இரண்டாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை)
திருத்தந்தை
திருத்தந்தை இரண்டாம் அனஸ்தாசியுஸ் 24 நவம்பர் 496 முதல் 19 நவம்பர் 498 வரை கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்தவர் ஆவார்.
இரண்டாம் அனஸ்தாசியுஸ் | |
---|---|
ஆட்சி துவக்கம் | 24 நவம்பர் 496 |
ஆட்சி முடிவு | 19 நவம்பர் 498 |
முன்னிருந்தவர் | முதலாம் ஜெலாசியுஸ் |
பின்வந்தவர் | சிம்மாக்குஸ் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | Anastasius |
பிறப்பு | ??? ??? |
இறப்பு | ரோம், ஒஸ்ட்ரோகோதிக் அரசு | நவம்பர் 16, 498
அனஸ்தாசியுஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
அகாசியுசின் பதித்தம் நிலவிய காலத்தில் இவர் ஆட்சி செய்தார். அகாசியுசுடன் அமைதி உடன்படிக்கை செய்ய நினைத்ததாக தோற்றம் அளித்ததால், வரலாற்றாசிரியர்களால் (Liber Pontificalis) திருத்தந்தையர்களில் கெட்டவராக காட்சிப் படுத்தப்பட்டார். இதனாலேயே இவரை தான்தே, நரகத்திலிருப்பதாக தன் கவிகளில் உருவகப்படுத்தி உள்ளார்.[1]
வரலாற்றாசிரியர் ரிச்சர்ட் பி. மேக்பெரெயின் (Richard P. McBrien) இக்கருத்தை எதிர்க்கிறார். ஏனெனில் இவர் குற்றம் சாட்டப்படுவது அகாசியுசை எதிர்த்த ரோம் நகர குருக்களால். அகாசியுசின் பதித்தம் உச்சத்திலிருந்தபோது இவர் மரித்தது கடவுளின் செயலாகக் கருதப்படுகின்றது.[2]
References
தொகு- ↑ Chisholm, Hugh, ed (1911). "Anastasius". Encyclopædia Britannica (Eleventh ed.). Cambridge University Press.
- ↑ McBrien. Lives of the Popes (San Francisco, Harper, 2000) p. 82–83.
வெளி இணைப்புகள்
தொகு- "Pope Anastasius II". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.