முகிலன்குடியிருப்பு
முகிலன்குடியிருப்பு (Muhilankudieruppu) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அகத்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது நாகர்கோவிலிலிருந்து 4 கி.மீ தொலைவிலும் கன்னியாகுமரியிலிருந்து 16 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கிராமமானது நெல் வயல்களாலும் தென்னந்தோப்புகளாலும் அழகிய அரபிக்கடலாலும் சூழ்ந்துள்ளது. இங்கு வருடம் முழுவதும் அழகிய காலநிலை நிலவுகிறது. வடகிழக்கு பருவக்காற்றாலும் தென்மேற்குப்பருவக்காற்றாலும் மழைபெறுகிறது. இவ்வூரில் இரண்டு பிரிவுகள் உள்ளன. மேல முகிலை மற்றும் கீழ முகிலை ஆகும். கீழ முகிலை மக்கள் தேவி முத்தாரம்மனை வழிபடுகின்றனர். மேல முகிலை மக்கள் சுவாமி ஸ்ரீமான் ஐயா நாராயணசாமியை வழிபடுகின்றனர். சுமார் 3000 மக்கள் இங்கு வசிக்கின்றனர். பெரும்பான்மையான மக்கள் நல்ல கல்வியறிவு படைத்தவர்கள். புனித தலமான சாமித்தோப்பு பதி இங்கிருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Wikipedia, Source: (2013-09). "Villages in Kanyakumari District: Ambalakadai, Ambankalai, Atchenkulam, Azhagappapuram, Chenkody, Chinnathurai, Kappukad, Karuparai, Kattathurai, Kesa" (in ஆங்கிலம்). General Books. பார்க்கப்பட்ட நாள் 2023-05-14.
{{cite web}}
: Check date values in:|date=
(help)CS1 maint: extra punctuation (link)