முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்
முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்[1] அல்லது முகம்மது நபியின் பண்புகளின் பெயர்கள்[2] என்பது இசுலாமிய இறைத்தூதர் முகம்மது நபியின் பல்வேறு சிறப்பு பெயர்களை முசுலிம்களால் அழைக்கப்படுவதாகும். இந்தப் பெயர்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
மரியாதைக்குரிய அடைமொழிப் பெயர்கள்
தொகுமுகம்மது நபியின் பாராட்டுப் பெயர்கள் அல்லது அடைமொழிப் பெயர்கள் வருமாறு:
- நபி - இறைத்தூதர்.
- ரசூலுல்லாஹ் - அல்லாஹ்வின் தூதர்.
- ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் - அல்லாஹ் முகம்மது நபி அவர்கள் மீது கருணையும் சாந்தியும் பொழிவானாக.
- ஹபீப் - அன்பானவர்.
- முஸ்தபா - தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[3]
- அமீன் - நம்பிக்கையாளர்.[4]
- சாதிக் - நேர்மையாளர்.[5]
- ரவூஃப் - கருணையாளர்.[6]
- உஸ்வத்துல் ஹஸனா - நன்னடத்தையாளர்.[7]
- அல் இன்சான் அல் காமில் - முழுமையானவர்.[8]
- கைருல் பஷர் - மனிதர்களின் சிறந்தவர்.[9]
- காத்தமுன் நபி - இறுதி இறைத்தூதர்.[10]
- ரஹ்மத்துன் லில் ஆலமீன் - அகிலத்தின் அருட்கொடை.[11]
- ஷாஹீத் - சாட்சியாளர்.[12]
- முபஷ்ஷிர் - நன்மாராயங் கூறுபவர்.[13]
- நாதிர் - அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்.[13]
- முதக்கிர் - நினைவூட்டுபவர்.[14]
- தாஇ - இறை அழைப்பாளர்.[15]
- பஷீர் - அறிவிப்பாளர்.[16]
- நூர் - ஒளி பொருந்தியவர்.[17]
- சிராஜுல் முனீர் - ஒளி கொடுக்கும் விளக்கு போன்றவர்.[18]
- கரீம் - பெருந்தன்மையள்ளவர்.[19]
- நிஹ்மத்துல்லாஹ் - தெய்வீக அருளைப் பெற்றவர்.[20]
- உம்மி நபி - படிக்காத இறைத்தூதர்.[21]
- முஜம்மில் - போர்த்தியிருப்பவர்.[22]
- முத்தசீர் - மறைவான ஞானம் கொண்டவர்.[23]
- ஆகிப் - இறுதி நபி.[24][25]
- முதவக்கில் - இறை நம்பிக்கையாளர்.[26]
- மாஹி - இறை நிராகரிப்பாகளர்களை அழிப்பவர்.[27]
- முஅஜ்ஜஜ் - வலிமை மிக்கவர்.
- முவக்கர் - பிரமிக்க வைத்தவர்.
- ஃபாதிஹ் - ஆரம்பிப்பவர்.
- ஹசீர் - கியாம நாளில் முதலில் எழுப்பப்படுபவர்.[25]
- ஷாபி - பரிந்துபேசுபவர்.[28][29]
- முஸாபா - சிபாரிசு செய்பவர்.[30]
- முஹ்ஜி - நலம் பேணுபவர்.
உறவுமுறை சிறப்புப் பெயர்கள்
தொகு- அபுல் காசிம் - காசிமின் தந்தை.
- தாஹிர் - பரிசுத்தமானவர்.
- தையுப் - இனிமையானவர்.
- அபு அப்துல்லாஹ் - அப்துல்லாவின் தந்தை.
- அபுல் இப்ராஹிம் - இப்ராஹிமின் தந்தை.
- 'இப்னு அப்துல் முத்தலிப் - அப்துல் முத்தலிபின் பேரர்.
மற்ற சிறப்புப் பெயர்கள்
தொகு- அகமது -புகழப்பட்டவர்.[31]
- ஹமித் - இறைவனை துதிப்பவர்.
- மஹ்மூத் - புகழுக்குரியவர்.
- அப்துல்லாஹ் - அல்லாஹ்வின் அடிமை.[32]
- இறுதித் தூதர் [33][34]
- இறுதி நபி[35][36]
- நடமாடும் குர்ஆன்[37]
துருக்கி நாட்டில் முகம்மது நபி புனிதர் முகமது என அழைக்கப்படுகின்றார்.[38] ஈரான் நாட்டில் பயகம்பர் (தூதர்) என அழைக்கப்படுகின்றார்.
