மீதான் மாலை

மீதான் மாலை என்பது 1868 ஆம் ஆண்டில் அரபுத் தமிழில் எழுதி வெளியிடப்பட்ட ஒரு கவிதை நுாலாகும். இதுவே இலங்கையின் தமிழ் அச்சிடல் வரலாற்றில் அச்சிடப்பட்ட முதலாவது நுாலாகும்.[1] இதை இலங்கையைச் சோ்ந்த இசுலாமிய அறிஞர் செய்கு முஸ்தபா வலியுல்லா எழுதினார். 19ஆம் நூற்றாண்டில் நிலவிய மார்க்க முரண்பாடுகளைக் கிளத்தெறிவதிலும், உண்மை நெறியை மக்களது உளளங்களில் பரப்புவதிலும் இக்கவிதை நூல் முக்கிய இடம்பெற்றது. அரைகுறை அறிவோடு அறநெறி விளக்கம் கொடுக்க முயன்ற பலரது தவறான கருத்துக்களை இந்நூல் விளக்கி, மக்களுக்கு தெளிவான இசுலாமிய நம்பிக்கைக் கோட்பாடு பற்றி விளக்கம் அளிக்கும் நூலாக அமையப் பெற்றுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.

நூலமைப்புதொகு

இந்நூல் 149 கவிதைகளை வெண்பா வடிவில் கொண்டது. இசுலாமிய நம்பிக்கைக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இது ஆறு சீர்கலி நெடுளாசிரியர் விருத்தங்கயையும் உள்ளடக்கியதாக அமையப்பெற்றுள்ளது.இந்நுாலுக்கான விளக்கவுைைர செய்கு முஸ்தபா அவர்களின் மகனார் முஹம்மது ஹாஜியார் அவர்களால் எழுதப்பட்டுள்ளது.

மேலும்பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. எஸ். எச். எம். ஜெமீல். (19947). சுவடி ஆற்றுப்படை.கல்முனை: இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீதான்_மாலை&oldid=1995937" இருந்து மீள்விக்கப்பட்டது