முகமது சின்வார்

முகமது இப்ராகிம் அசன் சின்வார் (Mohammed Ibrahim Hassan Sinwar) (16 செப்டம்பர் 1975) காசாக்கரையின் பாலஸ்தீன போராளி இயக்கமான ஹமாஸ் குழுவின் அல்-காசாம் படையணியின்[1] ஒரு முக்கியப் படைத்தலைவர் ஆவார். இவர் 2023 இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதல்கள்[2] போன்ற இஸ்ரேல்-ஹமாஸ் போர்களில் கலந்து கொண்டவர்

முகமது சின்வார்
சுதேசியப் பெயர்
محمد السنوار
பிறப்பின்போதான் பெயர்முகமது இப்ராகிம் அசன் சின்வார்
பட்டப்பெயர்(கள்)அபு இப்ராகிம்
பிறப்பு16 செப்டம்பர் 1975 (1975-09-16) (அகவை 49)
கான் யூனிசு, காசாக்கரை
சார்புஹமாஸ் (அல்-கசாம் படையணி)
சேவைக்காலம்1991 - தற்போது வரை
தரம்படைத்தலைவர்
போர்கள்/யுத்தங்கள்
உறவினர்யாகியா சின்வார் (சகோதரர்)

ஹாமாசின் தலைவரும், 2023 இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவரும், 16 அக்டோபர் 2023 அன்று இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டவருமான யாகியா சின்வாரின் உடன் பிறந்த சகோதரர் முகமது சின்வார் ஆவார். நவம்பர் 2024 முதல் வாரத்தில் முகமது சின்வார் அலுவலகத்தை இசுரேலிய பாதுகாப்புப் படைகள் சோதனை இட்டது.[3]

போர்த் தொழில்

தொகு

2005ஆம் ஆண்டில் முகமது சின்வார் ஹமாஸ் அமைப்பின் கான் யூனிசு படையணி தளபதியாக பொறுப்பேற்றார். 2006ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு மோதலில் முகமது சின்வார், இஸ்ரேல் இராணுவ வீரர் கிலாத் சாலித்தை போர்க் கைதியாக முகமது சின்வார் பிடித்து வைத்தார். 2011ஆம் ஆண்டில் போர் கைதிகள் பரிமாற்றத்தின் போது, இஸ்ரேலில் சிறையில் இருந்த யாகியா சின்வார் உள்ளிட்ட 1027 ஹமாஸ் போராளிகளுக்கு ஈடாக, இஸ்ரேல் இராணுவ வீரர் கிலாத் சாலித் விடுவிக்கப்பட்டார்.[4]

யாகியா சின்வாரின் இறப்பை அடுத்து, முகமது சின்வார் ஹமாஸ் அமைப்பின் அடுத்த தலைவராக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறார்.[5]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Muhammad Al-Sanwar, member of the Qassam Brigades' Staff and one of the architects of the "Shalit deal"". Al Jazeera (in அரபிக்). 18 October 2022. பார்க்கப்பட்ட நாள் 29 December 2023.
  2. Marks Eglash, Ruth (17 December 2023). "Israel's most wanted: 'Butcher of Khan Younis,' other Hamas terrorists now in IDF's sights". Fox News (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 29 December 2023.
  3. IDF raids Hamas top leader Yahiya Sinwar’s brother’s office
  4. "Report: Sinwar's brother also met with hostages in Gaza". The Times of Israel (in அமெரிக்க ஆங்கிலம்). 28 November 2023. பார்க்கப்பட்ட நாள் 29 December 2023.
  5. Who is Mohammad Sinwar and could he become the next Hamas leader?
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_சின்வார்&oldid=4123110" இலிருந்து மீள்விக்கப்பட்டது