லுகான்ஸ்கா மாகாணம்
லுகான்ஸ்கா மாகாணம் (Luhansk Oblast) உக்ரைன் நாட்டின் கிழக்கில் உள்ள தொன்பாஸ் பிரதேத்தில் உருசியாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் இலுகன்சுக் நகரம் ஆகும். இம்மாகாணத்தை உருசியா ஆதரவு ஆயுதப் போராளிகளின் கைப்பிடியில் இருந்தது. 2022-ஆம் ஆண்டில் உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது, லுகான்ஸ்கா மாகாணத்தை உருசியா அரசு மட்டும் இறையான்மை கொண்ட இலுகன்சுக் மக்கள் குடியரசாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும் இதனை தலைநகரமாக சீவிரோடோனெட்ஸ்க் நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது.[9]
லுகான்ஸ்கா மாகாணம்
Луганська область | |
---|---|
லுகான்ஸ்கா மாகாணம் [1] | |
அடைபெயர்(கள்): உக்ரைனின் கிழக்கு நுழைவாயில்[2][3] dawn of Ukraine,[4][5][6] | |
ஆள்கூறுகள்: 48°55′N 39°01′E / 48.92°N 39.02°E | |
நாடு | உக்ரைன் |
நிறுவப்பட்ட நாள் | 3 சூன் 1938 |
தலைநகரம் | இலுகன்சுக் நகரம் |
அரசு | |
• ஆளுநர் | செர்கி ஹைதை [7] |
• லுகான்ஸ்க் மாகாணச் சட்டமன்றம் | 124 உறுப்பினர்கள் |
• Chairperson | வலேரிஜ் ஹொலென்கோ[8]) |
பரப்பளவு | |
• மொத்தம் | 26,684 km2 (10,303 sq mi) |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | ▼ 21,21,322 |
• தரவரிசை | 7-வது இடம் |
Demographics | |
• அலுவல் மொழி | உக்குரேனிய மொழி |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கத்திய ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கத்திய ஐரோப்பிய கோடை நேரம்) |
அஞ்சல் குறியீடு | 91-94 |
வட்டார குறியீடு | +380-64 |
ஐஎசுஓ 3166 குறியீடு | UA-09 |
வாகனப் பதிவு | BB |
மாவட்டங்கள் | 18 |
நகரங்கள் (மொத்தம்) | 37 |
• மண்டல நகரங்கள் | 14 |
நகர்புற குடியிருப்பு பகுதிகள் | 109 |
கிராமங்கள் | 792 |
FIPS 10-4 | UP14 |
இணையதளம் | loga.gov.ua |
புவியியல்
தொகுஉக்ரைன் நாட்டின் கிழக்கில் உள்ள் தொன்பாஸ் பிராந்தியத்தில் அமைந்த லுகான்ஸ்கா மாகாணம் 26,700 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. லுகான்ஸ்கா மாகாணம் வடக்கிலிருந்து தெற்காக 250 கிலோ மீட்டர் நீளமும்; கிழக்கிலிருந்து மேற்காக 190 கிலோ மீட்டர் நீளமும் கொண்டது. இம்மாகாணம் உருசியாவுடன் 746 கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
இம்மாகாணத்தின் வடக்கிலும், கிழக்கிலும் உருசியா நாடும், மேற்கில் கார்கிவ் மாகாணம், தெற்கில் தோனெத்ஸ்க் மாகாணம் எல்லைகளாக கொண்டுள்ளது.
வரலாறு
தொகுலுகான்ஸ்கா மாகாணத்தில் 90% மக்கள் உருசிய மொழி பேசுகின்றனர். 1991-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பொதுவாக்கெடுப்பில், 7016% லுகான்ஸ்கா மாகாண மக்கள், லுகான்ஸ்கா மாகாணம், உருசியாவின் ஆளுமையின் கீழ் இருப்பதை விரும்பினர். [10] லுகான்ஸ்கா மாகாணத்தின் உருசியர்கள் ஆதரவாளர்கள் நடத்திய உள்நாட்டுப் போருக்குப் பின் 83.86% மக்கள் லுகான்ஸ்கா மாகாணம், தன்னாட்சி கொண்ட குடியரசாக இருப்பதை விரும்பினர்.
