அஹ்மத் இப்னு முபாரக் மௌலானா

அஹ்மத் இப்னு முபாரக்(Ahmed Ibn Mubarak ), அஹ்மத் இப்னு முபாரக் மெளலானாஎன்பவர் யெமன் நாட்டின் ஹழரமௌத் பிரதேசத்தைச் சேரந்த இஸ்லாமிய அறிஞரும், சூபியும் ஆவார். பிற்காலத்தில் இலங்கைக்கு வந்த இவர்கள்,இலங்கை முஸ்லிம்களின் சமய,ஆன்மீக ரீதியான முன்னேற்றத்துக்கு பங்களித்த அறிஞர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

இஸ்லாமிய அறிஞர்
அஹ்மத் இப்னு முபாரக்
பிறப்புஹழரமௌத்,யெமன்
இறப்பு1866
காலி,இலங்கை
தேசியம்அராபியர்
சமயம்இஸ்லாம்

ஆரம்ப வாழ்க்கை

தொகு

அஹ்மத் இப்னு முபாரக் மெளலானா யெமன் நாட்டின் ஹழரமௌத் நகரில் பிறந்தார்.ஆரம்பக்கல்வியை தனது ஊரிலேயே பெற்றுக்கொண்டார். பின்னர், புனித மக்கா நகருக்கு வந்த அவர்கள் அக்காலத்தில் மக்காவில் மாபெரும் அறிஞராக விளங்கிய அஷ்செய்க் உஸ்மானுல் மீர்கானி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் கல்விகற்றார்கள். பின்னர், எகிப்துக்கு வந்த அவர்கள் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் அமைந்துள்ள அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் தனது கல்வியைத் தொடர்ந்தார்கள். அல்-அஸ்ஹரில், செய்குல் அஸ்ஹர் இமாம் இப்ராஹீம் அல்-பஜூரி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் கல்விகற்கும் வாய்ப்பு அஹ்மத் இப்னு முபாரக் மெளலானா அவர்களுக்கு கிடைத்தது. அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் தனது இளைமாணிப்பட்டத்தை பெற்றார்கள்.

பிந்திய வாழ்க்கை

தொகு

அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் தனது கல்வியை முடித்துவிட்டு சில காலம் அங்கு தங்கியிருந்தார்கள். பின்னர் சன்மார்க்கப் பணிக்காக, அல்-அஸ்ஹரில் அவர்களோடு படித்த நண்பர் அஷ்செய்க் உமர் அப்துல்லாஹ் பாதீப் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் உடன் கப்பலேறி இந்தியாவுக்கு பயணமானார்கள். இந்தியாவில் மலாபர் நகருக்கு சென்ற அவர்கள் ,அங்கு ஜிப்ரி மௌலானா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் வீட்டில் சிலகாலம் தங்கியிருந்து சன்மார்க்கப் பணியில் ஈடுபட்டார்கள்.[1] இந்தியாவில் பல இடங்களுக்கு பயணம் செய்த அவர்கள், அங்கு மாபெரும் அறிஞரும்,சூபியுமான செய்கு முஹம்மத் அமீன் எபந்தியில் காதிரி ஷாபிய்யி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களை சந்தித்து, அவர்களிடம் பல வருடங்கள் கழித்தார்கள். காலப்போக்கில் அஹ்மத் இப்னு முபாரக் மெளலானா அவர்களின் அறிவாற்றலையும்,அறிவு ஞானத்தையும் கண்டு செய்கு முஹம்மத் அமீன் எபந்தியில் காதிரி ஷாபிய்யி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அஹ்மத் இப்னு முபாரக் மெளலானா அவர்களுக்கு காதிரிய்யா தரீக்காவின் கிலாபத்தை வழங்கினார்கள்.[2] அங்கிருந்து, காயல்பட்டிணத்துக்கு வந்து இலங்கையை வந்தடைந்தார்கள். இலங்கை திருநாட்டில் காயல்பட்டிணத்தில் அவர்கள் சந்தித்த செய்கு முஸ்தபா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களை சந்தித்தார்கள். அஹ்மத் இப்னு முபாரக் மெளலானா அவர்களை தனது செய்காக செய்கு முஸ்தபா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஏற்றார்கள். இவர்கள் இருவரும் இலங்கையின் காலி,திஹாரிய, கஹடோவிட, மல்வானை போன்ற பல இடங்களுக்கு பயணம் செய்தார்கள்.அவ் ஊர்களில் தக்கியாக்களைக் கட்டுவித்து, ராத்தீபு மஜ்லிஸ்களையும் ஏற்படுத்தினார்கள். திஹாரிய பைத்துல் முபாரக் தக்கியா மற்றும் பேருவளை பைத்துல் முபாரக் தக்கியா ஆகியன இவர்களின் கண்கானிப்பின் கீழ் கட்டப்பட்டதுடன், காதிரியதுன் நபவிய்யா தரீக்காவின் தலைமையகமாக பேருவளையில் கட்டப்பட்ட அத்தக்கியா விளங்குகிறது. அஹ்மத் இப்னு முபாரக் மெளலானா அவர்கள் காதிரியதுன் நபவிய்யா தரீக்காவின் கிலாபத்தை செய்கு முஸ்தபா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுக்கு வழங்கினார்கள். தனது இறுதிக்காலத்தில் காலியில் தங்கியிருந்த அவர்கள் கி.பி.1866இல் றபிஉல் அவ்வல் பிறை 7இல் காலமானார்கள். அவர்கள் காலி, தளாப்பிட்டிய ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

மேலும்வாசிக்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. அந்நத்ர்:150வது ஆண்டு விழா நினைவு மலர் (2011). கஹடோவிட: பக்கம்-47
  2. திறப்பு விழா சிறப்பு மலர்: காதிரிய்யதுன் நபவிய்யா தக்கியா பூந்தோட்டம்(1999). மல்வானை: பக்கம்-19

உசாத்துணை நூல்கள்

தொகு
  • கம்பஹா மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு