மீராபள்ளி

(மீரான் பள்ளிவாசல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மீராபள்ளி, இந்தியாவிலுள்ள புதுச்சேரியில் அமைந்துள்ளது.இது புதுச்சேரியின் இரண்டாவது பழமையான பள்ளிவாசல் ஆகும். சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் ஆற்காடு நவாப் இப்பள்ளிவாசலை கட்டினார்.[1]

மீராபள்ளி
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்புதுச்சேரி, இந்தியா
சமயம்இசுலாம்

அமைப்பு தொகு

பள்ளிவாசலின் குவிமாடத்தின் கீழே நான்கு உயர்ந்த தூண்கள் உள்ளன. அதற்குக் கீழே மிஃராப் உள்ளது. மிஃராப் அருகே மிம்பர் உள்ளது. மிஃராப் மேலே கலிமா எழுத்துகள் எழுதப்பட்டுள்ளது. முகப்பின் மினார் மேல் ஒரு வெண்கல கிண்ணம் உள்ளது. பள்ளிவாசல் அருகே எற்றை பெற்றர் முல்லா எனும் சூபிஞானியின் அடக்கத்தலம் உள்ளது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "புத்துணர்ச்சி தரும் புதுச்சேரி". தமிழ் முரசு.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Meeran Mosque in Pondicherry – Pondy Tourism". Archived from the original on 2019-12-13. பார்க்கப்பட்ட நாள் 2016-06-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீராபள்ளி&oldid=3567760" இலிருந்து மீள்விக்கப்பட்டது