செய்கு முஸ்தபா

ஷெய்கு முஸ்தபா றஹ்மதுல்லாஹி அலைஹி(Sheikh Mustafa, 1836 - 1888) அவர்கள் இலங்கையில் 19ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் வாழ்ந்த சூபி இஸ்லாமிய அறிஞரும், கவிஞரும் ஆவார்கள்.

சங்கைக்குரிய
ஷெய்கு முஸ்தபா இப்னு பாவா ஆதம் (ரஹ்)
Shrines of the Prophet's Wives and Abdullah ibn Ja'far and Aqeel ibn Abi Talib in Al-Baqi' before demolition.jpg
பட்டம்இமாமுஸ் ஸைலான்
பிறப்பு1836
இலங்கை பேருவளை, இலங்கை
இறப்பு1888
சவூதி அரேபியா ஜன்னதுல் முஅல்லா,மக்கா,சவூதி அரேபியா
தேசியம்இலங்கையர்
இனம்இலங்கை சோனகர்
காலம்19-ஆம் நூற்றாண்டு, நவீன காலம்
பிராந்தியம்இலங்கை
பணிஅறிஞர், புத்தக ஆசிரியர், சூபி மகான், கவிஞர்
மதப்பிரிவுஅஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் (சூஃபி)
சட்டநெறிஷாஃபி மத்ஹப்
சமய நம்பிக்கைஅஷ்அரி
முதன்மை ஆர்வம்அரபு, அர்வி (அரபு-தமிழ்), தமிழ், அகீதா, ஃபிக்ஹ், தஃப்ஸீர், சூஃபியம்
சூபித்துவம் order]]காதிரிய்யதுன் நபவிய்யா
குருஅஷ்செய்கு அஹ்மத் இப்னு முபாரக் மெளலானா(றஹ்)

ஆரம்ப வாழ்க்கைதொகு

செய்கு முஸ்தபா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கி.பி. 1836ஆம் ஆண்டு இலங்கையின் தெற்கே பேருவளை நகரில் பிறந்தார்.இவர்கள் இஸ்லாத்தின் மூன்றாவது கலீபாவான ஹஸ்ரத் உஸ்மான் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வழித்தோண்றலாவார்.தனது சிறுவயதிலே தாயையும், தந்தையும் இழந்தார். பின்னர் தனது சகோதரியின் அரவணைப்பில் வாழ்ந்தார். சிறுவராக இருக்கும் போதே அரபு எழுத்தணிக்கலையில் (அப்ஜத்) தேர்ச்சி பெற்றிருந்தார்.

கல்விதொகு

தனது 12வது வயதில் கல்வியைத் தொடருவதற்கு இந்தியாவின் காயல்பட்டிணம் நகருக்கு சென்றார்.அங்கு தப்ஸீர்(அல்-குர்ஆன் விளக்கவுரை),ஹதீஸ்,பிக்ஹ் போன்ற பல்வேறுபட்ட இசுலாமியக் கல்வியினைப் பெற்றார். பிற்காலத்தில்,செய்கு முஸ்தபா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மக்கா நகருக்கு கல்விகற்பதற்காக சென்றார்கள்.மக்கா நகரில், புனித மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலின்(கஃபா பள்ளிவாசல்) இமாமான செய்குல் இஸ்லாம் முப்தி ஸைனி தெஹ்லான் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் கல்வி கற்றார்கள்.முப்தி ஸைனி தெஹ்லான் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் முதன்மை மாணவராக செய்கு முஸ்தபா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் விளங்கினார்கள்.மேலும் மக்காவில் அஷ்செய்க் ஹிஸ்புல்லாஹி மக்கி றஹ்மதுல்லாஹி அலைஹி, அல்லாமா அஸ்ஸையித் அப்துல் ஹமீத் ஸர்வானி றஹ்மதுல்லாஹி அலைஹி போன்ற அறிஞர்களிடமும் கல்வி கற்றார்கள்.

