திருத்தந்தையர்களின் பட்டியல்
திருத்தந்தையர்களின் பட்டியல் (List of Popes) என்பது கத்தோலிக்க கிறித்தவத் திருச்சபை "திருத்தந்தையர்" என்றும் "போப்பாண்டவர்" என்றும் குறிப்பிடுகின்ற உரோமை ஆயர்களின் பெயர் வரிசையை வரலாற்று முறையில் அமைக்கின்ற அடைவு ஆகும். வத்திக்கான் நகரத்தில் அமைந்துள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைமையிடம் ஒவ்வொரு ஆண்டும் "திருத்தந்தை மேலிடப் புள்ளிவிவரத் தொகுப்பு" (Annuario Pontificio) என்னும் பெயரில் வெளியிடுகின்ற நூல் அதிகாரப்பூர்வமானதாகக் கருதப்படுகிறது. இப்புள்ளிவிவரத் தொகுப்பில் இன்று கத்தோலிக்க திருச்சபையின் தலைவராய் இருக்கும் 16ஆம் ஆசீர்வாதப்பர் (பெனடிக்ட்) வரலாற்றில் 265ஆம் திருத்தந்தை என்று குறிக்கப்படுகிறார். அப்பட்டியலே கீழே தரப்படுகிறது.[1]
திருத்தந்தை என்னும் பெயர்
தொகுகத்தோலிக்க திருச்சபை வழக்கப்படி, உரோமை ஆயர் "திருத்தந்தை" (போப்பாண்டவர்) என்று அழைக்கப்படுகிறார். இப்பெயர் இலத்தீன் மொழியில் "Papa" என்பதாகும். அதன் பொருள் "தந்தை", "அப்பா" ஆகும். இதுவே ஆங்கிலத்தில் "Pope" என்றாகியது. அதனடிப்படையில் "போப்பாண்டவர்" என்னும் சொல் தமிழில் வரலாயிற்று.
வரலாற்றில், திருத்தந்தையரைக் குறிக்க வேறு சில பெயர்களும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. "இறையடியார்க்கு அடியார்" (Servant of the Servants of God) என்னும் பட்டம் திருத்தந்தை மக்களுக்குப் பணிபுரியவே பதவி ஏற்கிறார் என்பதைக் காட்டுகிறது. வேறு சில பெயர்கள் பண்டைய உரோமைப் பேரரசின் மரபுவழி வந்தவை ஆகும். உரோமைப் பேரரசனுக்கு "Pontifex" (Pontiff) என்றொரு பட்டம் இருந்தது. அதற்கு "பாலமாக அமைபவர்" ("பெருந்தலைவர்") என்பது பொருள். அதை அடியொற்றி, திருத்தந்தை "Summus Pontifex" (Supreme Pontiff) என்றும் பெயர் கொண்டுள்ளார். இன்னொரு பெயர் Vicarius Christi (Vicar of Christ) என்பதாகும். இதன் பொருள் "கிறிஸ்துவின் பதிலாள்". வழக்கமாக அவர் Sanctus Pater (Holy Father), அதாவது "தூய (திரு) தந்தை" என்னும் பெயரால் அறியப்படுகிறார்.
வரலாற்றுத் தகவல்கள் கிடைத்ததையொட்டி, திருத்தந்தையரின் பெயர்ப்பட்டியலில் பலமுறை திருத்தங்கள் செய்யப்பட்டன. 2001ஆம் ஆண்டு நிகழ்ந்த திருத்தம் துல்லியமான வரலாற்றுப் பார்வையோடு செய்யப்பட்டது.