ஆங்கில மொழியில் முகம்மது என்ற பெயருக்கு பின்னால் PBUH (peace be upon him) என எழுதப்படுகிறது.[39]
தமிழ் மொழியில் முகம்மது என்ற பெயருக்கு பின்னால் அவர்மீது அமைதி உண்டாகட்டும் எனப் பொருள்படும் (ஸல்) (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் - (அரபு மொழி: صلى الله عليه وسلم)) என்ற அரபுத்தமிழ் எழுதப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Names and Titles of Prophet Muhammad". Journey of a Seeker Of Sacred Knowledge. January 20, 2012. http://www.seekerofthesacredknowledge.wordpress.com/2012/01/20/names-of-prophet-muhammad-peace-upon-him/. பார்த்த நாள்: January 18, 2013.
- ↑ Yeniterzi, Emine. "The Names and Attributes of Prophet Muhammad in Divine Literature". Last Prophet. http://www.lastprophet.info/the-names-and-attributes-of-prophet-muhammad-in-divan-literature. பார்த்த நாள்: January 18, 2013.
- ↑ திருக்குர்ஆன் 22:75
- ↑ ஸஹீஹ் புகாரி, 4:52
- ↑ திருக்குர்ஆன் 33:22
- ↑ திருக்குர்ஆன் 9:128
- ↑ திருக்குர்ஆன் 68:4
- ↑ "Ibn al-'Arabi, Muhyi al-Din (1164-1240)". Muslim Philosophy. பார்க்கப்பட்ட நாள் January 18, 2013. 4. The 'perfect man' and the Muhammadan reality
- ↑ திருக்குர்ஆன் 33:21
- ↑ திருக்குர்ஆன் 33:40
- ↑ திருக்குர்ஆன் 21:107
- ↑ திருக்குர்ஆன் 33:45
- ↑ 13.0 13.1 திருக்குர்ஆன் 11:2
- ↑ திருக்குர்ஆன் 88:21
- ↑ திருக்குர்ஆன் 12:108
- ↑ திருக்குர்ஆன் 2:119
- ↑ திருக்குர்ஆன் 5:15
- ↑ திருக்குர்ஆன் 33:46
- ↑ திருக்குர்ஆன் 69:40
- ↑ திருக்குர்ஆன் 16:83
- ↑ திருக்குர்ஆன் 7:157–158
- ↑ திருக்குர்ஆன் 73:01
- ↑ திருக்குர்ஆன் 74:01
- ↑ ஸஹீஹ் முஸ்லிம், 4:1859
- ↑ 25.0 25.1 ஸஹீஹ் புகாரி, 4:56
- ↑ திருக்குர்ஆன் 9:129
- ↑ ஸஹீஹ் புகாரி, 4:56
- ↑ ஸஹீஹ் புகாரி, 9:93
- ↑ திருக்குர்ஆன் 3:159திருக்குர்ஆன் 4:64திருக்குர்ஆன் 60:12
- ↑ திருக்குர்ஆன் 19:87திருக்குர்ஆன் 20:109
- ↑ திருக்குர்ஆன் 61:6
- ↑ திருக்குர்ஆன் 25:1
- ↑ Muhammad and Christ, Maulana Muhammad Ali - 2011
- ↑ Muhammad The Messenger of God: M. Fethullah Gülen - 2014
- ↑ Amīn Aḥsan Iṣlāḥī, Mohammad Saleem Kayani - 2007, Tafsir of Surah al-Fātihan and Surah al-Baqarah - Page 244
- ↑ Islam for Beginners: What You Wanted to Ask But Didn't, p 13, Mirza Yawar Baig - 2011
- ↑ Rahid, Qasim (1 March 2015). "9 Questions You Should Ask Yourself Before Converting to Islam". londondance.com. http://www.huffingtonpost.com/qasim-rashid/9-questions-you-should-as_b_6413228.html. பார்த்த நாள்: 8 January 2015.
- ↑ Schimmel, Annemarie (1990). Islamic Names: An Introduction (Islamic Surveys). Edinburgh University Press. p. 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85224-563-7.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ "Islam / Muslim". Woodlands Junior. Archived from the original on ஜூன் 14, 2012. பார்க்கப்பட்ட நாள் January 18, 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
நபி அவர்களின் சிறப்பு பெயர்கள் குர்ஆனில் எத்தனை இடத்தில் வருகிறது
தொகு- Chiabotti, Francesco, Names, in Muhammad in History, Thought, and Culture: An Encyclopedia of the Prophet of God (2 vols.), Edited by C. Fitzpatrick and A. Walker, Santa Barbara, ABC-CLIO, 2014. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1610691776