மிலாப் சந்த் ஜெயின்

மிலாப் சந்த் ஜெயின் (Milap Chand Jain)(21 ஜூலை 1929 [1] -29 ஏப்ரல் 2015 [2] ) என்பவர் தில்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி, இராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநர் மற்றும் இராஜஸ்தான் மாநில லோக் ஆயுக்தாவின் முன்னாள் தலைவர் ஆவார்.

மிலாப் சந்த் ஜெயின்
இராஜஸ்தான் ஆளுநர்களின் பட்டியல் (பொறுப்பு)
பதவியில்
3 பிப்ரவரி 1990 – 14 பிப்ரவரி 1990
முன்னையவர்சுகதேவ் பிரசாத்து
பின்னவர்தேபி பிரசாத் சட்டோபாத்யாயா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 சூலை 1929
ஜோத்பூர்
இறப்பு29 ஏப்ரல் 2015 (வயது 85)
செய்ப்பூர், ராஜஸ்தான்

ஜெயின் 1929ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பிறந்தார். இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்ற பிறகு இளங்கலைச் சட்டப் பட்டம் பெற்ற இவர், 1978ல் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் இவர் தில்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.

ஜெயின் ஆணையம்

தொகு

இராஜீவ் காந்தியின் படுகொலையில் தொடர்புடைய சந்தேகமாகக் கருதப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நபர்களை விசாரணை செய்ய இந்திய அரசால் அமைக்கப்பட்ட ஜெயின் ஆணையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் 1990ஆம் ஆண்டு குறுகிய கால ராஜஸ்தான் மாநில ஆளுநராகப் பதவி வகித்தார்.

மறைவு

தொகு

மிலாப் சந்த் ஜெயின் தமது 86வது அகவையில் உடல்நலக் குறைவால் ஜெய்ப்பூரில் காலமானார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "%22Jain, Milap%22 – Google Search".
  2. "Justice Milap Chand Jain dies". https://www.thehindu.com/news/national/other-states/justice-milap-chand-jain-dies/article7160388.ece. 
  3. Former Delhi HC Chief Justice Milap Chand Jain dies
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிலாப்_சந்த்_ஜெயின்&oldid=3968417" இலிருந்து மீள்விக்கப்பட்டது