புரட்டஸ்டாண்டு என்று அழைக்கப்படும் சீர்திருத்த சபைகளும் கீழை மரபுச் சபைகளும் திருத்தந்தையை உரோமை ஆயர் என்று ஏற்றபோதிலும் அவருக்கு அனைத்துலத் திருச்சபைமீது நிர்வாகப் பொறுப்பு உண்டு என ஏற்பதில்லை. கத்தோலிக்க கிறித்தவ சபைக் கருத்துப்படி, திருத்தந்தை இயேசுவின் முதன்மைச் சீடராகிய பேதுருவின் வாரிசு என்னும் முறையில் அனைத்துலத் திருச்சபைக்கும் தலைவராகவும் ஒற்றுமையின் அடையாளமாகவும் உள்ளார்.
கால ஒழுங்குப்படியான திருத்தந்தையர்களின் பட்டியல்
தொகு1 - 5ஆம் நூற்றாண்டுகள்
தொகுமுதலாம் நூற்றாண்டு
தொகுஎண் வரிசை | பணிக்காலம் | படம் | பெயர் (தமிழ்-இலத்தீன்) |
இயற்பெயர் | பிறப்பிடம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
1 | 30 – 64/67 | புனித பேதுரு PETRUS |
சீமோன் பேதுரு; சீமோன் கேபா (பாறை என்னும் சீமோன்) |
பெத்சாயிதா, கலிலேயா | இயேசு ஏற்படுத்திய பன்னிரு திருத்தூதர்கள் குழுவுக்குத் தலைவர் என்றும், விண்ணரசின் திறவுகோல்களை இயேசுவிடமிருந்து பெற்றார் என்றும் (மத்தேயு 16:18-19), உரோமையின் முதல் ஆயர் என்றும் கத்தோலிக்க கிறித்தவ சபையினர் ஏற்கின்றனர். மறைச்சாட்சிகளாக இறந்த பேதுரு, பவுல் பெருவிழா: சூன் 29 (கீழைத் திருச்சபையும் கொண்டாடுகிறது); பேதுருவின் தலைமை விழா: பெப்ருவரி 22. | |
2 | 64/67(?) – 76/79(?) | புனித லைனஸ் LINUS |
லைனஸ் | துஷியா, டஸ்கனி, இத்தாலியா | விழா நாள்: 23 செப்டம்பர்; கீழைத் திருச்சபையில்: சூன் 7. | |
3 | 76/79(?) – 88 | புனித அனகிலேத்துஸ் ANACLETUS கிலேத்துஸ் |
அனகிலேத்துஸ் | கிரேக்க நாடாக இருக்கலாம் | மறைச்சாட்சியாக இறந்தார்; விழா நாள்: 26 ஏப்ரல். முன்னாள்களில் தவறுதலாக அனகிலேத்துஸ், கிலேத்துஸ் என்று இருவராகக் கருதப்பட்ட பெயர். | |
4 | 88/92 – 97 | முதலாம் கிளமெண்ட் (சாந்தப்பர்) CLEMENS |
கிளமெண்ட் | உரோமை | விழா நாள்: 23 நவம்பர்; கீழைத் திருச்சபையில்: 25 நவம்பர் | |
5 | 97/99 – 105/107 | புனித எவரிஸ்துஸ் (Aristus) EVARISTUS |
அரிஸ்துஸ் | பெத்லகேம், யூதேயா | விழா நாள்: 26 அக்டோபர் |
2ஆம் நூற்றாண்டு
தொகுஎண் வரிசை | பணிக்காலம் | படம் | பெயர் (தமிழ்-இலத்தீன்) |
இயற்பெயர் | பிறப்பிடம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
6/1 | 105/107 – 115/116 | புனித முதலாம் அலெக்சாண்டர் ALEXANDER |
அலெக்சாண்டர் | உரோமை | விழா நாள்: 16 மார்ச்; கீழைச் சபையிலும் புனிதராகப் போற்றப்பெறுகிறார் | |
