மாப்பிள்ளை லெப்பை ஆலிம்
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (1816-1898) அவர்கள் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, தென்னிந்தியாவைச் சேர்ந்த மார்க்க அறிஞரும்,சூபி மகானும்,எழுத்தாளரும்,கவிஞரும் ஆவார். இவர்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கையில் இஸ்லாமிய மறுமலர்ச்சிற்கு பெரும் பங்காற்றியவர்.[1]
சங்கைக் குரிய மாப்பிள்ளை லெப்பை ஆலிம் Mappilai Lebbai Alim | |
---|---|
பட்டம் | இமாமுல் அரூஸ் |
பிறப்பு | 1816 காயல்பட்டிணம், தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | 1898 கீழக்கரை, தமிழ்நாடு, இந்தியா |
வேறு பெயர்கள் | ஷெய்கு நாயகம்,சைய்யித் முஹம்மத் |
தேசியம் | இந்தியன் |
இனம் | அரபியர்-தமிழர் |
காலம் | 19-ஆம் நூற்றாண்டு, நவீன காலம் |
பிராந்தியம் | தென்னிந்தியா, இலங்கை |
பணி | அறிஞர், புத்தக ஆசிரியர், சூபி மகான், கவிஞர் |
மதப்பிரிவு | அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் (சூஃபி) |
சட்டநெறி | ஷாஃபி மத்ஹப் |
சமய நம்பிக்கை | மாத்துரீதீ அகீதா |
முதன்மை ஆர்வம் | அரபு, அர்வி (அரபு-தமிழ்), தமிழ், அகீதா, ஃபிக்ஹ், தஃப்ஸீர், சூஃபியம், வரலாறு |
ஆக்கங்கள் | மஙானீ, பத்ஹுத் தைய்யான், ஙனீமத்துஸ்ஸாலிஹீன்,மின்ஹத்து ஸரன்தீப் |
சூபித்துவம் order]] | அரூஸிய்யா-காதிரிய்யா |
குரு | தைக்கா ஸாஹிபு(றழி) |
செல்வாக்கு செலுத்தியோர் | |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்
தொகுமாப்பிள்ளை லெப்பை ஆலிம் இந்தியாவின் காயல்பட்டணத்தில் பிறந்தார்கள். இவர்களின் தந்தை வெள்ளை அஹமது லெப்பை ஆலிம் ஆவார்.இவர் மாதிஹுர் ரஸூல் சதகதுல்லாஹில் காஹிரி (சதகதுல்லா அப்பா) அவர்களின் வம்சாவழியில் தோன்றியவர்.இவர்களின் இயற்பெயர் செய்யித் முஹம்மத்.அவரது இரண்டாவது வயதில், அவர்களது குடும்பம் கீழக்கரையில் குடியேறியது.இவர் தனது 10வது வயதில் புனித அல்குர்ஆனை மனனம் செய்தார்.
கீழக்கரையில் புகழ்பெற்ற மார்க்க அறிஞர் தைக்கா ஸாஹிபு(றழி) அவர்களிடம் கல்விகற்றார்கள்.பல்வேறுபட்டகல்வி ஞானங்களை தைக்கா ஸாஹிபு (றழி) அவர்களிடம் கற்றுத்தேர்ந்தார்.
பிந்திய வாழ்க்கை
தொகுதனது ஆசிரியர் தைக்கா ஸாஹிபு(றழி) அவர்களின் மகளை மணமுடித்தார்கள். இதனால் அவர்கள் "மாப்பிள்ளை லெப்பை ஆலிம்" என அழைக்கப்பட்டார்.பின்னர் தமது மாமனாரிடம் பைஅத்தும், கிலாபத்தும் பெற்றார்கள்.அரூஸிய்யா மத்ரஸாவை அமைத்து அதில் நூலகம் ஒன்றை நிறுவினார்கள். இவர்களுக்கு கல்வத் நாயகம், சாகுல் ஹமீது என்ற ஜல்வத் நாயகம் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இரு மகன்கள் பிறந்தார்கள். இலங்கையிலும், தமிழகத்திலும் இவர்கள் ஆற்றிய மார்க்க சேவை மிக மகத்தானது. இலங்கையில் 355 பள்ளிவாசல்களையும் தைக்காக்களையும் நிறுவினர்.இலங்கையில் போர்ச்சிக்கீசியர்கள் மார்க்கத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை தகர்த்து மார்க்கத்தை புணருத்மானம் செய்ய பெரும் பங்காற்றினார்கள்.[1][2]
மரணம்
தொகுமாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் தனது 84 ம் வயதில் ரஜப் பிறை 5ஹிஜ்ரி 1316 சனிக்கிழமை மாலை (கி.பி. 1898)யில் மறைந்தார்கள். இவர்களின் அடக்கஸ்தலம் கீழக்கரை தைக்காவில் அமைந்துள்ளது.
பங்களிப்புக்கள்
தொகுமாப்பிள்ளை லெப்பை ஆலிம் அரபுத் தமிழ் மற்றும் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்துறைக்கு பெரும் பங்காற்றியுள்ளார்கள்.அவர்கள் பல நுால்களை எழுதியுள்ளார்கள்.[3]
- மஙானீ(மார்க்க சட்ட நூல்)
- பத்ஹுத் தைய்யான
- ஙனீமத்துஸ்ஸாலிஹீன்
- மின்ஹத்து ஸரன்தீப்- இலங்கை பற்றி எழுதப்பட்ட நுால்
- ஹதிய்யா மாலை
- ஹத்யா ஷரீப்
- ராத்திபத்துல் ஜலாலிய்யா
- தாமிரப் பட்டணம் - அரபுத் தமிழில் எழுதப்பட்ட தமிழ் நாவல்
- தலைப் பாத்திஹா
- மவாஹிபுல் மஜீத்-பி-மனாகிபி ஷாஹுல் ஹமீத்(நாகூரார் வரலாறு)
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Tayka Shuayb Alim (1993) Arabic, Arwi, and Persian in Sarandib and Tamil Nadu. Madras :Imamul Arus Trust
- ↑ Shukri, M.A.N. (1986). Muslims of Srilanka. Jamiah Naleemia Inst. p. 352.
- ↑ Torsten Tschacher (2001). Islam in Tamilnadu: Varia. (Südasienwissenschaftliche Arbeitsblätter 2.) Halle: Martin-Luther-Universität Halle-Wittenberg. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-86010-627-9. (Online versions available on the websites of the university libraries at Heidelberg and Halle: http://archiv.ub.uni-heidelberg.de/savifadok/volltexte/2009/1087/pdf/Tschacher.pdf and http://www.suedasien.uni-halle.de/SAWA/Tschacher.pdf).