முகம் (சிற்றிதழ்)

தமிழ்நாட்டு சிற்றிதழ்

முகம் என்பது தமிழ், தமிழன், தமிழ்நாடு, மனிதநேயம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொன்டு வெளியான தமிழ்ச் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியராக முகம் மாமணி இருந்தார்.[1] ஆ. இரா. வேங்கடாசலபதி 1983 இல் முகம் இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். இந்த இதழின் அட்டைப்படத்தில் தமிழ் அறிஞர்களின், ஆளுமைகளின் ஒளிப்படத்தை தாங்கி வெளிவந்தது.[2] முகம் இதழின் வழியாக பல எழுதாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

இதன் முதல் இதழ் 1983 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளிவந்தது. அதன் பிறகு தடையின்றி தொடர்ந்து 269 இதழ்கள் வெளிவந்தது (2005 ஆகத்து வரை). இந்த இதழில் அப்படி அட்டைப் பட்டத்தில் இடம்பெறும் ஆளுமை பற்றிய கட்டுரை ஒவ்வொரு இதழிலும் வெளியானது. மேலும் சிறுகதைகளும் வெளியாயின. பத்திரிக்கையின் ஆசிரியரான முகம் மாமணி கிந்தனார் பதில்கள் எனும் பெயரில் கேள்வி - பதில் பகுதியை எழுதினார். [3] மாமணி கதைகளும் எழுதினார், மேலும் அவர் எண்ணதாசன் என்ற பெயரில் கவிதைகள் எழுதினார். வெங்கடேசன் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள் எழுதினார்.[4]

குறிப்புகள்

தொகு
  1. "மூத்த பத்திரிகையாளர் முகம் மாமணி காலமானார்". Hindu Tamil Thisai. Retrieved 2022-03-01.
  2. எழுத்தாளர் ‘முகம்’ மாமணி காலமானார், செய்தி, தீக்கதிர், பிப்ரவரி 24, 2022
  3. "Andhimazhai - அந்திமழை - 'முகம்' - சிற்றிதழ் அறிமுகம் 4". andhimazhai.com. Retrieved 2022-06-12.
  4. வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 272–277. Retrieved 13 நவம்பர் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்_(சிற்றிதழ்)&oldid=3448575" இலிருந்து மீள்விக்கப்பட்டது