மின்டி அகர்வால்

மின்டி அகர்வால், இந்தியாவின் அரியானா மாநிலத்தின் அம்பாலாவைச் சேர்ந்த இந்திய விமானப் படையின் பிரிவு தலைவரும், இந்திய விமானப் படையின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளருமாவார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் எல்லை பிரச்சனையின் போது இந்தியாவின் வான் பாதுகாப்பை வழிநடத்திய குழுவில் மின்டி இடம்பெற்றிருந்தார். மேலும் பாகிஸ்தானின் எப்-16 சண்டை ஃபால்கன் விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்ட அதிகாரியுமாவார். இவரது போர், மோதல்கள் அல்லது பகைமையின் போது உயர் வரிசையின் அளித்துள்ள சிறப்பான சேவையை அங்கீகரித்து, ஆகஸ்ட் 2019 ஆம் ஆண்டில், அங்கீகரிக்கப்பட்ட ஆயுதப் படை வீரர்கள் மற்றும் துணை ராணுவப் படைகளின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் முதன்மையான, யுத் சேவா பதக்கம், அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர், ராம் நாத் கோவிந்த் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவ்விருதைப் பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.[1] [2] [3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்டி_அகர்வால்&oldid=3680028" இலிருந்து மீள்விக்கப்பட்டது