மீனாட்சி ஜெயின்

மீனாட்சி ஜெயின் (Meenakshi Jain) ஓர் இந்திய அரசியல் விஞ்ஞானியும், வரலாற்றாசிரியரும் ஆவார். சாதிக்கும் அரசியலுக்கும் இடையிலான உறவுகள் பற்றிய அறிஞராக உள்ளார். [1] இவர், தற்போது தில்லி கார்கி கல்லூரியில் வரலாற்று இணை பேராசிரியராக உள்ளார். 2014ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கத்தால் இந்திய வரலாற்று ஆராய்ச்சி மன்றத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். [2] 2020ஆம் ஆண்டில், இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் பணியாற்றியதற்காக இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ இவருக்கு வழங்கப்பட்டது.

ஜெயின், குடியேற்ற இந்தியாவில் சதி நடைமுறையைப் பற்றிய ஒரு அற்புதமான தொகுதியை (சதி: சுவிசேஷகர்கள், பாப்டிஸ்ட் மறைபணியாளர்கள் மற்றும் மாறிவரும் காலனித்துவ சொற்பொழிவு) எழுதினார் . மேலும், வரலாற்று பாடப்புத்தகத்தையும் (இடைக்கால இந்தியா) எழுதியுள்ளார். இது குறிப்பிடத்தக்க அறிவார்ந்த விமர்சனத்திற்கு உள்ளானது. ரூமிலா தாப்பரின் முந்தைய உரையையும் மாற்றியது.

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்

தொகு

மீனாட்சி ஜெயின், தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் முன்னாள் ஆசிரியர், பத்திரிகையாளர் கிரிலால் ஜெயினின் மகளாவார். [3] இவர், தில்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியை முடித்தார். [4] சாதிக்கும் அரசியலுக்கும் இடையிலான சமூக அடித்தளங்கள் மற்றும் உறவுகள் பற்றிய இவரது ஆய்வறிக்கை 1991இல் வெளியிடப்பட்டது. [4]

தொழில்

தொகு

இவர் தில்லி பல்கலைக்கழகத்துடன் இணைந்த கார்கி கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராக உள்ளார். [5] திசம்பர் 2014 இல், இந்திய அரசாங்கத்தால் இந்திய வரலாற்று ஆராய்ச்சி மன்றத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Sundar, Nandini (2004). "Teaching to Hate: RSS' Pedagogical Programme". Economic and Political Weekly 39 (16): 1605–1612. doi:10.1057/9781403980137_9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0012-9976. 
  2. 2.0 2.1 "Membership of the Indian Council of Historical Research" (PDF). Archived from the original (PDF) on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2021-09-14.
  3. Khushwant Singh, Biased view (Book review of The Hindu Phenomenon), India Today, 31 August 1994.
  4. 4.0 4.1 . 2000-10-14. {{cite book}}: Missing or empty |title= (help)
  5. "Members of the Council" (PDF). INDIAN COUNCIL OF HISTORICAL RESEARCH. Archived from the original (PDF) on 2019-11-06. பார்க்கப்பட்ட நாள் 2021-09-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனாட்சி_ஜெயின்&oldid=3785467" இலிருந்து மீள்விக்கப்பட்டது