7/2 | 115/116 – 125 | புனித முதலாம் சிக்ஸ்துஸ் XYSTUS |
உரோமை அல்லது கிரேக்க நாடு | விழா நாள்: 10 ஆகஸ்ட்; கீழைச் சபையிலும் புனிதராகப் போற்றப்பெறுகிறார் | ||
8/3 | 125 – 136/138 | புனித டெலஸ்ஃபோருஸ் TELESPHORUS |
கிரேக்க நாடு | |||
9/4 | 136/138 – 140/142 | புனித ஹைஜீனஸ் HYGINUS |
கிரேக்க நாடு | மறைச்சாட்சியாக இறந்தார் என்பது மரபு. விழா நாள்: 11 ஜனவரி | ||
10/5 | 140/142 – 155 | புனித முதலாம் பயஸ் (பத்திநாதர்) PIUS |
அக்குய்லேயா, ஃப்ரீயுலி, இத்தாலியா | வாளால் வெட்டப்பட்டு மறைச்சாட்சியானார். விழா நாள்: 11 ஜூலை | ||
11/6 | 155 – 166 | புனித அனிசேட்டஸ் ANICETUS |
ஏமெசா, சிரியா | மறைச்சாட்சியாக இறந்தார் என்பது மரபு. விழா நாள்: 17 ஏப்ரல் | ||
12/7 | c.166 – 174/175 | புனித சொத்தேர் SOTERIUS |
இலாத்சியம், இத்தாலியா | மறைச்சாட்சியாக இறந்தார் என்பது மரபு. விழா நாள்: 22 ஏப்ரல் | ||
13/8 | 174/175 – 189 | புனித எலூத்தேரியுஸ் ELEUTHERIUS |
நிக்கோப்பொலிஸ், எப்பீருஸ் | மறைச்சாட்சியாக இறந்தார் என்பது மரபு. விழா நாள்: 6 மே | ||
14/9 | 189 – 198/199 | புனித முதலாம் விக்டர் VICTOR |
வடக்கு ஆப்பிரிக்கா | |||
15/10 | 199 – 217 | புனித செஃபிரீனுஸ் ZEPHYRINUS |
உரோமை |
3ஆம் நூற்றாண்டு
தொகுஎண் வரிசை | பணிக்காலம் | படம் | பெயர் (தமிழ்-இலத்தீன்) |
இயற்பெயர் | பிறப்பிடம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
16/1 | c.217 – 222/223 | புனித முதலாம் கலிஸ்டஸ் CALLISTUS |
எசுப்பானியா | மறைச்சாட்சி; விழா நாள்: 14 அக்டோபர் | ||
17/2 | 222/223 – 230 | புனித முதலாம் அர்பன் URBANUS |
உரோமை | விழா நாள்: 25 மே; கீழைத் திருச்சபையிலும் புனிதராகப் போற்றப்பெறுகிறார் | ||
18/3 | 21 ஜூலை 230 - 28 செப்டம்பர் 235 (5 வருடங்கள்) |
புனித போன்தியன் PONTIANUS |
உரோமை | பணிக்காலம் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்ட முதல் திருத்தந்தை[2] | ||
19/4 | 21 நவம்பர் 235 - 3 ஜனவரி 236 (44 நாட்கள்) |
புனித அந்தேருஸ் ANTERUS |
கிரேக்க நாடு | விழா நாள்: 5 ஆகஸ்டு; கீழைத் திருச்சபையிலும் புனிதராகப் போற்றப்பெறுகிறார் | ||
20/5 | 10 ஜனவரி 236 - 20 ஜனவரி 250 (14 வருடங்கள்) |
புனித ஃபேபியன் FABIANUS |
உரோமை | விழா நாள்: 20 ஜனவரி; கீழைத் திருச்சபையிலும் புனிதராகப் போற்றப்பெறுகிறார்; விழா நாள்: 5 ஆகஸ்டு | ||
