முகம்மது மியான் மன்சூர் அன்சாரி
முகம்மது மியான் மன்சூர் அன்சாரி (Muhammad Mian Mansoor Ansari) (10 மார்ச் 1884 - 11 சனவரி 1946) இவர் இந்திய சுதந்திர இயக்கத்தின் தலைவராகவும் அரசியல் ஆர்வலராகவும் இருந்தார். இவர் 1868 இல் தாருல் உலூம் தேவ்பந்த்தின் நிறுவனர்களில் ஒருவரான முகம்மது காசிம் நானாவுடவியின் பேரன் ஆவார். [1]
முகம்மது மியான் மன்சூர் அன்சாரி | |
---|---|
சுய தரவுகள் | |
பிறப்பு | 1884 சகாரன்பூர், வட-மேர்கு மாகாணங்கள், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இறப்பு | 11 சனவரி 1946 | (அகவை 61–62)
சமயம் | இசுலாம் |
Era | பிரித்தானியாவின் இந்திய பேரரசு |
Movement | தியோபந்தி |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇவர், உத்தரப் பிரதேசம், சஹரன்பூரில் அன்சாரி என்ற உன்னத குடும்பத்தில் பிறந்தார். இவர் அப்துல்லா அன்சாரி வீட்டில் வளர்ந்தார். மன்சூர் அன்சாரி தாருல்-உலூம் தியோபந்திற்குத் திரும்பி படிப்படியாக பான்-இஸ்லாமிய இயக்கத்தில் ஈடுபட்டார். முதலாம் உலகப் போரின் போது இவர் முகமது ஹசன் தியோபந்தி தலைமையிலான தியோபந்தி பள்ளியின் தலைவர்களில் ஒருவராக இருந்தார். இந்தியாவில் ஒரு பான்-இஸ்லாமிய புரட்சிக்கான பட்டுக் கடிதம் இயக்கம் என்று அறியப் பட்ட மைய சக்திகளின் ஆதரவைப் பெற இந்தியாவை விட்டு வெளியேறினார் . [2]
பட்டுக்கடித இயக்கம்
தொகுபட்டுக் கடித இயக்கம் என்பது உதுமானிய துருக்கி, செருமனி மற்றும் ஆப்கானித்தானுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் இந்தியாவை பிரிட்டிசு ஆட்சியிலிருந்து விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டு 1913 மற்றும் 1920க்கும் இடையில் தியோபந்தி தலைவர்கள் ஏற்பாடு செய்த ஒரு இயக்கமாகும். ஆப்கானித்தானில் இருந்த தியோபந்தி தலைவர்களில் ஒருவரான உபைதுல்லா சிந்தி என்பவர் பாரசீகத்திலிருந்த மற்றொரு தலைவரான முகமது அசன் தியோபந்திக்கு எழுதிய கடிதங்களை பஞ்சாப் குற்ற விசாரணைத் துறை கைப்பற்றியது. கடிதங்கள் பட்டுத் துணியில் எழுதப்பட்டிருந்தன., எனவே இதற்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. [2]
பின் வரும் வருடங்கள்
தொகுமுதல் உலகப் போரின்போது ஆப்கானித்தான் அமீர் ஹபீபுல்லா கானை அணிதிரட்ட மன்சூர் அன்சாரி காபூலுக்குச் சென்றார். அவர் 1915 திசம்பரில் காபூலில் அமைக்கப்பட்ட இந்திய தற்காலிக அரசாங்கத்தில் சேர்ந்தார், மேலும் போர் முடியும் வரை ஆப்கானித்தானில் இருந்தார். அவர் உருசியாவுக்குச் சென்று துருக்கியில் இரண்டு ஆண்டுகள் கழித்தார். பல நாடுகளைக் கடந்து சென்றார்.
தாருல் உலூம் தேவ்பந்திலிருந்து வந்த முஸ்லீம் குருமார்கள் தலைமையிலான இந்திய சுதந்திர இயக்கத்தின் பிரிவின் மிகவும் தீவிரமான மற்றும் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இவர் இருந்தார். [2]
1946 ஆம் ஆண்டில், இந்திய தேசிய காங்கிரசு இவரை இந்தியா திரும்புமாறு கேட்டுக்கொண்டது, பிரித்தானிய அரசாங்கம் இவருக்கு அனுமதி அளித்தது. ஆனால் இவர் காபூலில் தங்க முடிவு செய்தார். அங்கு இவர் தப்சீர் ஷேக் மஹ்முதுல் ஹசன் தியோபந்தி (காபூலி தப்சீர் என்று அழைக்கப்படுபவர்) கற்பித்தல் மற்றும் மொழிபெயர்ப்பதற்கான ஒரு திட்டத்தைத் தொடங்கினார்.
இறப்பு
தொகு1946 ஆம் ஆண்டில், இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு 1946 சனவரி 11 அன்று ஆப்கானித்தானின் நங்கர்கார் மாகாணத்தின் ஜலாலாபாத்தில் இறந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Muhammad Mian Mansoor Ansari on GoogleBooks website Retrieved 28 August 2019
- ↑ 2.0 2.1 2.2 Fight for Freedom on deoband.com website Retrieved 28 August 2019
- ↑ Muhammad Mian Mansoor Ansari on GoogleBooks website Retrieved 28 August 2019