முதன்மை பட்டியைத் திறக்கவும்

மியீச்சினா (Myitkina) மியான்மரின் காசின் மாநிலத்தின் தலைநகரம். இந்நகரம் யங்கோன் நகரத்தில் இருந்து 1,480 கிமீ (920 மைல்கள்) மற்றும் மண்டலை நகரத்திலிருந்து 785 கிமீ (488 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரத்துப் பெயரின் பொருள் பர்மிய மொழியில் பெரிய ஆற்றின் அருகில் என்பதாகும் மேலும் இந்நகரம் ஐராவதி ஆற்றின் மேற்குக் கரைப்பகுதியில் அமைந்திருக்கிறது. மியான்மரின் வடக்குப் பகுதி ஆற்றுத் துரைமுகம் மற்றம் இரயில் முனையம் அமைந்திருக்கிறது. [2] மியீச்சினாவில் ஒரு வானூர்தி நிலையமும் செயல்பாட்டில் உள்ளது.

மியீச்சினா
Myitkyina

မြစ်ကြီးနားမြို့
Skyline of மியீச்சினா Myitkyina
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Burma" does not exist.Location in Burma
ஆள்கூறுகள்: 25°23′0″N 97°24′0″E / 25.38333°N 97.40000°E / 25.38333; 97.40000
நாடு மியான்மர்
பிரிவுகாசின் மாநிலம்
மாவட்டம்மியீச்சினா மாவட்டம்
நகராட்சிமியீச்சினா நகராட்சி
மக்கள்தொகை (2014)
 • மொத்தம்3,06,949
நேர வலயம்MST (ஒசநே+6.30)
தொலைபேசி குறியீடு74
ClimateCwa
[1]

வரலாறுதொகு

பண்டைய காலம் முதல் மியீச்சினா நகரம் சீனா மற்றும் பர்மாவின் இடையே ஒரு முக்கிய வர்த்தக நகரமாக விளங்கியது. ஜப்பானிய படைகள் 1942 ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின்போது மியீச்சினா நகரத்தையும் அருகிலுள்ள விமான நிலையத்தையும் கைப்பற்றின. ஆகத்து 1944 ஆண்டில், ஜெனரல் ஜோசப் ஸ்டில்வெலின் தலைமையிலான கூட்டணி படைகளால் மியீச்சினா நகரம் தேசியவாத சீனப் பிரிவினரிடையே நீண்டகால முற்றுகை மற்றும் கடும் சண்டையிட்டு திரும்பப் பெற்றது.

இந்நகரம் புவியியல் ரீதியாக மிக முக்கிய பகுதியாக இருக்கிறது. ஏனென்றால் பர்மாவின் மீதமுள்ள இரயில் மற்றும் நீர் வழி இணைப்புகளின் காரணமாக மட்டுமல்லாமல், லீடோ சாலையின் திட்டமிடப்பட்ட பாதையிலும் இது முக்கியமான பகுதியாகும். [3] [4]

மேலும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "National Telephone Area Codes". Myanmar Yellow Pages.
  2. "Train travel in Myanmar(Burma)". seat61.com. பார்த்த நாள் 2009-03-29.
  3. "Myitkyina, Myanmar". Encyclopædia Britannica Online. பார்த்த நாள் 2009-03-29.
  4. Gardner, Major John J. "Battle of Myitkyina". பார்த்த நாள் 2006-10-15.

வெளிப்புற இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மியீச்சினா&oldid=2460294" இருந்து மீள்விக்கப்பட்டது