மீரா கோசாம்பி

மீரா கோசாம்பி (Meera Kosambi) (24 ஏப்ரல் 1939 - 26 பிப்ரவரி 2015) ஓர் இந்தியச் சமூகவியலாளர் ஆவார்.

மீரா கோசாம்பி
பிறப்பு24 ஏப்ரல் 1939
இறப்பு26 பிப்ரவரி 2015
புனே, மகாராட்டிரம்
பணிசமூகவியலாளர்
பெற்றோர்தாமோதர் தர்மானந்தா கோசாம்பி (தந்தை)
உறவினர்கள்தர்மானந்த தாமோதர் கோசாம்பி (தாத்தா)

சுயசரிதை தொகு

புகழ்பெற்ற புத்திஜீவியும், வரலாற்றாசிரியரும், மொழியியலாளரும், புள்ளியியலாரும், கணிதவியலாளருமான தாமோதர் தர்மானந்தா கோசாம்பியின் இளைய மகளும், பௌத்த அறிஞரும் பாளி மொழி நிபுணருமான ஆச்சார்ய தர்மானந்த தாமோதர் கோசாம்பியின் பேத்தியும் ஆவார். இவரது தாயின் பெயர் நளினி கோசாம்பி (என்கிற 'மட்காவ்கர்) என்பதாகும். இவர் இஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார். இந்தியாவில் நகர்ப்புற சமூகவியல் மற்றும் பெண்கள் ஆய்வுகள் குறித்த பல புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

ஏறக்குறைய பத்தாண்டு காலமாக இவர் மும்பையின் எஸ்.என்.டி.டி மகளிர் பல்கலைக்கழகத்தில் பெண்கள் ஆய்வுகளுக்கான ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக பணியாற்றினார். இவர் 19ஆம் நூற்றாண்டின் இந்திய பெண்ணியவாதி ரமாபாயுடன் பணியாற்றினார். அவரது எழுத்துக்களை தொகுத்து, திருத்தி, மராத்தியிலிருந்து மொழிபெயர்த்தார். [1] இவர் தனது தாத்தா தர்மானந்தா தாமோதர் கோசாம்பியின் சுயசரிதையையும், அறிவார்ந்த எழுத்துக்களையும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

இறப்பு தொகு

இவர் 2015 பிப்ரவரி 26 அன்று புனேவில் இறந்தார். [2]

படைப்புகள் தொகு

  • 1986 Bombay in Transition : The Growth and Social Ecology of a Colonial City, 1880-1980, Stockholm, Sweden: Almqvist & Wiksell International
  • 1994 Women's Oppression in the Public Gaze: an Analysis of Newspaper Coverage, State Action and Activist Response (edited), Bombay: Research Centre for Women’s Studies, S.N.D.T. Women’s University
  • 1994 Urbanization and Urban Development in India, New Delhi: Indian Council of Social Science Research
  • 1995 Pandita Ramabai’s Feminist and Christian Conversions : Focus on Stree Dharma-neeti, Bombay: Research Centre for Women’s Studies, S.N.D.T. Women’s University
  • 1996 Women in Decision-Making in the Private Sector in India (with Divya Pandey and Veena Poonacha), Mumbai: Research Centre for Women’s Studies, S.N.D.T. Women’s University
  • 2000 Intersections : Socio-Cultural Trends in Maharashtra (edited), New Delhi: Orient Longman, New Delhi
  • 2000 Pandita Ramabai Through Her Own Words: Selected Works (translated, edited and compiled) New Delhi; New York: Oxford University Press
  • 2003 Pandita Ramabai's American Encounter : The Peoples of the United States (1889) (translated and edited), Bloomington: Indiana University Press.
  • 2007 Crossing Thresholds: Feminist Essays in Social History, Ranikhet: Permanent Black
  • 2011 Nivedan: The Autobiography of Dharmanand Kosambi, trans. by Meera Kosambi. Ranikhet: Permanent Black.
  • 2012 Women Writing Gender (edited, translated and with an introduction), Ranikhet: Permanent Black, ISBN 978-8178243368
  • 2013 Dharmanand Kosambi: The Essential Writings, ed. by Meera Kosambi. Orient Blackswan.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

  • * Video. Meera Kosambi speaks at the release of Dharmananda Kosambi: The Essential Writings (2013)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீரா_கோசாம்பி&oldid=3255032" இலிருந்து மீள்விக்கப்பட்டது