மில்மா என்பது இந்திய மாநிலமான கேரளாவில் திருவனந்தபுரத்தைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் கேரள கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பு லிமிடெட் என்ற தன்னாட்சி பெற்ற பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

கேரள கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பு லிமிடெட்
வகைகூட்டுறவு
நிறுவுகை1980
தலைமையகம்திருவனந்தபுரம், கேரளா, இந்தியா
தொழில்துறைபால் பண்ணை
உற்பத்திகள்பால் பொருட்கள் மற்றும் மாட்டுத்தீவனம்
வருமானம்₹3,003 கோடி (2017-18)
இணையத்தளம்www.milma.com

வணிக நடவடிக்கைகளாகிய பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்கிறது. 2017-18 ஆண்டு அறிக்கையின் படி இந்த கூட்டுறவு கூட்டமைப்பின் வருமானம் ₹3,003 கோடியென தெரிகிறது[1].

வரலாறு

தொகு

1963-ஆம் ஆண்டு, இந்திய-சுவிட்சர்லாந்து நாடுகளின் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில், கேரளாவில் கறவை மாடுகள் வளர்ப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் மூலம் ஸ்விஸ் பிரவுன் எனப்படும் கலப்பின மாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்பொழுது இத்திட்டம் கேரளா கால்நடை வளர்ப்பு மற்றும் பால் விற்பனை வாரியம் என்ற அமைப்பின்கீழ் தொடர்கிறது.

அமுல் அமைப்பின் வெற்றியைத் தொடர்ந்து, தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம் செயல்படுத்திய இந்திய வெண்மைப் புரட்சித் திட்டத்தின்கீழ், மில்மா என்ற வணிக சின்னத்துடன் இயங்கும் கேரள மாநிலக் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பு 1980-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் 83 சதவீதத்துக்கும் மேலான கறவை மாடுகள் சுனந்தினி எனப்படும் கலப்பின பசுக்களாக மாற்றப்பட்டு, மாநிலத்தின் பால் உற்பத்தி பத்து மடங்காக உயர்த்தப்பட்டது.

பால் ஆறுதல் காப்பீடு

தொகு

பால் ஆறுதல் என்பது கேரள மாநிலத்தின் பால் பண்ணையாளர்கள் மற்றும் பால்பண்ணைத் தொழிலாளர்களுக்காக மாநில பால்வள மேம்பாட்டுத் துறையால் செயல்படுத்தப்படும் ஒரு விரிவான காப்பீட்டுத் திட்டமாகும். கால்நடைகள், பால் பண்ணையாளர்கள், குடும்ப உறுப்பினர்கள், பால் பண்ணை தொழிலாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் காப்பீட்டின் கீழ் வருவார்கள். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் இணைந்து ஐக்கிய இந்தியா காப்பீட்டு நிறுவனம் இந்தத் திட்டத்தை செயல்படுத்தப்படுகிறது. பசு பாதுகாப்பு, ஆரோக்கிய பாதுகாப்பு, விபத்து காப்பீடு, ஆயுள் காப்பீடு ஆகிய பாலிசிகள் இதன் கீழ் கிடைக்கும். பால் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள விவசாயிகள், சங்க செயலாளரை அணுகி விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்து திட்டத்தில் உறுப்பினராகலாம். மாநில பால்வள மேம்பாட்டுத் துறை பிரீமியம் மானியமாக ஒரு குறிப்பிட்ட தொகையை (50% வரை) வழங்குவதால், பால் பண்ணையாளர் மிதமான தொகையை மட்டுமே செலுத்தினால் போதுமானது.

கால்நடைகளை காப்பீடு செய்ய கிராம பஞ்சாயத்து கால்நடை மருத்துவரால் சான்றளிக்கப்பட்ட பதிவு படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். கோ ரக்ஷா என்று அழைக்கப்படும் பாலிசியின் கீழ், ஒரு மாட்டுக்கு ₹50,000 முதல் ₹70,000 வரை காப்பீடு கிடைக்கும். 80 வயது வரை உள்ள விவசாயிகள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவார்கள். விவசாயிகளின் பெற்றோர் பயன்பெற வயது வரம்பு இல்லை. இத்திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் ரூபாய் வரை மருத்துவப் பயன் கிடைக்கும். விபத்து பாதுகாப்பு பாலிசியில் சேருபவர்களுக்கு ₹7 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். பாலிசி காலம் ஒரு வருடம் ஆகும்[2].

மேற்கோள்கள்

தொகு
  1. "2017-18 ஆண்டு அறிக்கை" (PDF). கேரள கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பு லிமிடெட். 2018-08-31. பார்க்கப்பட்ட நாள் 2023-12-03.
  2. "ஆறதல்ப்படுத்த ஒரு பால் ஆறுதல்". கேரள செய்திகள் (தகவல் மக்கள் தொடர்பு துறை, கேரள அரசு). பார்க்கப்பட்ட நாள் 2023-12-03.
 
மில்மா தேங்காய் பர்பி
 
மில்மா மில்கி ஜாக் - பலா பேடா

மேலும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மில்மா&oldid=3839548" இலிருந்து மீள்விக்கப்பட்டது