முகம்மது தசுலீமுத்தீன்
முகமது தசுலிமுதீன் (Mohammed Taslimuddin) இந்தியவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1943 ஆம் ஆண்டு சனவரி மாதம் 4 ஆம் தேதி இவர் பிறந்தார். இராசுட்ரிய சனதா தளம் கட்சியில் ஒரு மூத்த தலைவராக கருதப்பட்டார். இவர் பீகார் மாநிலம் அரரியா மாவட்டத்தில் உள்ள சிசௌனா கிராமத்தைச் சேர்ந்தவராவார். தனது அரசியல் வாழ்க்கையை ஒரு சர்பஞ்சாகத் தொடங்கினார். 1969 ஆம் ஆண்டில் முதல் முறையாக பீகார் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். எட்டு முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 1989 ஆம் ஆண்டில் இவர் முதன்முதலில் பூர்ணியா தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996, 1998 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் கிசன்கஞ்சு தொகுதியில் இருந்து மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரரியா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் 16 ஆவது மக்களவையில் இறுதியாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பணிபுரிந்தார்.[1]
முகமது தசுலிமுதீன் Mohammed Taslimuddin | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 16 மே 2014 – 17 செப்டம்பர் 2017 | |
முன்னையவர் | பிரதீப் குமார் சிங் |
பின்னவர் | சர்பாசு ஆலம் |
தொகுதி | அரரியா மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சிசௌனா, பீகார், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 4 சனவரி 1943
இறப்பு | 17 செப்டம்பர் 2017 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 74)
அரசியல் கட்சி | இராசுட்ரிய சனதா தளம் |
துணைவர் | அக்டரி பேகம் |
பிள்ளைகள் | 7 |
வாழிடம் | அரரியா |
As of 17 செப்டம்பர், 2017 |
சென்னையில் சுவாசக் கோளாறுக்காக சிகிச்சை பெற்று வந்த முகமது தசுலிமுதீன் தன்னுடைய 74 ஆவது வயதில் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று இறந்தார். சிசௌனா இயோகிகாட்டில் உள்ள பிறந்த இடத்தில் அரசு மரியாதையுடன் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.[2]
அரசியல் வரலாறு
தொகுமுகமது தசுலிமுதீன் 1943 ஆம் ஆண்டு பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள சிசௌனா கிராமத்தில் பிறந்தார். 1969 ஆம் ஆண்டில் , முதன்முறையாக காங்கிரசு கட்சியின் வேட்பாளராக பீகார் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989 ஆம் ஆண்டில் சனதா தளம் கட்சியின் வேட்பாளராக பூர்ணியா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1996, 1998, 2004 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளிலும் பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் இருந்து சனதா தள வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1995 ஆம் ஆண்டு இயோகிகாட்டு தொகுதியில் சமாச்வாதி கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1996 ஆம் ஆண்டில் கிசன்கஞ்சு தொகுதியில் சனதா தளம் சார்பில் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1996 ஆம் ஆண்டு தேவகவுடா ஆட்சியில் மத்திய உள்துறை இணை அமைச்சராக இருந்தார்.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Veteran RJD leader Mohammad Taslimuddin passes away". PTI. The Indian Express. 17 September 2017. http://indianexpress.com/article/india/veteran-rjd-leader-mohammad-taslimuddin-passes-away-4847895/. பார்த்த நாள்: 18 September 2017.
- ↑ "Veteran RJD leader Mohammad Taslimuddin dies". PTI. India Today. 17 September 2017. http://indiatoday.intoday.in/story/veteran-rjd-leader-mohammad-taslimuddin-dies/1/1049988.html. பார்த்த நாள்: 18 September 2017.
- ↑ "Mohammed Taslimuddin, RJD strongman and voice of Seemanchal - The Financial Express". financialexpress.com. financialexpress. 18 September 2017. https://www.financialexpress.com/india-news/who-was-mohammed-taslimuddin-rjd-strongman-and-voice-of-seemanchal-who-died-at-74-on-sunday/859970/.
- ↑ "RJD MP Mohammad Taslimuddin dies". ABP news. பார்க்கப்பட்ட நாள் 14 August 2023.