செருப்பாழி
(மிதியல் செருப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாழி என்பது சங்ககால மலைக்காடுகளில் ஒன்று. ‘பாழிச்சிலம்பு’ என்னும் பெயர் இதனை உணர்த்துகின்றது. இது போர்க்களமாக விளங்கியதால் இதனைச் ‘செருப்பாழி’ என்றனர். ‘மிதியல் செருப்பு’ என்பது இதன் விளக்கப் பெயர். கொடைவள்ளல் நன்னன் இதன் அரசன். இவனது தலைநகர் 'பாரம்' என்னும் ஊர். இவனது படைத்தலைவன் பெயர் மிஞிலி. இவன் நன்னனுக்காகப் போரிட்டு எயினன், அதிகன் என்பவர்களைத் தனித்தனிப் போரில் கொன்றான். இந்த இருவரும் பறவைகளைப் பேணிய வள்ளல்கள்.
- வேளிர் மக்களின் கருவூலம்
- பாழி நகரில் அணங்கு என்னும் பூதக் கடவுள் காவல் புரிந்ததாம். அதனை நம்பிய வேளிர்குடி முதியோர் தாம் ஈட்டிய அரிய செலவ வளங்களை அவ்வூரில் மறைத்து வைத்திருந்தனர். [1]
- சேரர் ஆட்சி
- செருப்பாழி நாட்டைக் கைப்பற்றித் தனதாக்கிக்கொண்டதால் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்பவன் மிதியல் செருப்பின் பூழியர் கோ எனப் போற்றப்படுகிறான். (செருப்பு காலின் மிதில் இருக்கும். எனவே மிதியடி அல்லாத செருப்பு என்பது செருப்பாழி நகரைக் குறிக்கும் தொடர்) [2]
- சோழன் வெற்றி
- நன்னன் அரசனாவதற்கு முன் செருப்பாழி சேரர் ஆளுகைக்கு உட்பட்டிருந்த காலத்தில் இளஞ்சேட்சென்னி என்னும் சோழன் செருப்பாழி செருப்பாழி நகரைத் தாக்கி வென்றான். ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் இந்தச் சோழனைச் செருப்பாழிப் போர்களத்திலேயே நேரில் கண்டு பாடிப் பரிசில் பெற்றார். [3]
- நன்னன் ஆட்சி
- சுடர்ப்பூண் நன்னன் என்பவனின் பாழி-நகர் கட்டுக்காவல் மிக்கது. [4]
- மிஞிலி அதிகனைக் கொன்றது
- மயில்கள் மிகுதியாக வாழ்ந்த பாழிச்சிலம்பு பாரம் என்னும் ஊரில் இருந்துகொண்டு ஆண்ட ஆர-நன்னன் என்பவனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. [5]
- நன்னனின் படைத்தலைவன் மிஞிலி. இவன் பாழியைத் தாக்கிய அதிகன் என்பவனைப் பாழி நகரப் பேய்க்குக் காவு கொடுத்தான். [6]
- மிஞிலி எயினனைக் கொன்றது
- பொலம்பூண்-நன்னன் என்பவன் புன்னாட்டு ஆட்சியைத் தனதாக்கிக் கொண்டான். அதனை அந்நாட்டு மக்களுக்கு மீட்டுத் தருவதற்காக ஆஅய் எயினன் என்பவன் போரிட்டுத் தன் உயிரையே கொடுத்தான் [7]
- பாழிப்பறந்தலை என்னுமிடத்தில் நடந்த போரில் வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் என்பவனை மிஞிலி என்பவன் கொன்று வீழ்த்தினான். [8]