21/6 | 6/11 மார்ச் 251 – ஜூன் 253 (2 வருடங்கள்) |
புனித கொர்னேலியுஸ் CORNELIUS |
பெருந்துன்பமுற்று மறைச்சாட்சியாக இறந்தார்; விழா நாள்: 16 செப்டம்பர் | |||
22/7 | 25 ஜூன் 253 - 5 மார்ச் 254 (256 நாட்கள்) |
புனித முதலாம் லூசியஸ் LUCIUS |
உரோமை | விழா நாள்: 4 மார்ச் | ||
23/8 | 12 மே 254 - 2 ஆகஸ்ட் 257 (3 வருடங்கள்) |
புனித ஸ்தேவான் (முடியப்பர்) STEPHANUS |
உரோமை | தலை துண்டிக்கப்பட்டு மறைச்சாட்சியாக இறந்தார்; விழா நாள்: 2 ஆகஸ்டு; கீழைத் திருச்சபையிலும் புனிதராகப் போற்றப்பெறுகிறார். விழா நாள்: 2 ஆகஸ்டு | ||
24/9 | 30/31 ஆகஸ்டு 257 - 6 ஆகஸ்டு 258 (340/341 நாட்கள்) |
புனித இரண்டாம் சிக்ஸ்துஸ் XYSTUS Secundus |
கிரேக்க நாடு | தலை துண்டிக்கப்பட்டு மறைச்சாட்சியாக இறந்தார்; இரத்தசாட்சி; விழா நாள் : 10 ஆகஸ்டு; கீழைத் திருச்சபையிலும் புனிதராகப் போற்றப்பெறுகிறார். விழா நாள்: 10 ஆகஸ்டு | ||
25/10 | 22 ஜூலை 259 - 26 டிசம்பர் 268 (9 நாட்கள்) |
புனித தியோனீசியுஸ் DIONYSIUS |
கிரேக்க நாடு | விழா நாள் : 26 டிசம்பர் | ||
26/11 | 5 ஜனவரி 269 – 30 டிசம்பர் 274 (5 வருடங்கள்) |
புனித முதலாம் ஃபெலிக்ஸ் FELIX |
உரோமை | |||
27/12 | 4 ஜனவரி 275 - 7 டிசம்பர் 283 (8 வருடங்கள்) |
புனித யுட்டீக்கியன் EUTYCHIANUS |
||||
28/13 | 17 டிசம்பர் 283 - 22 ஏப்ரல் 296 (12 வருடங்கள்) |
புனித காயுஸ் CAIUS |
புராதன மரபுப்படி மறைச்சாட்சியாக இறந்தார்; விழா நாள் : 22 ஏப்ரல்; கீழைத் திருச்சபையிலும் புனிதராகப் போற்றப்பெறுகிறார். விழா நாள்: 11 ஆகஸ்டு | |||
29/14 | 30 ஜூன் 296 - 1 ஏப்ரல் 304 (7 வருடங்கள்) |
புனித மர்செல்லீனுஸ் MARCELLINUS |
விழா நாள் : 26 ஏப்ரல்; கீழைத் திருச்சபையிலும் புனிதராகப் போற்றப்பெறுகிறார்; விழா நாள்: 7 சூன் |
4ஆம் நூற்றாண்டு
தொகுஎண் வரிசை | பணிக்காலம் | படம் | பெயர் (தமிழ்-இலத்தீன்) |
இயற்பெயர் | பிறப்பிடம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
30/1 | 308 – 309 | புனித முதலாம் மர்செல்லுஸ் MARCELLUS |
||||
31/2 | c.309 – c.310 | புனித யூசேபியஸ் EUSEBIUS |
||||
32/3 | 2 ஜூலை 311 – 10 ஜனவரி 314 (2 வருடங்கள்) |
புனித மில்த்தியாதேஸ்(மெல்க்கியாதேஸ்) MILTIADES |
