முடிகொண்டான் கோதண்டராமர் கோயில்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இராமர் கோயில்

முடிகொண்டான் கோதண்டராமர் கோயில், தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராமர் கோயிலாகும். பஞ்சராமர் தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

கோதண்டராமர் கோயில்
முடிகொண்டான் கோதண்டராமர் கோயில் is located in தமிழ் நாடு
முடிகொண்டான் கோதண்டராமர் கோயில்
தமிழ்நாட்டில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவாரூர்
அமைவு:முடிகொண்டான்,
ஆள்கூறுகள்:10°54′9″N 79°38′35.8″E / 10.90250°N 79.643278°E / 10.90250; 79.643278
கோயில் தகவல்கள்
தீர்த்தம்:இராம தீர்த்தம், கல்யாண புஷ்கரணி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டடக்கலை
இணையதளம்:mudikondan.org

அமைவிடம்

தொகு

இக்கோயில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில், மகுடவர்தனபுரம் எனும் முடிகொண்டானில் உள்ளது.[1]

மூலவர்

தொகு

ராமரின் வருகையைப் பற்றி பரதரிடம் சொல்வதற்காக ஆஞ்சநேயர் சென்றுவிட்ட காரணத்தால் இங்கு மூலவராக ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோர் மட்டுமே உள்ளனர். ராமர் கோதண்டராமராக கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். அவருக்கு வலப்புறம் சீதையும், இடப்புறம் லட்சுமணனும் உள்ளனர்.[1]

விழாக்கள்

தொகு

புரட்டாசி சனிக்கிழமை, ராம நவமி போன்ற திருவிழாக்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு