு கலைஞர்களுக்கு வெளிப்படுத்தியது. அவர்களில் பெரும்பாலோர் சுயாதீனமாக இயங்கினர். 1970 களின் முற்பகுதியில் நேர்பாலீர்ப்பாளர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் சில வாய்ப்புகளை நகர்ப்புற விடுதிகள், காப்பி கடைகள் போன்ற இடங்களில் இத்திருவிழாக் கூட்டங்கள் வழங்கின.[10]

மிக்பெஸ்ட் அதன் 40வது ஆண்டு விழாவை 2015 இல் கொண்டாடியது. ஏப்ரல் 21 அன்று, லிசா வோகல் முகநூல் வழியாக இது கடைசி திருவிழாவாக இருக்கும் என்று அறிவித்தார்.[8]<

செயல்பாடுகள் மற்றும் சேவைகள்

தொகு

மிக்பெஸ்டில் 3,000 முதல் 10,000 பேர் வரை கலந்து கொள்கின்றனர்.[11] பெண்கள் மேடைகளைக் கட்டி, விளக்குகள் மற்றும் ஒலி அமைப்புகளையும் இயக்குவர். திறந்தவெளி அடுப்புகளில் ஆயிரக்கணக்கானோருக்கு உணவு சமைத்து வழங்குவர். குழந்தை பராமரிப்பு மற்றும் பல்வேறு ஆர்வமுள்ள தலைப்புகளை உள்ளடக்கிய பட்டறைகளையும் நடத்துவார்கள்.[12]

மேற்கோள்கள்

தொகு
  1. Edwalds, Loraine; Stocker, Midge, eds. (1995). The Woman-Centered Economy: Ideals, Reality, and the Space in Between (1st ed.). Chicago: Third Side Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1879427167.
  2. 2.0 2.1 "General Festival Information". Michigan Womyn's Music Festival. 2001. Archived from the original on 1 August 2001. பார்க்கப்பட்ட நாள் 6 April 2019.
  3. Fish Without A Bicycle (23 April 2014). "Love from the Land - A love letter from the Michigan Womyn's Music Festival". Archived from the original on 7 July 2014. பார்க்கப்பட்ட நாள் 28 June 2014 – via YouTube.
  4. Odahl-Ruan, Charlynn; McConnell, Elizabeth; Shattell, Mona; Kozlowski, Christine (June 15, 2015). "Empowering Women through Alternative Settings: Michigan Womyn's Music Festival". Global Journal of Community Psychology Practice 6 (1). doi:10.7728/0601201503. பன்னாட்டுத் தர தொடர் எண்:2163-8667. https://www.gjcpp.org/en/article.php?issue=19&article=105. பார்த்த நாள்: May 25, 2018. 
  5. Cox, Susan (August 5, 2016). "Women grieve the loss of Michfest online, look forward to new gatherings". Feminist Current. Archived from the original on 7 May 2018. பார்க்கப்பட்ட நாள் 25 May 2018.
  6. Vogel, Lisa (April 11, 2013). "Letter to the Community". Michigan Womyn's Music Festival. Archived from the original on March 30, 2015.
  7. 7.0 7.1 "GLAAD President/CEO Sarah Kate Ellis and wife pen op-ed supporting trans inclusion at Michfest". GLAAD. August 8, 2014. Archived from the original on December 1, 2017. பார்க்கப்பட்ட நாள் July 16, 2017.
  8. 8.0 8.1 Michigan Womyn's Music Festival, Lisa Vogel (April 21, 2015). "Dear Sisters, Amazon, Festival family". Facebook. Archived from the original on 2022-02-26. பார்க்கப்பட்ட நாள் 22 February 2018.
  9. Brownworth, Victoria A. (April 23, 2015). "Michigan Womyn's Music Festival to End after 40 Years". Curve. Archived from the original on 29 January 2020. பார்க்கப்பட்ட நாள் 19 June 2019.
  10. Levy, Ariel (February 22, 2009). "Lesbian Nation". The New Yorker. Archived from the original on June 14, 2018. பார்க்கப்பட்ட நாள் April 10, 2019.
  11. Core, Lindsay (August 30, 2009). "How the Michigan Womyn's Music Festival's Topless Womyn Changed My Lesbian Life Forever". Autostraddle இம் மூலத்தில் இருந்து September 2, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090902101601/http://www.autostraddle.com/how-the-michigan-womyns-music-festivals-topless-womyn-changed-my-lesbian-life-forever/. 
  12. Messman-Rucker, Ariel (September 21, 2009). "Welcome Home to the Michigan Womyns Festival". Curve. Archived from the original on March 20, 2012. பார்க்கப்பட்ட நாள் February 22, 2012.

வெளி இணைப்புகள்

தொகு