முதலாம் மரீனுஸ் (திருத்தந்தை)
முதலாம் மரீனுஸ் (அல்லது இரண்டாம் மார்டீன்), கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக டிசம்பர் 16, 882 முதல் மே 15, 884 வரை இருந்தவர். இவர் டிசம்பர் 882-இல் எட்டாம் யோவானுக்குப் பின் திருத்தந்தையானவர்..
முதலாம் மரீனுஸ் | |
---|---|
108ஆம் திருத்தந்தை | |
![]() | |
ஆட்சி துவக்கம் | டிசம்பர் 16, 882 |
ஆட்சி முடிவு | மே 15, 884 |
முன்னிருந்தவர் | எட்டாம் யோவான் |
பின்வந்தவர் | மூன்றாம் ஹேட்ரியன் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | ??? |
பிறப்பு | ??? கலீசி, உரோமை நகரம் |
இறப்பு | மே 15, 884 ??? |
மரீனுஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
திருத்தந்தையாவதற்கு முன்தொகு
இவர் திருத்தந்தையாவதற்கு முன் சேயிரி நகரின் ஆயராக இருந்தார். காண்ஸ்டான்டினோபிலின் மூப்பரான முதலாம் போதியோஸால் எழுந்த சர்ச்சைகளை தீர்க்க இவருக்கு முன் இருந்த மூன்று திருத்தந்தையர்கள் இவரை தம் தூதுவராக அனுப்பினர்.
திருத்தந்தையாகதொகு
இவர் திருத்தந்தையான பின் முதலில் ஃபொர்மோசுஸை போர்தஸ் நகரின் கர்தினால் ஆயராக நியமித்தார்.[1] இவருக்கு பெரிய ஆல்பர்டின் (r. 871-899) மீது இருந்த மரியாதையின் நிமித்தம், உரோமையில் வாழ்ந்த ஆங்கிலோ-சாக்சன் மக்களை வரிச்சுமையிலிருந்து விடுவித்தார்.[1] இவர் மே அல்லது ஜூன் 884-இல் இறந்திருக்கலாம். இவருக்கு பின் மூன்றாம் ஹேட்ரியன் திருத்தந்தையானார்.
மேற்கோள்கள்தொகு
இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Marinus (popes)". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.
"Pope Marinus I". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.