மின்னணுக் குப்பை
மின்னணுக் குப்பை எனப்படுவது பயன்படுத்தப்படாமல் எறியப்படும் மின்சார மற்றும் மின்னணுக் கருவிகள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்களைக் குறிக்கும். இத்தகைய கருவிகள் பொதுவாக பழையதாகி கோளாறாகி விடுவதன் காரணமாகவோ அல்லது அவற்றை விட திறன்மிக்க கருவிகளைப் பயனர்கள் வாங்குவதாலோ இவை எறியப்படுகின்றன.
இவ்வாறு எறியப்படும் கருவிகள் பல நச்சுத்தன்மை கொண்ட பாகங்களைக் கொண்டுள்ளன. இவை சுற்றுச்சூழக்கு ஊறு விளைவிக்கின்றன. பாதரசம், காரீயம், போன்ற உலோகங்களை இவை கொண்டுள்ளன.
இவ்வாறு எறியப்படும் கருவிகள்:
- துவையல் எந்திரம் போன்ற பெரிய கருவிகள்
- மின்னலை அடுப்பு போன்றவை.
- மின்னணு இசைக்கருவிகள்,தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்குக்கருவிகள்
- கணினி மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்கள்
இந்தியாவில் மின்னணுக் கழிவுகள்
தொகுஐ.நா.சபை அறிக்கையின்படி மின்னணுக் கழிவுகள் பிரச்னையில் ஆசியாவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி இந்தியாவில் மின்னணுக் கழிவுகளை உருவாக்குவதில் மும்பை முதலிடத்திலும், இரண்டாம் இடத்தில் தமிழகமும் உள்ளன. மின்னணுக் கழிவுகளில் 5 சதவீதம் மட்டுமே முறையாக மறுசுழற்சி செய்யப்படுகிறது .[1]
தமிழகத்தில் மின்னணுக் கழிவுகள்
தொகு2011ஆம் ஆண்டு கணக்கின்படி தமிழகத்தில் மட்டும் 28,789 டன் மின்னணுக் கழிவுகள் சேர்ந்துள்ளது . இதில் கணினிக் கழிவுகள் மட்டும் 60 சதவீதம் என்றும் தெரியவந்துள்ளது.[1]
நோய்கள்
தொகுமின்னணுக் கழிவுகளில் தங்கம், வெள்ளி, செம்பு, அலுமினியம் உள்ளிட்ட உலோகப்பொருள்கள் கிடைப்பதால் காயலான் கடைக்காரர்கள் அவற்றின் மீது ஆர்வம் காட்டுகின்றனர். மின்னணுக் கழிவுகளை எரிப்பதால் வெளியாகும் டையாக்சின் நச்சுவாயு சுவாச நோய்களை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் காரீயம், குரோமியம், காட்மியம் உள்ளிட்ட வேதிப்பொருள்கள் வெளியாகின்றன. இவற்றால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.[1]
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- மின்னணுக் குப்பைகள் பற்றிய சீன வானொலிக் கட்டுரை பரணிடப்பட்டது 2007-08-23 at the வந்தவழி இயந்திரம்