மிடல்பர்க் கொத்தளம்
மிடல்பர்க் கொத்தளம் அல்லது மலாக்கா மிடல்பர்க் கொத்தளம் (டச்சு மொழி: Middelburg, Zeeland; ஆங்கிலம்: Middelburg Bastion; மலாய்: Kubu Middelburg; சீனம்: 米德尔堡堡垒) என்பது மலேசியா, மத்திய மலாக்கா மாவட்டம், மலாக்கா மாநகரில் உள்ள மலாக்கா கோட்டையின் ஒன்பது கொத்தளங்களில் ஒன்றாகும்.
மிடல்பர்க் கொத்தளம் Kubu Middelburg Middelburg Bastion | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
வகை | கொத்தளம் |
இடம் | மலாக்கா மாநகரம், மலாக்கா, மலேசியா |
ஆள்கூற்று | 2°11′38.8″N 102°14′53.3″E / 2.194111°N 102.248139°E |
நிறைவுற்றது | 1660 |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தளப்பரப்பு | 0.09 எக்டர் |
இந்தக் கொத்தளம் மலாக்கா ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது.[1] பீரங்கிகளுடன் கூடிய இந்தக் கொத்தளம் 2006-ஆம் ஆண்டில் மீட்டெடுக்கப்பட்டு பார்வையாளர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது.[2]
வரலாறு
தொகு1641-ஆம் ஆண்டு போர்த்துகீசியர்களுக்கும் இடச்சுக்காரர்களும் இடையே மலாக்காவில் ஒரு போர் நடந்தது. அதற்கு மலாக்கா போர் என்று பெயர். அந்தப் போரில் போர்த்துகீசியர்கள் தோல்வி அடைந்தார்கள். ஆ பாமோசா கோட்டையை டச்சுக்காரர்கள் கைப்பற்றிதும், கோட்டையின் வெளிப்புறச் சுவர்களின் சில இடங்கள் பலப்படுத்தப்பட்டன.
இருப்பினும், 1807-இல், மலாக்காவிற்கு வந்த பிரித்தானியர்கள், எஞ்சியிருந்த பெரும்பாலான கோட்டைப் பகுதிகளை அழித்து விட்டார்கள். போர்ட்டா டி சந்தியாகோ எனும் நுழைவாயிலும்; மிடல்பர்க் கொத்தளத்தின் நடுப்பகுதிகள் மட்டுமே இன்றைய வரையில் எஞ்சியுள்ளன.
2006-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மலாக்கா நகரத்தில் 110 மீட்டர் சுழலும் கோபுரம் கட்டும் போது, மிடல்பர்க் கொத்தளத்தின் ஒரு பகுதி தற்செயலாகச் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், இந்தக் கொத்தளம் புனரமைப்பு செய்யப்பட்டது. தற்போது மலாக்கா வரலாற்றின் ஒரு நினைவுச் சின்னமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ De Witt, Dennis (2010). Melaka from the Top. Subang Jaya: Nutmeg Publishing. p. 80. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-983-43519-2-2. பார்க்கப்பட்ட நாள் 16 September 2020.
- ↑ Weebers, R.C.; Ahmad, Y. (2014). "Interpretation of Simon Stevin's ideas on the Verenigde Oostindische Compagnie (United East Indies Company) settlement of Malacca". Planning Perspectives 29 (4): 543-555. doi:10.1080/02665433.2014.943676. https://geneagraphie.com/histories/Simon%20Stevin's%20-%20Malacca.pdf. பார்த்த நாள்: 16 September 2020.
மேலும் படிக்க
தொகு- De Witt, Dennis (2010). Melaka from the Top. Malaysia: Nutmeg Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-983-43519-2-2.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Middelburg Bastion தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Tourism Malaysia - St.Paul's Hill
- Description of the fort during English rules by Hikayat Abdullah.