8 ஏப்ரல் 2014 அன்று கிரிமியாவை உருசியா ஆக்கிரமிப்பு செய்து உருசியாவுடன் இணைத்துக் கொண்டது. அதே நேரத்தில் தொன்பாஸ் பிரதேசத்தில் உருசியாவில் ஆதரவால், இலுகன்சுக் மக்கள் குடியரசு மற்றும் தனியெத்சுக் மக்கள் குடியரசுகள் தோற்றுவிக்கப்பட்டது.2022-ஆம் ஆண்டில் உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது, இலுகன்சுக் மக்கள் குடியரசு மற்றும் தனியெத்சுக் மக்கள் குடியரசுகளுக்கு உருசியா அங்கீகாரம் வழங்கியது.
மாகாண ஆட்சிப் பிரிவுகள்
தொகுலுகான்ஸ்கா மாகாணம் 18 மாவட்டங்களும், 37 நகரங்களும், 109 நகர்புற குடியிருப்பு பகுதிகளும், 792 கிராமங்களும் கொண்டது.
மக்கள் தொகை பரம்பல்
தொகுலுகான்ஸ்கா மாகாணத்தில் உருசிய மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை 39.1%, உக்குரேனிய மொழி பேசுபவர்கள் 58% உள்ளனர். 2001-ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 68.8% மக்கள் தங்களை உருசியர்கள் என்றும், 30% மக்கள் தம்மை உக்ரைனியர்கள் என பதிவு செய்துள்ளனர்.
பொருளாதாரம்
தொகுஇம்மாகாணத்தில் நிலக்கரி சுரங்கங்கள், கனரக இயந்திரங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள், உலோகத் தொழிற்சாலைகள், வேதியல், பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Syvak, Nina; Ponomarenko, Valerii; Khodzinska, Olha; Lakeichuk, Iryna (2011). Veklych, Lesia (ed.). Toponymic Guidelines for Map and Other Editors for International Use (PDF). scientific consultant Iryna Rudenko; reviewed by Nataliia Kizilowa; translated by Olha Khodzinska. Kyiv: DerzhHeoKadastr and Kartographia. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-966-475-839-7. பார்க்கப்பட்ட நாள் 6 October 2020.
{{cite book}}
:|website=
ignored (help) - ↑ Oda, UA: LG, 2007, archived from the original on 5 August 2008.
- ↑ Umoloda, Kyiv, UA.
- ↑ Oda, UA: LG, 1930, archived from the original on 24 May 2011.
- ↑ "Territory", 70 years, UA: LG, 14 March 2008 [1977], archived from the original on 24 May 2011, பார்க்கப்பட்ட நாள் 17 September 2008.
- ↑ "70 years", Calendar, UA: LG, 11 April 2008, archived from the original on 24 May 2011, பார்க்கப்பட்ட நாள் 17 September 2008.
- ↑ "Zelensky explains move to change Luhansk region's governor". UNIAN. 28 October 2019. பார்க்கப்பட்ட நாள் 8 November 2019.
- ↑ Владимир Николаевич ПРИСТЮК [Vladimir nikolaevich Pristyuk] (in ரஷியன்), Luhansk Oblast Council, archived from the original on 24 April 2010.
- ↑ "In Severodonetsk, Petro Poroshenko presented Luhansk RSA Head Hennadiy Moskal". President of Ukraine, official website. Archived from the original on 18 March 2015.
- ↑ Referendum%20in%20the%20Soviet%20Union www.csce.gov
வெள் இணைப்புகள்
தொகு- Official site of Luhansk Oblast Administration (in உக்குரேனிய மொழி)
- Information Card of the Region – official site of the Cabinet of Ministers of Ukraine