பிந்திய வாழ்க்கைதொகு

இந்தியாவில் தனது கல்வியை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய செய்கு முஸ்தபா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், இலங்கையில் தனது சன்மார்க்கப் பணியினைத் தொடர்ந்தார். இந்த காலப்பகுதியில் யெமன் தேசத்தின் ஹழரமொத் நகரைச் சோந்த செய்கு அஹ்மத் முபராக் றஹ்மதுல்லாஹி அலைஹி என்ற இசுலாமிய அறிஞரைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. செய்கு அஹ்மத் முபராக் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களைத் தனது ஆன்மீக குருவாக செய்கு முஸ்தபா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஏற்றுக் கொண்டார். செய்கு அஹ்மத் முபாரக் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், காதிரியதுன் நபவிய்யா எனும் இசுலாமிய சூபி சிந்தனைப் பிரிவைத் தோற்றுவித்தார். இவர்கள் இருவரும் சன்மார்க்கப் பணிக்காக இலங்கையின் காலி, மல்வானை, கஹடோவிட போன்ற பல இடங்களுக்கு சென்று, அங்கு இசுலாமிய ஆத்மிக நிலையங்களை உருவாக்கினர். பேருவளையில் காதிரியதுன் நபவிய்யா இஸ்லாமிய சூபி சிந்தனைப்பிரிவின் தலமையகத்தை இவர்கள் நிறுவினர். செய்கு அஹ்மது முபாரக் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கி.பி.1862 இல் மரணமடைந்தார். அவர்கள் காலி தளாபிட்டிய ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு அருகாமையில் அடக்கம் செய்யப்பட்டார்கள். செய்கு அஹ்மது முபாரக் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுக்குப் பின்னர் செய்கு முஸ்தபா றஹ்மதுல்லாஹி அலைஹி காதிரியதுன் நபவிய்யா இஸ்லாமிய சூபி சிந்தனைப்பிரிவின் தலைவராக செயற்பட்டார். அதற்கான உத்தரவும் அனுமதியும், செய்கு முஸ்தபா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுக்கு செய்கு அஹ்மது முபாரக் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களால் கொட்டியாக்கும்புர நகருக்கு அண்மையிலுள்ள அம்பைப்பள்ளியில் வைத்து ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. செய்கு முஸ்தபா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் காலத்தில் இலங்கைக்கு வந்து பேருவளையில் அவர்களைச் சந்தித்த யெமன் நாட்டைச் சோந்த இஸ்லாமிய அறிஞர் அஹ்தல் மௌலானா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களால் பேருவளை மாளிகாச்சேனை தக்கியாவில் வருடாந்த புகாரி ஹதீஸ்கிரந்த பாராயண மஜ்லிஸ் ஆரம்பிக்கப்பட்டது [1].

மரணம்தொகு

செய்கு முஸ்தபா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது ஆறாவதும், கடைசியுமான ஹஜ் யாத்திரையை மேற்கொண்டார். ஹஜ் கிரிகையின் போது கடுமையான காய்ச்சலுக்கு உட்பட்ட அவர் 1888ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் திகதி மக்காவில் காலமானார். அவரது உடல் மக்காவின் ஜன்னதுல் முஅல்லா மயானத்தில்,அன்னை கதீஜா றழியல்லாஹு அன்ஹா அவர்களின் அடக்கஸ்தலத்துக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

பங்களிப்புக்கள்தொகு

செய்கு முஸ்தபா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துறைக்கு பெரும் பங்காற்றியுள்ளார். மேலும், அவர்கள் பல்வேறுபட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்கள்.

  • பத்ஹுர்ரஹ்மான் பி தர்ஜிமதி தப்ஸீரில் குர்ஆன்[2]
அரபுத் தமிழில் எழுதப்பட்ட உலகின் முதலாவது புனித அல்குர்ஆன் விளக்கவுரை நூல் இதுவாகும்.[3]

மேலும்வாசிக்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "பேருவளை வருடாந்த புகாரி ஹதீஸ் பாராயண வைபவம்". 2016-03-04 அன்று Beruwala Bukhari feast மூலம் Check |url= value (உதவி) பரணிடப்பட்டது. 2013-01-16 அன்று பார்க்கப்பட்டது.
  2. எம்.ஆர்.எம். அப்துற் றஹீம். இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்-பாகம் 1. யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
  3. கலாநிதி. சுக்ரி . (1986). இலங்கை முஸ்லிம்களின் வரலாறு. பேருவளை: ஜாமிஆ கல்விஸ்தபானம்
  4. எஸ். எச். எம். ஜெமீல். (1947). சுவடி ஆற்றுப்படை. கல்முனை: இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம்

உசாத்துணைகள்தொகு

  • திரு.ஹிலரி, இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் (ஒரியண்டல் செய்தி ஸ்தாபனம்,1941)

வெளிஇணைப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்கு_முஸ்தபா&oldid=3555652" இருந்து மீள்விக்கப்பட்டது