மீன்கரா அணை
கேரளத்தின் பாலக்காடு மாவட்டதில் உள்ள அணை
மீன்கரா அணை (Meenkara Dam) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில், பாரதப்புழா ஆற்றில் கலக்கும் காயத்திரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை ஆகும். இது பாலக்காட்டிலிருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த அணை 1964 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
இதன் அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் சுமார் 37 கி.மீ. தொலைவில் உள்ள பாலக்காடு நகர தொடருந்து நிலையம். அருகிலுள்ள வானூர்தி நிலையம் சுமார் 78 கி.மீ. தொலைவில் உள்ள கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.[1]