மிர்கல் மீன்

மிர்கால் மீன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
முள்ளெழும்புத் துடுப்பி
வரிசை:
முதுகுத்துடுப்பி
குடும்பம்:
கெண்டைமீன்
பேரினம்:
சிர்கீனசு
இனம்:
C. cirrhosus
இருசொற் பெயரீடு
சிர்கீனசு சிர்கோசசு
(பிளாச், 1795)
வேறு பெயர்கள்

சிர்கீனசு பிளாச்சு (ஹாமில்டன், 1822)[2]

மிர்கால் மீன் (Mrigal carp) என்பது இந்திய கெண்டை வகையைச் சேர்ந்த மீனாகும். இது ஓர் நன்னீர் மீன். இது சுவை மிகுந்த மீனாகும். இது மிக விரைவாக வளரக்கூடியது. இவை அதிகப் பட்சம் 3.3 அடி நீளமும்வரை வளரும்.[3] இதன் குஞ்சுகளை அணை, ஏரி போன்றவற்றில் விட்டு உணவுக்காக வளர்ப்பார்கள்.

தோற்றம் தொகு

மிர்கால் நீண்ட உடல் அமைப்பைக்கொண்டவை. இம்மீனின் தலை சிறியதாகவும். இம்மீனின் உதடுகள் சுருக்கம் இன்றியும் காணப்படும். இம்மீனின் வாய் கீழ்நோக்கி திறந்திருக்கும்.

உணவுப் பழக்கம் தொகு

இது குளத்தின் தரை மட்டத்தில் உள்ள, மக்கிய உணவுப்பொருட்களையும், நத்தை, புழுப் பூச்சிகளை உண்டு வளருகிறது. இது ஓர் ஆண்டில் 1/2 கிலோ முதல் 3/4 கிலோ வரை வளரும் திறன் கொண்டவை.[4]

இனப்பெருக்கக் காலம் தொகு

இம்மீன்கள் இரண்டாம் ஆண்டில் இன முதிர்ச்சி அடைந்து, தென்மேற்கு பருவமழைக்காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட்டு ஆகிய மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும். தூண்டுதல் முறையில் தேவையான அளவு குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.

உசாத்துணை தொகு

காலைக்கதிர் 25.12.2014, ஒருங்கிணைந்த மீன்வளர்பிற்கேற்ற நன்னீர் மீன்வகைகள். செய்திக் கட்டுரை

  1. Rema Devi, K.R. & Ali, A. (2011). "Cirrhinus cirrhosus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 9 May 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)CS1 maint: multiple names: authors list (link)
  2. The cultured mrigal carp has been cited as Cirrhinus mrigala and is so still treated by FAO, whereas sources such as FishBase, IUCN Red List and Eschmeyer's Catalog of Fishes now consider C. cirrhosus and C. mrigala as distinct species
  3. Froese, Rainer and Pauly, Daniel, eds. (2014). "Cirrhinus cirrhosus" in FishBase. May 2014 version.
  4. http://agritech.tnau.ac.in/ta/fisheries/fish_carps_ta.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிர்கல்_மீன்&oldid=3188764" இலிருந்து மீள்விக்கப்பட்டது