மின்ஸ்க் ஒப்பந்தம்

மின்ஸ்க் ஒப்பந்தம் (Minsk Protocol) உக்ரைன் நாட்டின் கிழக்கில் உள்ள தொன்பாஸ் பிரதேசத்தை ருசியாவுடன் இணைப்பதற்கு, ருசியா ஆதரவு பெற்ற கிளர்ச்சிப் படைகளுக்கும், உக்ரைன் நாட்டின் அரசுப் படைகளுக்கும் 6 ஏப்ரல் 2014 முதல் போர் நடைபெற்று வருகிறது.[1] இப்போரை நிறுத்துவதற்கு, பிரான்சு நாட்டு அதிபர் பிரான்சுவா ஆலந்து மற்றும் ஜெர்மனி நாட்டு அதிபர் அங்கெலா மேர்க்கெல் தலைமையில், உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ, ருசியா அதிபர் விளாடிமிர் புடின். தொன்பாஸ் பிரிவினைவாதக் குழுத் தலைவர் ஆகியோர் பெலரஸ் நாட்டின் தலைநகரமான மின்ஸ்க் நகரத்தில் கலந்து பேசி 05 செப்டம்பர் 2014 அன்று எழுத்து மூலம் நெறிமுறைகள் வகுக்கப்பட்டது. தொன்பாஸ் போர் நிறுத்த நெறிமுறைகளை கடைபிடிக்க உக்ரைன், ருசியா மற்றும் தொன்பாஸ் பிரதேசப் பிரிவினைவாதிகள் குழு ஒத்துக்கொண்டு, ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.[2][3][4]

மின்ஸ்க் ஒப்பந்தம்
உக்ரைன் அதிபர் பி. போரோஷென்கோவின் அமைதித் திட்டத்தை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கூட்டு நடவடிக்கைகள் மற்றும் ருசியா அதிபர் விளாடிமிர் புடினின் முன்முயற்சிகள் தொடர்பான முத்தரப்பு குழுவின் ஆலோசனைகளின் முடிவுகளின் நெறிமுறைகள்
Map of the buffer zone established by the Minsk Protocol follow-up memorandum
அமைப்புதொன்பாஸ் போர்
கையெழுத்திட்டதுசெப்டம்பர் 5, 2014 (2014-09-05)
இடம்மின்ஸ்க், பெலருஸ்
மத்தியஸ்தர்கள்
மூலமுதலான
கையெழுத்திட்டோர்
மொழிகள்உருசிய மொழி
உக்ரைன் நாட்டின் தொன்பாஸ் பிரதேசம்
ருசியாவின் ஆதரவு கிளர்ச்சிப்படைகள் கைப்பற்றிய உக்ரைனின் கிழக்கின் தொன்பாஸ் மாகாணப் பகுதிகள் ( இளஞ்சிவப்பு நிறத்தில்), உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள தொன்பாஸ் மாகாணதின் பகுதிகள் (மஞ்சள் நிறத்தில்)

இந்த மின்ஸ்க் ஒப்பந்தப்படி, உக்ரைனின் தொன்பாஸ் பிரதேசத்தில், உருசிய ஆதரவு கிளர்ச்சிப் படைகள் கைப்பற்றிய பகுதிகளுக்கும், உக்ரைனின் பகுதிகளுக்கும் குறுக்கே 150 கிலோ மீட்டர் நீளத்திற்கு போர் அமைதி எல்லைக்கோடு வரையறுக்கப்பட்டது. மேலும் போர் அமைதி மண்டலத்தின் எல்லைக்கோட்டிற்கு 15 கிலோ மீட்டர் தொலைவு வரை 100 மிமீ பீரங்கி வண்டிகளை நிறுத்துவதற்கு அனுமதி இல்லை என உடன்பாடு ஏற்பட்டது.

மின்ஸ்க் போர் நிறுத்த ஒப்பந்த நெறிமுறைகளை மீறி தொன்பாஸ் பிரதேசத்தில் ருசிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து துப்பாக்கிச் சூடுகள் நடத்தின. இத்துப்பாக்கிச் சூட்டை நிறுத்த 12 பிப்ரவரி 2015 ஆண்டில் மின்ஸ்க் நகரத்தில் இரண்டாவது ஒப்பந்தம் போடப்பட்டது.[5] இந்த இரண்டவது மின்ஸ்க் ஒப்பந்தத்தையும் மீறி, ருசிய ஆதரவு கிளர்ச்சியாளர்களும், ருசிய நாட்டுப் படகளும் உக்ரைனின் தொன்பாஸ் பிரதேசம் முழுவதும் கைப்பற்ற பிப்ரவரி 2022-ஆம் ஆண்டு முதல் ருசியா போர் ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.[6]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. War in Donbas
  2. "Ukraine ceasefire agreement signed in Minsk". CCTV America. பார்க்கப்பட்ட நாள் 1 October 2014.
  3. Organization for Security and Co-operation in Europe(5 September 2014). "Chairperson-in-Office welcomes Minsk agreement, assures President Poroshenko of OSCE support". செய்திக் குறிப்பு.
  4. Organization for Security and Co-operation in Europe(15 September 2014). "OSCE Chief Monitor in Ukraine urges all sides to allow monitors to carry out duties safely". செய்திக் குறிப்பு.
  5. "Ukraine crisis: Leaders agree peace roadmap". BBC News. 12 February 2015. https://www.bbc.com/news/world-europe-31435812. 
  6. Is Russia going to invade Ukraine and what does Putin want?

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்ஸ்க்_ஒப்பந்தம்&oldid=3633730" இலிருந்து மீள்விக்கப்பட்டது