தொன்பாஸ் பிரதேசம் ( Donbas or Donbass), உக்ரைன் நாட்டின் கிழக்கில் அமைந்த பிரதேசம் ஆகும். இப்பிரதேசத்தில் தோனெத்ஸ்க் மாகாணம் மற்றும் லுகான்ஸ்கா மாகாணம் அமைந்துள்ளது. இப்பிரதேசத்தின் பெரிய நகரம் தோனெத்ஸ்க் நகரம் ஆகும். தொன்பாஸ் பிரதேசத்தின் கிழக்கில் உருசிய மொழி பேசுபவர்கள் அதிகம் உள்ளனர். எனவே இப்பகுதியை உருசியா நாட்டுடன் இணைக்க வலியுறுத்தி 2014-ஆம் ஆண்டு முதல் ருசிய ஆதரவு பெற்ற பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள் ஆயுதப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஆயுதப் போராட்டக் கிளர்ச்சியாளர்களுக்கு உருசியா ஆயுதங்கள் வழங்கி வருகிறது. தற்போது இப்பிரதேசத்தின் ருசியாவை ஒட்டிய கிழக்குப் பகுதிகள் பிரிவினைவாதிகள் கையில் உள்ளது.[1][2][3]

உக்ரைன் நாட்டின் கிழக்கில் தொன்பாஸ் பிரதேசம் (பழுப்பு நிறத்தில்)

மக்கள் தொகை பரம்பல் & அரசியல்

தொகு
 
2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, உருசிய மொழி பெரும்பான்மையாகப் பேசும் மாவட்டங்கள் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.

2001-ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தொன்பாஸ் பிரதேசத்தில் உள்ள லுஹான்ஸ்க் மாகாணத்தில் 58% மக்களும் மற்றும் தோனெத்ஸ்க் மாகாணத்தில் 56.9% மக்களும் உக்ரேனிய மொழியை பேசுகின்றனர். மேலும் இவ்விரு மாகாணத்திலும் உருசிய மொழி பேசுபவர்கள் முறையே 39% மற்றும் 38.2% ஆகவுள்ளனர்.[4] தற்கால தொன்பாஸ் பிரதேசத்தில் உக்ரைனிய மொழி பேசுபவர்களை விட, உருசிய மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. [5]

சமயம்

தொகு

2016-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தொன்பாஸ் பிரதேசத்தில் கிழக்கின் பழமைவாத கிறித்துவர்கள் 50.6%, சமய நம்பிக்கை அற்றோர் 28.3% சாதாரன கிறித்துவர்கள் 11.9%, இசுலாமியர் 6%, சீர்திருத்த கிறித்துவர்கள் 2.5% மற்றும் இந்துக்கள் 0.6% ஆக உள்ளனர். பரணிடப்பட்டது 22 ஏப்பிரல் 2017 at the வந்தவழி இயந்திரம்

பொருளாதாரம்

தொகு

தொன்பாஸ் பிரதேசத்தில் நிலக்கரி[6] மற்றும் இரும்பு போன்ற உலோகச் சுரங்கங்கள் அதிகம் உள்ளது. எனவே இப்பிரதேசத்தில் கனரகத் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது.[7]

தொன்பாஸ் போர் (2014–தற்போது வரை)

தொகு
 
 
உக்ரைன் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள தொன்பாஸ் மாகாணதின் பகுதிகள் (மஞ்சள் நிறத்தில்) மற்றும் ருசியாவின் ஆதரவு கிளர்ச்சிப்படைகள் கட்டுபாட்டில் தொன்பாஸ் மாகாணப் பகுதிகள் (இளஞ்சிவப்பு நிறத்தில்)

உக்ரைன் நாடு, நேட்டோ இராணுவ அமைப்புடன் இணைய பல ஆண்டுகளாக முயன்று வருகிறது. இது தனது நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் என உருசியா கருதுவதால், உக்ரைனை நேட்டோ அமைப்புடன் இணையத் தடுக்கிறது. இதனால் ருசியா, உக்ரைன் நாட்டின் கிழக்கில் உள்ள தென் பாஸ் பிரதேசத்தின் வாழும் உருசிய மொழி பேசுவபர்களை தூண்டிவிட்டு பிரிவினைவாதப் போர் நடத்தி வருகிறது.

2014-ஆம் ஆண்டு முதல் தொன்பாஸ் பிரதேசத்தின், ருசியா எல்லையை ஒட்டிய கிழக்குப் பகுதிளில் வாழும் ருசிய மொழி பேசும் உக்ரேனிய பிரிவினைவாதப் படைகளுக்கும், உக்ரைன் அரசுப் படைகளுக்கும் போர் நடைபெற்றது. மின்ஸ்க் ஒப்பந்தப்படி தொன்பாஸ் பிரதேசத்தில் போர் மேகங்கங்ள் சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் பிப்ரவரி, 2022-ஆம் ஆண்டு முதல் ருசியா, உக்ரைன் மீது போர் தொடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Kitsoft. "Ministry of Foreign Affairs of Ukraine - Temporary Occupation of Territories in Donetsk and Luhansk Regions". mfa.gov.ua (in ஆங்கிலம்). Archived from the original on 2022-01-26. பார்க்கப்பட்ட நாள் 2022-01-26.
  2. Kitsoft. "Ministry of Foreign Affairs of Ukraine - 10 facts you should know about the Russian military aggression against Ukraine". mfa.gov.ua (in ஆங்கிலம்). Archived from the original on 2022-01-26. பார்க்கப்பட்ட நாள் 2022-01-26.
  3. "A Russian court document mentioned Russian troops "stationed" in eastern Ukraine. Moscow insists there are none". www.cbsnews.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-26.
  4. "About number and composition population of UKRAINE by data All-Ukrainian population census 2001 data". State Statistics Committee of Ukraine. 2004. Archived from the original on 17 December 2011.
  5. "Всеукраїнський перепис населення 2001 – English version – Results – General results of the census –& Linguistic composition of the population". 2001.ukrcensus.gov.ua.
  6. "Coal in Ukraine" (PDF). edu.ua. 2012. Archived from the original (PDF) on 2017-12-15. பார்க்கப்பட்ட நாள் 2013-07-23.
  7. "Donets'k Region – Regions of Ukraine – MFA of Ukraine". mfa.gov.ua. Archived from the original on 2019-09-08. பார்க்கப்பட்ட நாள் 2022-02-14.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Donbas
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொன்பாஸ்&oldid=3842768" இலிருந்து மீள்விக்கப்பட்டது