முக்கு காசி ரெட்டி

இந்திய அரசியல்வாதி

முக்கு காசி ரெட்டி(Mukku Kasi Reddy) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கனிகிரி தொகுதியைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். தனது அரசியல் வாழ்க்கையை இவர் 1983 ஆம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தொடங்கினார். என்.டி. இராமாராவின் முதல் அமைச்சரவையில் பட்டு வளர்ப்பு அமைச்சராக முக்கு காசி ரெட்டி பணியாற்றினார். 1983, 1985, 1994 [1] [2] [3] ஆம் ஆண்டுகளில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராககனிகிரி சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். 2001 ஆம் ஆண்டில் சில்லா பரிசத்து தேர்தலில் வெற்றி பெற்றார். 2006 ஆம் ஆண்டு வரை பிரகாசம் மாவட்டத்தின் தலைவராக பணியாற்றினார் [4] [5] 2009 ஆம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகினார். [6] [7] [8] [9]

2010 ஆம் ஆண்டு செகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எசுஆர் காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். [10] [11] [12]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்கு_காசி_ரெட்டி&oldid=4109003" இலிருந்து மீள்விக்கப்பட்டது