மிர் ஆலம் ஏரி
மிர் ஆலம் ஏரி (Mir Alam Tank) என்பது இந்தியாவின் தெலங்காணாவின் ஐதராபாத்தில் உள்ள ஒரு நீர்த்தேக்கம் ஆகும். இது முசி ஆற்றின் தெற்கே அமைந்துள்ளது. ஓசுமான் சாகர் ஏரி மற்றும் ஹிமாயத் சாகர் கட்டப்படுவதற்கு முன்பு ஐதராபாத்திற்கு குடிநீரின் முதன்மை ஆதாரமாக இது இருந்தது. இது பாம் பள்ளத்தாக்கு (தட்பன்) அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலை எண் 7 உடன் இணைக்கப்பட்டுள்ளது.
மிர் ஆலம் ஏரி | |
---|---|
அமைவிடம் | ஐதராபாத்து, தெலங்காணா |
ஆள்கூறுகள் | 17°21′N 78°26′E / 17.350°N 78.433°E |
வகை | நீர்த்தேக்கம் |
முதன்மை வரத்து | முசி ஆறு |
முதன்மை வெளியேற்றம் | முசி |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேற்பரப்பளவு | 600 ஏக்கர்கள் (240 ha) |
Islands | இரண்டு |
குடியேற்றங்கள் | ஐதராபாத்து |
வரலாறு
தொகுஐதராபாத்து மாநிலத்தின் மூன்றாவது நிசாமின் ஆட்சிக் காலத்தில், மாநிலத்தின் பிரதம மந்திரியாக இருந்த (1804 - 1808) மிர் ஆலம் பகதூரின் பெயரிடப்பட்டது. மிர் ஆலம் 1804 சூலை 20 அன்று இந்த ஏரிக்கு அடித்தளம் அமைத்தார். இது சுமார் இரண்டு ஆண்டுகளில் 1806 சூன் 8 அன்று நிறைவடைந்தது.
வசதிகள்
தொகுநேரு விலங்கியல் பூங்கா எரியை ஒட்டியுள்ளது. மேலும், தெலாங்காணா சுற்றுலா நிறுவனம் ஏரியில் படகுகளை இயக்குகிறது. இதற்காக மிருகக்காட்சிசாலையின் வழியாக செல்ல வேண்டும்.
போக்குவரத்து
தொகுதெலங்காணா மாநில போக்குவரத்து நிறுவனம் இதற்கான பேருந்து சேவையை வழங்குகிறது. ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் பேருந்துகள் கிடைக்கும். அருகிலுள்ள ஐதராபாத் மல்டி மாடல் தொடர் வண்டி நிலையம் நிலையம் சிவ்ராம்பள்ளியில் அமைந்துள்ளது.
மிர் ஆலம் பூங்கா
தொகுநீர்நிலைக்கு அருகில் ஒரு பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. குதுப் ஷாஹி பாணியில் சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஓவியங்கள் முப்பரிமான வகையில் உள்ளது. இங்கு ஒரு அறிவியல் பூங்காவும், பிற வசதிகளும் உள்ளன. [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mir Alam Tank Park to bask in past glory". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-05-08.