முகிழ்

2021இல் வெளியான இந்தியத் திரைப்படம்

முகிழ் ( Mughizh ; ஒரு வாசனையின் பிறப்பு ) என்பது கார்த்திக் சுவாமிநாதன் இயக்கிய ஒரு இந்திய தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும். இந்தப் படத்தை விஜய் சேதுபதி தனது விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் பதாகையின் கீழ் தயாரித்திருந்தார். மேலும் ஒரு முன்னணி பாத்திரத்தில் நடித்தும் உள்ளார். அவரது மகள் சிறீஜா, ரெஜினா கசாண்ட்ரா ஆகியோரும் உடன் நடித்துள்ளனர். படத்துக்கு ரேவா இசையமைத்துள்ளார். சத்யா பொன்மர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர். கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்.[1] படம் 8 அக்டோபர் 2021 அன்று திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[2]

முகிழ்
இயக்கம்கார்த்திக் சுவாமிநாதன்
தயாரிப்புவிஜய் சேதுபதி
கதைகார்த்திக் சுவாமிநாதன்
இசைரேவா
நடிப்பு
ஒளிப்பதிவுசத்யா பொன்மர்
படத்தொகுப்புஆர். கோவிந்தராஜ்
கலையகம்
  • விஜய் சேதுபதி
  • பாக்கெட் மணி பிலிம்சு
வெளியீடுஅக்டோபர் 8, 2021 (2021-10-08)
ஓட்டம்62 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

  • விஜயாக விஜய் சேதுபதி
  • காவ்யாவாக சிறீஜா விஜய் சேதுபதி
  • ராதிகாவாக ரெஜினா கசாண்ட்ரா
  • காவ்யாவின் செல்ல நாயாக ஸ்கூபி
  • மருதுபாண்டியன்
  • மரியா அமிர்தராஜ் அலுவலக சக ஊழியராக
  • இருச்சக்கர வாகனம் ஓட்டுபவராக பிரவீன் முத்துரங்கனா
  • நிழல், மைலோ, சிம்பா, பிரவுனி, ஷீபா, பட்டி, பிளாக்கி -ஆகியோர் நண்பர்களாக

வெளியீடு தொகு

சனவரி 1, 2021 அன்று, புத்தாண்டு தினத்தை ஒட்டி, தயாரிப்பாளர்கள் படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டனர். இது பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான வரவேற்பைப் பெற்றது.[3] வரவேற்பைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் அமேசான் பிரைம் வீடியோ, நெற்ஃபிளிக்சு, ஹாட் ஸ்டார் , ஜீ5 போன்ற மேலதிக ஊடக சேவை தளங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினர். மற்ற குறும்படங்கள் போல யூடியூப் மூலம் நேரடியாக வெளியிடப்படவில்லை.[4][5] இருப்பினும், பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றதால், குழு யூடியூபில் நேரடியாக வெளியிட உத்தேசித்தது.[6] மேலும், படத்தை தொலைக்காட்சியில் சந்தைப்படுத்தவும் குழு திட்டமிட்டது.[6] பின்னர், படம் 8 அக்டோபர் 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று விஜய் சேதுபதி அறிவித்தார்.[7] 30 வினாடிகள் கொண்ட பட முன்னோட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி,பட வெளியீட்டு தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு வெளியிடப்பட்டது. இது படம் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தியது.[7] குறைந்த கால அளவு (62 நிமிடங்கள்) திரையரங்குகளில் வெளியான முதல் தமிழ்ப் படம் இதுவாகும்.[7]

சான்றுகள் தொகு

  1. "நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் 'முகிழ்'". Hindu Tamil Thisai. Archived from the original on 18 May 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-05-18.
  2. "Mughizh: All you need to know about Vijay Sethupathi's movie!". www.moviecrow.com. Archived from the original on 29 October 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-10-12.
  3. "Watch: Vijay Sethupathi shares trailer of daughter Sreeja's debut in 'Mugizh'". The News Minute (in ஆங்கிலம்). 2021-01-02. Archived from the original on 18 May 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-05-18.
  4. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  5. "Vijay Sethupathi's one hour web film 'Mugizh' to release on OTT!". Sify (in ஆங்கிலம்). Archived from the original on 18 May 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-05-18.
  6. 6.0 6.1 "ஓடிடியில் நேரடியாக வெளியாகும் விஜய் சேதுபதி நடித்த படம்". Dinamani. Archived from the original on 29 June 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-06-23.
  7. 7.0 7.1 7.2 "Vijay Sethupathi confirms theatrical release date of his new unique movie - Tamil News". IndiaGlitz.com. 2021-10-01. Archived from the original on 1 October 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-10-12.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகிழ்&oldid=3709739" இலிருந்து மீள்விக்கப்பட்டது