மீன்வளக் கல்லூரி, மங்களூரூ
மீன்வளக் கல்லூரி, மங்களூர், (College of Fisheries, Mangalore) என்பது இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் மங்களூரூவில் உள்ள மீன்வளக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது பெங்களூரில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தால் 1969ல் நிறுவப்பட்டது. பின்னர் இந்த கல்லூரி புதிதாக நிறுவப்பட்ட கர்நாடக கால்நடை, விலங்கு மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழகத்தின் பகுதியாக மாறியது.[1]
வகை | உயர்கல்வி நிறுவனம்-மீன்வளம் |
---|---|
உருவாக்கம் | 1969 |
துறைத்தலைவர் | முனைவர் ஏ செந்தில் வேல் (Fisheries) |
மாணவர்கள் | சுமார் 300 |
பட்ட மாணவர்கள் | 170 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 55 |
26 | |
அமைவிடம் | |
வளாகம் | Residential |
அலுவல் மொழிகள் | ஆங்கிலம், கன்னடம் |
இணையதளம் | cofm |
வளாகங்கள்
தொகுஇக்கல்லூரி இரு வளாகங்களில் செயல்படுகின்றது. நிர்வாகக் கட்டிடம், நூலகம், மீன்வளர்ப்பு, மீன்வள நுண்ணுயிரியல், மீன்வள வளங்கள் மற்றும் மேலாண்மை மற்றும் மீன்வள சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் துறைகள், விடுதிகள் (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு), பயிற்சி மையம், விருந்தினர் மாளிகை, கலையரங்கம், விளையாட்டு வளாகம், நீச்சல் குளம், தபால் அலுவலகம் மற்றும் வங்கி முதலியன தேசிய நெடுஞ்சாலை 17ல் மங்களூரில் உள்ள எக்கூரில் (கங்கனடி) உள்ளது.
தொழில்நுட்ப பிரிவு அரபிக் கடலுக்கு அருகில் உள்ள நேத்ராவதி ஆற்றின் முகப்பில் உள்ள ஹோய்கே பஜாரில் உள்ளது. இங்கு மீன் பதப்படுத்தும் தொழில்நுட்பம் மற்றும் மீன்வள பொறியியல் துறைகள் உள்ளன.
கல்வி
தொகுஇக்கல்லூரியில் இளநிலை மீன் அறிவியல் (B.F.Sc), முதுநிலை மீன் அறிவியல் (M.F.Sc) மற்றும் முனைவர் பட்ட ஆய்வு பாடங்கள் நடைபெறுகின்றது. மீன்வள அறிவியலில் ஆய்வுத் திட்டங்கள் மீன்வளர்ப்பு, மீன்வள நுண்ணுயிரியல், மீன் பதப்படுத்தும் தொழில்நுட்பம், மீன்வள வளங்கள் மற்றும் மேலாண்மை, நீர்வாழ் சூழல் மற்றும் மேலாண்மை மற்றும் மீன்வள பொறியியல் எனப் பல கிளைகளில் வழங்கப்படுகின்றன.
மீன்வள முன்னாள் மாணவர்கள் சங்கம் (COFAA)
தொகுபேராசிரியர் வழிகாட்டுதலின் கீழ் ஆர்.என்.ராமச்சந்திரா தலைமையிலான ஒத்த எண்ணம் கொண்ட முன்னாள் மாணவர்கள் குழுவால் 1980 ஆம் ஆண்டில் மீன்வள முன்னாள் மாணவர் சங்கம் (கோஃபா) தொடங்கப்பட்டது. ஹெச்.பி.சி. செட்டி ஆலோசனையின் கீழ் செயல்படுகிறது. கல்லூரியிலிருந்து பட்டம் பெற்ற 1300க்கும் மேற்பட்ட பட்டதாரிகளின் ஆதரவினால் இச்சங்கம் இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை ஆற்றிவருகிறது. கடந்த 30 ஆண்டு வளர்ச்சியின் பயனாக, கல்லூரி வளாகத்தில் தனது சொந்த அலுவலக கட்டிடம் மற்றும் விருந்தினர் மாளிகையினையும் நிறுவியுள்ளது.[2]
மீன் விழா
தொகுகல்லூரியின் மாணவர் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் ஃபிஷ்கோ எனப்படும் மீன்விழாவை ஏற்பாடு செய்கிறது. உடுப்பி மற்றும் தெற்கு கன்னட மாவட்டங்கள் முழுவதிலுமிருந்து நாற்பது கல்லூரிகள் இதில் பங்கேற்கின்றன. மூன்று நாள் நிகழ்வில் நுண்கலைகள், இலக்கியம் மற்றும் கலாச்சார போட்டிகள் நடைபெறும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://kvafsu.edu.in/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-12-26. பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.
- ↑ http://mangaloretoday.com/mt/index.php?action=mn&type=5109