முகமது சல்மான்
முகமது சல்மான் (Mohammad Salman (பிறப்பு: ஆகஸ்டு 7, 1981, கராச்சி)[1] பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். வலதுகை மட்டையாளரான இவர் குச்சக் காப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் துணை வங்கி அணி, சசிலாபாத் கோட்ட துடுப்பாட்ட அணி, ஃபசிலாபாத் வோல்வ்ஸ், ஃபெடரல் ஏரியாஸ் லியோபர்ட், போர்ட் கசிம் அத்தாரிட்டி, பஞ்சாப் (பாக்கிஸ்தான்) அணி ஆகிய அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
தேர்வுத் துடுப்பாட்டம்
தொகு2011 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. மே 12 இல் புராவிடன்சில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 18 பந்துகளைச் சந்தித்த இவர் 4 ஓட்டங்களை எடுத்து பிசூவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 2 பந்துகளைச் சந்தித்த இவர் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் எல் பி ட பிள்யூ முறையில் டேரன் சமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 40 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.
2011 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. மே 20 இல் பசட்டராவில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் பின் இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 33 பந்துகளைச் சந்தித்த இவர் 13 ஓட்டங்களை எடுத்து பிசூவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்..பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 4 பந்துகளைச் சந்தித்த இவர் 8 ஓட்டங்கள் எடுத்து ராம்பால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 196 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[2]
ஒருநாள் போட்டிகள்
தொகு2011 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. ஏப்ரல் 23 இல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் மட்டையாடவும் பந்துவீசவும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பாக்கித்தான் அணி 8 இலக்குகளில் வெற்றி பெற்றது.[3]
2011 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி அயர்லாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.மே 30 இல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் மட்டையாடவும் பந்துவீசவும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பாக்கித்தான் அணி 5 இலக்குகளில் வெற்றி பெற்றது.
பன்னாட்டு இருபது20
தொகு2011 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. ஏப்ரல் 21 இல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 6 பந்துகளில் 5 ஓட்டங்கள் எடுத்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். பாக்கித்தான் அணி 7 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.
சான்றுகள்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- Player Profile: முகமது சல்மான் கிரிக்கெட்ஆர்க்கைவில் இருந்து
- கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: முகமது சல்மான்