முகப்பேர் மார்கண்டேசுவரர் கோயில்

சென்னை முகப்பேரில் உள்ள சிவன் கோயிலா

மார்கண்டேசுவரர் திருக்கோயில் என்பது சென்னையில் உள்ள சிவன் கோயிலாகும். இது சென்னை மேற்கு முகப்பேரில் மங்கலேரி அருகேயுள்ள பாரதிதாசன் இரண்டாவது தெருவில் அமைந்துள்ளது

மார்கண்டேசுவரர் கோயில்
பெயர்
பெயர்:மகப்பேறீஸ்வரர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை, முகப்பேர்
கோயில் தகவல்கள்
சிறப்பு திருவிழாக்கள்:சிவராத்திரி வைகாசி விசாகம் சித்திரா பௌர்ணமி தை அமாவாசை ஆருத்ரா தரிசனம் மாசி மகம்

வரலாறு

தொகு

காஞ்சியைத் தலைநகராகக்கொண்டு தொண்டை மண்டலத்தை ஆண்ட சம்புவராயன் என்ற அரசன் தனக்கு வாரிசின்றி வருந்தினான். இக்குறையைத் தீர்க்கவேண்டி சிவனை வழிப்ட்டுவந்தான். ஒருநாள் ஈசன் அரசனின் கனவில் தோன்றி, “ஷீர (பாலாறு) நதிக்கரையில் மகாலட்சுமியும் சப்த மகரிசிகளும் மார்க்கண்டேய முனிவரும் பூசித்த லிங்கம் உள்ளது. அங்கு சிவ விஷ்ணு கோயில் அமைத்து வழிபடு, மழலைச் செல்வம் பெறுவாய்” என்று கூறினார். அதன்படி அந்த நதிக்கரைக்கு வந்த சம்புவராயன் அங்கு சிவலிங்கத்தைக் கண்டறிந்து நான்கு ஏக்கர் நிலப்பரப்பில், நான்கு ராஜகோபுரங்களுடன் கோயில் கட்டினான்.

ஈசனின் கருணையால் சம்புவராயருக்குப் பிள்ளைப்பேறு வாய்த்தது. இதனால் மகிழ்ந்த மன்னன் தனக்கு பிள்ளைப்பேறை அளித்த இத்தலத்துக்கு சந்தானமங்கலம் என்று பெயரிட்டார். மேலும் இந்த ஈசனை சித்தேஸ்வர், சிதானந்தேஸ்வரர் என்றும், அம்பிகையை மரகதவல்லி, சந்தான கௌரி என்றும் அழைத்தான்.[1]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலானது தொண்டை மண்டல பாணியில் கஜப்பிருஷ்டக் கருவறை அமைப்பு கொண்டதாக, கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தாமரை வடிவ ஆவுடையார் பீடத்தில் மார்க்கண்டேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இங்குள்ள இறைவி மரகதவல்லி என்ற பெயருடன் நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். இக்கோயிலில் வில்வ மரத்தடியில் ஏழடி உயரத்தில், நின்ற திருக்கோலத்தில் மகாலட்சுமித் தாயார் எழுந்தருளியுள்ளார். காஞ்சிபுரத்துக்கு அடுத்தபடியாக இங்கு சித்திர குப்தர் தனிச் சன்னிதியில் இரண்ட்டி உயரத்தில் நின்ற கோலத்தில் உள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. கீழப்பாவூர் கி. ஸ்ரீ முருகன் (21 பெப்ரவரி 2019). "சென்னையில் ஒரு திருக்கடையூர்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 28 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)