மிச்சியாகி தகாகாசி
மிச்சியாகி தகாகாசி (Michiaki Takahashi) (பிப்ரவரி 17, 1928 - திசம்பர் 16, 2013) ஒரு யப்பானிய நச்சுயிரியல் வல்லுநர் ஆவார். இவர் சின்னம்மைகாக முதல் தடுப்பூசியைக் கண்டுபிடித்ததற்காகவும், ஓகா தடுப்பூசியைத் தயாரிக்க வெரிசெல்லா ஜோஸ்டர் வைரஸைக் குறைக்கவும் பாடுபட்ட மிகவும் பிரபலமானவர்.
மிச்சியாகி தகாகாசி | |
---|---|
பிறப்பு | யுசாட்டோ, ஒசாகா, யப்பான் | பெப்ரவரி 17, 1928
இறப்பு | திசம்பர் 16, 2013 ச்யிட்டா, ஒசாகா மாநிலம், யப்பான் | (அகவை 85)
கல்வி |
|
பணி | நச்சுயிரியல் வல்லுநர் |
மருத்துவப் பணிவாழ்வு | |
களம் | மருத்துவம் |
நிறுவனங்கள் | நுண்ணுயிர் நோய்களுக்கான ஆராய்ச்சி நிறுவனம், ஒசாகா பல்கலைக்கழகம் |
சிறப்புத்துறை | நச்சுயிரியல் வல்லுநர் |
ஆய்வு | சின்னம்மை |
வாழ்க்கை
தொகுபிப்ரவரி 17, 1928 இல் யப்பானின் ஒசாகாவில் உள்ள ஹிகாஷிசுமியோஷி-குவில் பிறந்தார். [1] 1954-இல் ஒசாக்கா பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியில் மருத்துவத்தில் தனது முது நிலைப் படிப்பைப் பெற்றார். மேலும் 1959-இல் அம்மை நச்சுரியியலில் முதன்மையாக மருத்துவ அறிவியல் பட்டப் படிப்பை முடித்தார். [2]
1963 -1965-க்கும் இடையில் இவர் டெக்சஸில் உள்ள பேய்லர் மருத்துவக் கல்லூரியிலும், பென்சில்வேனியாவில் உள்ள டெம்பிள் பல்கலைக்கழகத்தின் பெல்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்திலும் படித்தார்.[3]
அமெரிக்காவில் படிக்கும் போது இவரது மூத்த மகன் தெருயுகி சின்னம்மை நோயால் அவதிப்படுவதைப் பார்த்த அனுபவம் இவரை 1971-இல் சின்னம்மை தடுப்பூசியை உருவாக்கத் தூண்டியது. ஆராய்ச்சி மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் 1973 இல் முடிக்கப்பட்டது. 1984-ஆம் ஆண்டில், தடுப்பூசி உலக சுகாதார அமைப்பால் மிகவும் பொருத்தமான சின்னம்மை தடுப்பூசி என சான்றளிக்கப்பட்டது. மேலும் 1986-ஆம் ஆண்டில், யப்பானிய சுகாதார மற்றும் நல அமைச்சகம் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் நடைமுறை பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தது.[1]
ஒசாகா பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இவருக்கு ஓய்வு பெற்ற பேராசிரியர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.[4]
இவர் திசம்பர் 16, 2013 அன்று இதய செயலிழப்பால் இறந்தார்.[5][1]
விருதுகள்
தொகுகௌரவங்கள்
தொகுதடுப்பூசிக்கான யப்பானிய சங்கம் தகாகாசியின் நினைவாக வருடாந்திர பரிசை வழங்குகிறது [7] தடுப்பூசிக்கான யப்பானிய சங்கம் தகாகாசி பரிசு, அக்டோபர் 2005 இல் நிறுவப்பட்டது.
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Yardley, William (22 December 2013). "Michiaki Takahashi, 85, Who Tamed Chickenpox, Dies". The New York Times. https://www.nytimes.com/2013/12/22/health/michiaki-takahashi-85-who-tamed-chickenpox-dies.html.
- ↑ Artenstein, Andrew W. (11 December 2009). Vaccine development. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781441911087.
- ↑ 3.0 3.1 Artenstein, Andrew W. (11 December 2009). Vaccines: A Biography (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 267. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4419-1108-7.
- ↑ Takahashi, Dr. Michiaki (November 1998). "Dedication". The Journal of Infectious Diseases 178 (s1): Siii–iii. doi:10.1086/514252. https://academic.oup.com/jid/article/178/Supplement_1/Siii/922904.
- ↑ "訃報:高橋理明さん85歳=大阪大名誉教授、ウイルス学" (in Japanese). Mainichi Shimbun. Archived from the original on December 19, 2013. பார்க்கப்பட்ட நாள் December 19, 2013.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 6.0 6.1 日本人名大辞典+Plus, ブリタニカ国際大百科事典 小項目事典,デジタル版. "高橋理明とは". コトバンク (in ஜப்பானியம்).
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "高橋賞" (in Japanese). The Japanese Society for Vaccinology website. பார்க்கப்பட்ட நாள் December 19, 2013.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)