முதலாம் ஜெலாசியுஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை முதலாம் ஜெலாசியுஸ் (Pope Gelasius I), கி.பி 1 மார்ச் 492 முதல் நவம்பர் 19, 496 இல் தான் இறக்கும் வரை திருத்தந்தையாக இருந்தவர்.[2] இவர் பேர்பர் இனக்குழுவைச் சேர்ந்த மூன்றாவது மற்றும் இறுதி திருத்தந்தையாக இருக்கலாம். [3] இவர் சிறந்த எழுத்தாளர்.[4] இதனால் திருத்தந்தை மூன்றாம் ஃபெலிக்ஸ் இவரை திருப்பீட ஆவணங்களை தயாரிப்பதில் பணியமர்த்தினார். இவர் தனது ஆட்சியின் போது கத்தோலிக்க மரபை பின்பற்றுவதில் உறுதி காட்டினார், திருத்தந்தையின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் கடுமையாக கோரினார், இதன் விளைவாக, மேற்கு மற்றும் கிழக்கு திருச்சபைகளுக்கிடையிலான பிளவு அதிகரித்தது.

திருத்தந்தை புனித
முதலாம் ஜெலாசியுஸ்
Pope Gelasius I.jpg
ஆட்சி துவக்கம்1 மார்ச் AD 492
ஆட்சி முடிவு19 நவம்பர் AD 496
முன்னிருந்தவர்மூன்றாம் ஃபெலிக்ஸ்
பின்வந்தவர்இரண்டாம் அனஸ்தாசியுஸ்
பிற தகவல்கள்
பிறப்புஆப்ரிக்கா அல்லது உரோம்[1]
இறப்பு19 நவம்பர் 496(496-11-19)
உரோம், Ostrogothic Kingdom
புனிதர் பட்டமளிப்பு
திருவிழா21 நவம்பர்[2]
ஜெலாசியுஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

பிறந்த இடம்தொகு

இவர் எங்கு பிறந்தார் என்பதில் குழப்பங்கள் உள்ளன: லிபர் போன்டிஃபிகலிஸின் கூற்றுப்படி இவர் ஆப்பிரிக்காவில் பிறந்தார், ஆயினும் உரோமை பேரரசர் அனஸ்தாசியூசுக்கு எழுதிய கடிதத்தில் தான் "ஒரு உரோமைக் குடிமகனாகப்" பிறந்ததாக குறிப்பிடுகின்றார்.[5] ஜே கொன்னாட் என்னும் அறிஞர் வேண்டல்களின் படையெடுப்புக்கு முன் இவர் உரோமையரின் ஆட்சியில் இருந்த ஆப்ரிக்க பகுதிகளில் பிறந்திருக்கலாம் என்கின்றார்.[6] [7]

குறிப்புகள்தொகு

  1. Browne, M. (1998). "The Three African Popes.". The Western Journal of Black Studies 22 (1): 57–8. https://www.questia.com/PM.qst?a=o&se=gglsc&d=5001392071. பார்த்த நாள்: 2008-04-10. 
  2. 2.0 2.1    "Pope St. Gelasius I". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 
  3. Le Berbère-- lumière de l'Occident. 
  4. The title of his biography by Walter Ullmann expresses this:Gelasius I. (492–496): Das Papsttum an der Wende der Spätantike zum Mittelalter (Stuttgart) 1981.
  5. J. Chapin, "Gelasius I, Pope, St.", pp. 121-3, in New Catholic Encyclopedia, Second Edition, Volume 6, Gale, 2002.
  6. J.Conant, Staying Roman: Conquest and Identity in Africa and the Mediterranean, 439–700, CUP, 2012, p. 83.
  7. "Book of Saints – திருத்தந்தை ஜெலாசியுஸ்=2013-06-23" (en-US).
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
மூன்றாம் ஃபெலிக்ஸ்
திருத்தந்தை
1 மார்ச் 492 – 19 நவம்பர் 496
பின்னர்
இரண்டாம் அனஸ்தாசியுஸ்