மூன்றாம் ஏட்ரியன் (திருத்தந்தை)

திருத்தந்தை
(மூன்றாம் ஹேட்ரியன் (திருத்தந்தை) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருத்தந்தை மூன்றாம் ஏட்ரியன் (இலத்தீன்: Adrianus III; இறப்பு ஜூலை 885) என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 17 மே 884 முதல் 885இல் தனது இறப்பு வரை இருந்தவர் ஆவார்[1] இவர் உரோமை நகரில் பிறந்தவர்.

திருத்தந்தை புனித
மூன்றாம் ஏட்ரியன்
ஆட்சி துவக்கம்17 மே 884
ஆட்சி முடிவுஜூலை 885
முன்னிருந்தவர்முதலாம் மரீனுஸ்
பின்வந்தவர்ஐந்தாம் ஸ்தேவான்
பிற தகவல்கள்
இயற்பெயர்???
பிறப்பு???
உரோமை நகரம், திருத்தந்தை நாடுகள்
இறப்புஜூலை 885
Modena, Carolingian Empire
ஏட்ரியன் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

புனித உரோமைப் பேரரசின் வாரிசு குறித்த சர்ச்சையினை தீர்க்க[2] மூன்றாம் சார்லசு மன்னனில் அழைப்பின் பேரில் செருமனி செல்லும் வழியில் ஜூலை 885இல் மோதினாவில் உள்ள சான் செசாரியோ சல் பனரோவில் இவர் இறந்தார். மோதினாவின் நோனான்தோலாவில் உள்ள புனித சில்வெஸ்த்ரோ மடத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்டர்.[3] இந்த நிகழ்வு சுமார் 1122இல் இவ்வாலய கதவுகளில் பொறிக்கப்பட்டது. இவரின் மீப்போருட்கள் அவ்வாலய மைய பீடத்தின் அடியில் உள்ளது.

இவரின் பக்திமுயற்சிகள் 1891இல் உறுதிசெய்யப்பட்டது. இவரின் விழாநாள் 8 ஜூலை ஆகும்.[4]

இவற்றையும் பார்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1.    "Pope St. Adrian III". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். 
  2. Richard P. McBrien, Lives of the Popes: The Pontiffs from St. Peter to John Paul II, (HarperCollins, 2000), 143.
  3. Hadrian III, Francois Bougard, The Papacy: An Encyclopedia, Vol.2, 682.
  4. Hadrian III, Francois Bougard, The Papacy: An Encyclopedia, Vol.2, ed. Philippe Levillain, (Routledge, 2002), 682
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர் திருத்தந்தை
884–885
பின்னர்