மித்ராசென் யாதவ்
மித்ராசென் யாதவ் (Mitrasen Yadav)(11 சூலை 1934 - 7 செப்டம்பர் 2015) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சமாஜ்வாதி கட்சியினைச் சார்ந்தவரும் ஆவார்.
மித்ராசென் யாதவ் | |
---|---|
உறுப்பினர்: 9வது, 12வது & 14வது மக்களவை & 7 முறை சட்டமன்ற உறுப்பினர், உத்தரப் பிரதேச சட்டமன்றம் | |
தொகுதி | பைசாபாத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பைசாபாத், ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியா | 11 சூலை 1934
இறப்பு | 7 செப்டம்பர் 2015 லக்னோ, உத்தரப்பிரதேசம், இந்தியா | (அகவை 81)
அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி |
துணைவர் | சியாம்காளி யாதவ் |
பிள்ளைகள் | 4, பேர் ஆனந்த் சென் |
As of 17 செப்டம்பர் 2006 மூலம்: [1] |
அரசியல்
தொகுமித்ராசென் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினராகத் தனது அரசியல் வாழ்க்கையினைத் 1966ல் தொடங்கினார். இவர் உத்தரப்பிரதேசத்தின் பிரபலமான தலைவர் ஆவார். மக்கள் இவரை பாபுஜி என்று அழைக்கிறார்கள். இவர் எப்போதும் ஏழைகளுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் போராடினார்.
1977-ல், மித்ராசென் யாதவ் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி வேட்பாளராக மில்கிபூர் தொகுதியிலிருந்து உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மீண்டும் மீண்டும் 1977, 1980, 1985 மற்றும் 2012 ஆண்டுகளில் நடைபெற்றத் தேர்தல்களில் பிகாபூரிலிருந்து உத்தரப் பிரதேச சட்ட சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1989ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில், மித்ராசென் யாதவ், பொதுவுடைமைக் கட்சி வேட்பாளராக பைசாபாத் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து 9வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மார்ச் 4, 1995 இல், இவர் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார். 1998-ல், அதே தொகுதியிலிருந்து சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக 12வது மக்களவைக்குப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004-ல், மித்ராசென் மீண்டும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார். மேலும் 14வது மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2009ல் மீண்டும் சமாஜ்வாதி கட்சிக்குத் திரும்பினார்.
இறப்பு
தொகுமித்ராசென் யாதவ் செப்டம்பர் 7, 2015 அன்று காலை இறந்தார்.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Times of, India. "Times of India". Times of India. Coleman. பார்க்கப்பட்ட நாள் 7 September 2015.
- ↑ "सपा विधायक मित्रसेन यादव का निधन". Pradesh Today. Pradesh Today. Archived from the original on 2 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 7 September 2015.