மிதாலி விரைவுவண்டி

மிதாலி விரைவுவண்டி (Mitali Express)(வங்காள மொழி: মিতালী এক্সপ্রেস) என்பது ஒரு பன்னாட்டு விரைவு தொடருந்து சேவையாகும். இது இந்திய இரட்டை நகரங்களான ஜல்பைகுரி மற்றும் சிலிகுரியை வங்காளதேசம் தலைநகர் டாக்காவுடன் இணைக்கும் வாராந்திர விரைவு வண்டியாகும். இது இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்திற்கும் வங்காளதேசத்திற்கும் இடையிலான மூன்றாவது நவீன முழுவதும் குளிரூட்டப்பட்ட பயணிகள் ரயில் இணைப்பாகும். புதிய 513 என எண்ணிட்ட தொடருந்து பத்து பெட்டிகள் கொண்டதாக உள்ளது. இடைநில்லா பயணிகள் ரயிலை இரு அண்டை நாடுகளின் பிரதமர்கள் இருவரும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தனர். வங்காளதேசம் தனது சுதந்திரத்தின் பொன்விழாவைக் கொண்டாடிய நாளான 26 மார்ச் 2021 அன்று டாக்காவிலிருந்து இந்தியப் பிரதமர் தொடங்கி வைத்தார். 56 ஆண்டுகளுக்குப் பிறகு நிறுத்தப்பட்ட, இந்த ரயில் சேவை இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையில் முந்தைய சிலிகுரி பாதையில் மீண்டும் தொடங்கியது.[2] மிதாலி விரைவுவண்டி ரயிலுக்குப் பயணச்சீட்டு வாங்குவதற்கு முன்னதாகவே செல்லுபடியாகும் கடவுச்சீட்டு மற்றும் அயல்நாட்டு நுழைவுச் சீட்டு தேவை. வங்கதேசம் டாக்காவில் உள்ள கண்டோன்மென்ட் தொடருந்து நிலையத்திலும், இந்தியாவின் சிலிகுரியில் உள்ள புது ஜல்பைகுரி ரயில் நிலையத்திலும் பயணச்சீட்டுகள் கிடைக்கின்றன.[3]

மிதாலி விரைவுவண்டி
கண்ணோட்டம்
வகைகுளிர்சாதன விரைவுவண்டி
முதல் சேவை27 மார்ச்சு 2021; 3 ஆண்டுகள் முன்னர் (2021-03-27)
நடத்துனர்(கள்)வங்காளதேச இரயில்வே, இந்திய இரயில்வே
வழி
தொடக்கம்புது ஜல்பாய்குரி தொடருந்து நிலையம் (NJP)
இடைநிறுத்தங்கள்3 (தொழில்நுட்ப நிறுத்தம் மட்டும்)
முடிவுடாக்கா கண்டோன்மெண்ட்
ஓடும் தூரம்524 km (326 mi)[1]
சராசரி பயண நேரம்11 மணி 20 நிமிடம்
சேவைகளின் காலஅளவுவாரம் இருமுறை
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)உயர் ரக வகுப்பு
குளிரூட்டப்பட்ட உட்காரும் வசதியுடையப் பெட்டி (CC)
இருக்கை வசதிஆம்
படுக்கை வசதிஆம்
உணவு வசதிகள்ஆம்
காணும் வசதிகள்LHB rake
பொழுதுபோக்கு வசதிகள்இல்லை
தொழில்நுட்பத் தரவுகள்
பாதைஅகலப் பாதை1,676 mm (5 ft 6 in)
வேகம்45.19 km/h (28.08 mph) நிறுத்தங்களுடன்
வழிகாட்டுக் குறிப்புப் படம்
கி.மீ.
Head station
0.0 புது ஜல்பாய்குரி தொடருந்து நிலையம்
End station
56.5.0 ஆல்திபரி
End station
66.9.0 சிலாகத்தி
End station
134.5.0 பார்பதிபூர்
End station
511.2.0 டாக்கா கண்டோன்மெண்ட்

வரலாறு

தொகு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, வங்காளதேசப் பிரதமர் சேக் அசீனாவுடன் இணைந்து 26 மார்ச் 2021 டாக்காவிலிருந்து காணொளிக் காட்சி மூலம் நியூ ஜல்பைகுரி முதல் டாக்கா மிதாலி விரைவுவண்டி ரயில் சேவையைக் கூட்டாகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். வங்கதேசம் சுதந்திரமடைந்து ஐம்பதாண்டுகளைக் கொண்டாடும் வகையில் பிரதமர் மோடி டாக்கா சென்றிருந்தார்.

பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் பிறந்த நூற்றாண்டு மற்றும் வங்காளதேச சுதந்திரத்தின் பொன்விழா (ஐம்பது ஆண்டுகள்) ஆகியவற்றை முன்னிட்டு இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டது.[1]

பெயரிடுதல்

தொகு

புதிய ரயிலுக்கு நான்கு வெவ்வேறு பெயர்களை வங்கதேச பிரதமரிடம் ரயில்வே அதிகாரிகள் முன்மொழிந்தனர். அவை மிதாலி, சம்ப்ரிதி, சுஹ்ரித் மற்றும் போந்து ஆகும். பிரதமர் சேக் அசீனா, மிதாலி என்ற பெயரைத் தேர்வு செய்தார். மைத்திரீ விரைவுவண்டி மற்றும் பந்தன் விரைவுவண்டி போன்று மிதாலி விரைவுவண்டிவங்காள மொழி பெயர் ஆகும். மிதாலி என்ற பெங்காலி வார்த்தைக்கு ஆங்கிலத்தில் நட்பு என்று பொருள் (வங்காள மொழி: বন্ধুত্ব)[4]

வழிப்பாதை

தொகு

இந்த ரயில் வங்காளதேசம் பக்கத்தில் உள்ள டாக்கா கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் தொடங்கி, பர்பதிபூர் மற்றும் சிலகத்தியில் நின்று பின்னர் ஹல்திபாரி எல்லையைக் கடக்கிறது. டாக்காவிற்கும் சிலஹாட்டிக்கும் இடையே உள்ள தூரம் 453 கி.மீ. ஆகும். சிலகத்தியிலிருந்து நியூஜல்பைகுரி 71 கி.மீ. தொலைவில் உள்ளது.[1] இந்தப் பகுதியிலிருந்து இந்தியாவுக்குப் பயணிக்கும் இந்த இரயிலில் பயணிகளுக்காக சில்ஹாட்டியில் இரண்டு கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படுகின்றன. பின்னர் இந்தியப் பகுதியைக் கடந்து, புதிய ஜல்பைகுரி ரயில் நிலையத்தை அடைவதற்கு முன் ஹல்திபாரியில் இந்த இரயில் நிறுத்தப்படுகிறது.[5]

ஜல்பைகுரி நகரக் தொடருந்து நிலையத்தை இந்தியப் பக்கத்தில் நிறுத்த முன்மொழியப்பட்ட கோரிக்கை சேர்க்கப்படவில்லை என்றாலும், ஜல்பைகுரியில் நிறுத்தப்பட வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கைகள் உள்ளன.

பயண காலம்

தொகு

இந்த தொடருந்து பயணம் துவக்கப்பட்டதிலிருந்து, வாரம் இருமுறைப் பயணமாக திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் டாக்கா கண்டோன்மென்ட்டிலிருந்தும், புது ஜல்பைகுரியிலிருந்து ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளிலும் இயக்கப்படுகிறது.[5]

தற்போதைய நேரங்கள்

தொகு
புதிய ஜல்பைகுரி முதல் டாக்கா வரை
ரயில் எண். நிலையம் வருகை புறப்பாடு மண்டலம்
13131 புது ஜல்பாய்குரி தொடருந்து நிலையம் 08:40 NFR
டாக்கா கண்டோன்மண்ட் 20:00 BR
டாக்கா முதல் நியூ ஜல்பைகுரி வரை
ரயில் எண். நிலையம் வருகை புறப்பாடு மண்டலம்
13132 டாக்கா கண்டோன்மண்ட் 07:25 BR
புது ஜல்பாய்குரி தொடருந்து நிலையம் 18:45 NFR

பெட்டிகள் அமைப்பு

தொகு

இந்த ரயிலில் 10 பெட்டிகள் உள்ளன. 4 குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 4 குளிரூட்டப்பட்ட உட்காரும் வசதியுடையப் பெட்டிகள், மற்றும் 2 இயந்திரப் பெட்டிகள்.[1]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிதாலி_விரைவுவண்டி&oldid=3760069" இலிருந்து மீள்விக்கப்பட்டது