மீரா பைபி (Meira Paibi ஜோதி ஏந்தும் பெண்கள்) என்பது இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள ஒரு பெண்கள் சமூக இயக்கமாகும் . "குடிசார் சமூகத்தின் பாதுகாவலர்கள்" என்று குறிப்பிடப்படும் மீரா பைபி தற்போதைய கச்சிங் மாவட்டத்தில் 1977 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிறுவப்பட்டது. நகர வீதிகளில், பெரும்பாலும் இரவில் அணிவகுத்துச் செல்லும் போது பெண்கள் எடுத்துச் செல்லும் எரியும் கை விளக்குகளினால் இந்தப் பெயர் வந்தது. அவர்கள் சோதனை செய்தல் மற்றும் எதிர்ப்புகளின் போது அந்த விளக்கினை எரியச் செய்து தங்களது எதிர்ப்பினை காட்டுதல், துணை ராணுவம் மற்றும் ஆயுதப்படை பிரிவுகள் அப்பாவிகளுக்கு எதிராக செய்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்க இதனைப் பயன்படுத்துகின்றனர். சூழலியல் ரீதியாக, மீரா பைபி மணிப்பூர் மக்கள் சுயநிர்ணய உரிமை, அரசியல் சுயாட்சி மற்றும் சுதந்திரத்திற்காக போராடிய காலத்தில் நிறுவப்பட்டது.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கருத்துப்படி, மீரா பைபி "மணிப்பூர் மாநிலத்தின் கொடுமைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக போராடும் மிகப்பெரிய, அடித்தட்டு பொதுமக்களுக்கான இயக்கம்". இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான ஏ.கே.ஜானகி லீமா கூறுகையில், "போதைப்பொருள் துன்புறுத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் (AFSPA) ஆகியவற்றிற்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம். இவற்றுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். "என்று கூறினார்.

பின்னணி

தொகு

மீரா பைபி 1977 ஆம் ஆண்டில் மணிப்பூர், காக்சிங் மாவட்டத்தில் நிறுவப்பட்டது மீரா பைபி பெண்கள் "குடிசார் சமூகத்தின் பாதுகாவலர்கள்" துணை ராணுவம் மற்றும் ஆயுதப் படைகளின் அப்பாவிகளுக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தீர்வு காணும் போராட்டமாக அவர்கள் எரியும் கை விளக்குகளை ஏந்தி நகர வீதிகளில் ஊர்வலமாகச் செல்கின்றனர், இரவில் அடிக்கடி ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர், மணிப்பூர் மக்கள் சுயநிர்ணய உரிமை, அரசியல் சுயாட்சி மற்றும் சுதந்திரத்திற்காக போராடிய நேரத்தில் இந்த இயக்கம் உருவானது. [1] [2] [3]

முன்னோடி இயக்கங்கள்

தொகு

நுபி லான்

தொகு

மணிப்பூரில் பெண்களின் சமூக இயக்கங்கள் பிரித்தானிய ஆட்சிக்கு முந்தையது. இதுபோன்ற இரண்டு இயக்கங்கள், கூட்டாக நூபி லான் (மகளிர் போர்; பெண்கள் எழுச்சி) என்று அழைக்கப்படுகின்றன, [4] அரிசி ஏற்றுமதிக்கு எதிராக 1939 இல் இரண்டாவது இயக்கம் ஏற்பட்டது, இது உள்ளூர் மக்களிடையே பட்டினியை ஏற்படுத்தியது.[5] ஏறக்குறைய 99% பெண்கள், தர்பாரில் (அரசு அதிகாரம்) ஒரு மனுவை சமர்ப்பித்து அவர்கள் அமைதியாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த இயக்கம் அரிசி ஆலைகளை மூட கட்டாயப்படுத்தியது மற்றும் இறுதியில் அரிசி ஏற்றுமதியை நிறுத்துவதில் வெற்றி பெற்றது. [6] இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மாநிலத்தில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதில் நூபி லான் முன்னோடியாக இருந்தார். [7] 12 டிசம்பர் 1939 நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் "மகளிர் போர் தினம்" என மீரா பைபியால் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. [8]

நிசா பாண்டிசு

தொகு

நிசா பாண்டிசு பெண்கள் இயக்கம் 1970 களின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது. அதன் தோற்றம் மது மற்றும் போதை பழக்கத்திற்கு எதிராக போராடும் மைடி பெண்களின் செயல்பாட்டிற்கு காரணமாகும். [8] இம்பாலின் தெருக்களிலும், மணிப்பூரில் உள்ள மற்ற இடங்களிலும் பெண்கள் விளக்கேற்றி, போதையில் இருந்தவர்களைத் தண்டித்து, மதுக்கடைகளுக்கு தீ வைத்தனர். அவர்களின் நடவடிக்கைகள் மாநிலத்தில் தடைச் சட்டங்களை அமுல்படுத்த வழிவகுத்தது. [3] 1970 களின் பிற்பகுதியில் உள்நாட்டு அமைதியின்மை இருந்தது, [9] இது மணிப்பூரில் ஒரு கிளர்ச்சி இயக்கத்தை நிறுவியது. ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் அசாம் மற்றும் மணிப்பூர் சட்டம் 1958 துணை ராணுவப் படைகள் மற்றும் காவல்துறையினர் வரம்பற்ற சக்தியைப் பயன்படுத்தி கிளர்ச்சியைக் கையாள அனுமதித்தது, இதன் விளைவாக பல அப்பாவி இளைஞர்கள் கைது, சித்திரவதை செய்தனர் மற்றும் பலர் இறக்க நேரிட்டது.

சான்றுகள்

தொகு
  1. Thangjom, Lalzo S. (October 2013). "The Role of MEIRA PAIBI in Bringing about Social Change in the Manipuri Society: An Analysis". Journal of Social Welfare & Management 5 (4): 235. http://connection.ebscohost.com/c/articles/95644768/role-meira-paibi-bringing-about-social-change-manipuri-society-analysis. பார்த்த நாள்: 12 March 2016. 
  2. Parratt 2005.
  3. 3.0 3.1 Sunil, Oinam (10 January 2013). "TOI Social Impact Awards: Lifetime contribution — Meira Paibi". பார்க்கப்பட்ட நாள் 10 March 2016.Sunil, Oinam (10 January 2013). "TOI Social Impact Awards: Lifetime contribution — Meira Paibi". Times of India. Retrieved 10 March 2016.
  4. Thomas 2011.
  5. Laithangbam, Iboyaima (4 November 2014). "Women vigilantes of Manipur". The Hindu. http://www.thehindu.com/news/national/other-states/women-vigilantes-of-manipur-to-observe-meira-paibi-day-on-december-29/article6563476.ece. 
  6. Karna 1998.
  7. "Is the Meira Paibi Movement Facing Extinction?". 15 September 2013. Archived from the original on 11 March 2016. பார்க்கப்பட்ட நாள் 10 March 2016.
  8. 8.0 8.1 Laithangbam, Iboyaima (4 November 2014). "Women vigilantes of Manipur". The Hindu. http://www.thehindu.com/news/national/other-states/women-vigilantes-of-manipur-to-observe-meira-paibi-day-on-december-29/article6563476.ece. Laithangbam, Iboyaima (4 November 2014). "Women vigilantes of Manipur". The Hindu.
  9. Malindog, Anna (2 December 2014). "The Role of Women in Self-Determination Movements". பார்க்கப்பட்ட நாள் 12 March 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீரா_பைபி&oldid=3768184" இலிருந்து மீள்விக்கப்பட்டது