மீண்டும் சாவித்திரி

மீண்டும் சாவித்திரி (Meendum Savithri) திரைப்படம் 1996-ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை விசு எழுதி, இயக்க, பி. நாகிரெட்டி தயாரித்தார். இத்திரைப்படத்தில் விசு, ரேவதி, சரண்யா பொன்வண்ணன், நிழல்கள் ரவி, ராஜா, ரமேஷ் அரவிந்த், நாகேஷ், ஜெய்கணேஷ், அன்னபூர்ணா, சீதா, பாண்டு மற்றும் பலர் நடித்துள்ளனர். நல்ல படம் என்ற விமர்சனத்தை பெற்றாலும், மிகக்குறைவாகவே வசூல் செய்தது.[1][2][3][4][5]

மீண்டும் சாவித்திரி
மீண்டும் சாவித்திரி
இயக்கம்விசு
தயாரிப்புபி. ராகி ரெட்டி
கதைவிசு
இசைதேவேந்திரன்
நடிப்புவிசு
ரேவதி
சரண்யா பொன்வண்ணன்
நிழல்கள் ரவி
ராஜா
ரமேஷ் அரவிந்த்
நாகேஷ்
ஜெய்கணேஷ்
அன்னபூர்ணா
சீதா
பாண்டு
ஒளிப்பதிவுஎன். பாலகிருஷ்ணன்
வெளியீடு09 பிப்ரவரி 1996
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

கதைச்சுருக்கம்தொகு

மஞ்சு (ரேவதி) அனைத்தையும் மிகவும் வெளிப்படையாக பேசும் சுபாவம் கொண்டவள். அவள் ஒரு சிறிய நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாள். தன்னால் முடிந்த வரை மக்களைத் திருத்தும் சுபாவம் கொண்ட தன் தந்தை நாராயண மூர்த்தியுடன் (விசு) வாழ்ந்து வருகிறாள் மஞ்சு. கல்யாண வயதை அடைந்த மஞ்சுவிற்கு மாப்பிள்ளை தேடுகிறார் நாராயண மூர்த்தி. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பம் என்பதால், ஆண் வீட்டார் கேட்கும் வரதட்சணையை நாராயண மூர்த்தியால் தர இயலவில்லை. அவ்வாறாக ஒருநாள், வரதட்சணை இல்லாமல் கல்யாணம் செய்துகொள்ளத் தயார் என்ற ஒரு வினோதமான விளம்பரத்தைப் பார்க்கிறாள் மஞ்சு. அந்த விளம்பரத்தைக் கொடுத்தது வாசுதேவன் (ராஜா), மிகவும் நல்லவனாக இருக்கிறான். மஞ்சுவும் நாராயண மூர்த்தியும் வாசுதேவனின் குடும்பத்தை பார்த்து மிரண்டுபோகிறார்கள். வாசுதேவனின் தந்தை ராமமூர்த்தி (நாகேஷ்) வியாபார தோல்வியால் மனநலம் பாத்திக்கப்பட்டவர், அவனின் தங்கை காயத்ரி (சீதா) பாலியல் துன்புறுத்தலால் மனநலம் பாதிக்கப்பட்டவள், அவனது சகோதரன் பாஸ்கர் (ரமேஷ் அரவிந்த்) ஒரு குடிகாரன், அவனது அம்மா ஒரு ஆஸ்துமா நோயாளி.

இதை அனைத்தையும் தாண்டி, வாசுதேவனை மணக்கிறாள் மஞ்சு. உண்மையில் வாசுதேவனின் குடும்பத்தினர் அனைவரும் எதுக்காகவோ பயந்து, நலமாக இருப்பதை மறைந்து நடிக்கிறார்கள். மஞ்சுவை திருமணம் செய்யும் முன்பே, உமா (சரண்யா பொன்வண்ணன்) என்ற பெண்ணை வாசுதேவன் மணந்திருந்தான். உமாவை மணந்த பின்பும், மஞ்சுவை ஏன் மணந்தான் வாசுதேவன்? எதை மறைக்க வாசுதேவனின் குடும்பத்தினர் நாடகமாடினர்? இறுதியில் மஞ்சுவிற்கு என்னவானது? போன்ற கேள்விகளுக்கு விடைகாணுதலே மீதிக் கதையாகும்.

இசைதொகு

இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் தேவேந்திரன் ஆவார். இப்படத்தின் பாடலாசிரியர் பிறைசூடன் ஆவார்.[6]

வரிசை

எண்

பாடல் பாடியவர்
1 நாட்டுக்குள்ள ரொம்ப மனோ
2 பெத்தவ உன்னை கே.ஜெ. ஏசுதாஸ்
3 அவரவர் தலை கே.ஜெ. ஏசுதாஸ்
4 இந்த நாள் மனோ
5 வேல் முருகன் மனோ

மேற்கோள்கள்தொகு

  1. "spicyonion.com".
  2. "www.cinesouth.com".
  3. "www.jointscene.com".
  4. "behindwoods.com".
  5. "groups.google.com".
  6. "www.saavn.com".

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீண்டும்_சாவித்திரி&oldid=2648168" இருந்து மீள்விக்கப்பட்டது