ஆப்பிரிக்கா | உரோமைப் பேரரசு கிறித்தவர்களுக்கு எதிராக இழைத்த கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த முதலாம் கான்ஸ்டன்டைன் பேரரசன் கி.பி. 313இல் வெளியிட்ட "மிலான் சாசனத்திற்குப்" பிறகு பணியேற்ற முதல் திருத்தந்தை மில்த்தியாதேஸ் ஆவார் | ||
33/4 | 31 ஜனவரி 314 - 31 டிசம்பர் 335 (21 வருடங்கள்) |
புனித முதலாம் சில்வெஸ்தர் SILVESTER |
சாந்தாஞ்செலோ ஆ ஸ்காலா, அவேல்லீனோ, இத்தாலியா | விழா நாள் : 31 டிசம்பர்; கீழைத் திருச்சபையிலும் புனிதராகப் போற்றப்பெறுகிறார்; விழா நாள்: 2 சனவரி. இவர்தம் பணிக்காலத்தில் நிசேயா பொதுச்சங்கம் நிகழ்ந்தது (கி.பி. 325); புனித பேதுரு பெருங்கோவில், புனித இலாத்தரன் யோவான் பெருங்கோவில், திருச்சிலுவைப் பெருங்கோவில் போன்றவை கான்ஸ்டன்டைன் பேரரசரால் கட்டியெழுப்பப்பட்டன. | ||
34/5 | 18 ஜனவரி 336 – 7 அக்டோபர் 336 (263 நாட்கள்) |
புனித மாற்கு MARCUS |
உரோமை | விழா நாள் : 7 அக்டோபர் | ||
35/6 | 6 பெப்ரவரி 337 – 12 ஏப்ரல் 352 (15 வருடங்கள்) |
புனித ஜூலியுஸ் IULIUS |
உரோமை | |||
36/7 | 17 மே 352 – 24 செப்டம்பர் 366 (14 வருடங்கள்) |
லிபேரியஸ் LIBERIUS |
கத்தோலிக்க திருச்சபையால் புனிதர் என்று அறிவிக்கப்படாத முதல் திருத்தந்தை; கீழைத் திருச்சபையில் புனிதராகப் போற்றப்பெறுகிறார்; விழா நாள்: 27 ஆகஸ்டு | |||
37/8 | 1 அக்டோபர் 366 – 11 டிசம்பர் 384 (18 வருடங்கள்) |
புனித முதலாம் தாமசுஸ் DAMASUS |
இதாஞா ஆ வேகியா, போர்த்துகல் | கிரேக்கத்திலிருந்தும் எபிரேயத்திலிருந்தும் விவிலியத்தை இலத்தீனில் மொழிபெயர்க்கும் பொறுப்பைப் புனித ஜெரோம் (எரோணிமுசு) என்பவரிடம் ஒப்படைத்தார்; 382இல் உரோமைச் சங்கத்தைக் கூட்டினார்; பிற சமய மரபில் இருந்த "பெருந்தலைவர்" (Pontifex Maximus) என்னும் பட்டத்தைத் திருத்தந்தையருக்கு அளிக்கும்படி கிரேசியன் பேரரசனிடம் வேண்டிப் பெற்றார். | ||
38/9 | 11 டிசம்பர் 384 - 26 நவம்பர் 399 (14 வருடங்கள்) |
புனித சிரீசியஸ் Papa SIRICIUS |
"Papa" அல்லது "திருத்தந்தை" ("போப்பாண்டவர்") என்னும் சிறப்புப் பெயரை முதன்முறையாகப் பயன்படுத்திய உரோமை ஆயர் இவர் ஆவார். | |||
39/10 | 27 நவம்பர் 399 - 19 டிசம்பர் 401 (2 வருடங்கள்) |
புனித முதலாம் அனஸ்தாசியுஸ் Papa ANASTASIUS |
5ஆம் நூற்றாண்டு
தொகுஎண் வரிசை | பணிக்காலம் | படம் | பெயர் (தமிழ்-இலத்தீன்) |
இயற்பெயர் | பிறப்பிடம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
40/1 | 22 டிசம்பர் 401 – 12 மார்ச் 417 (15 வருடங்கள்) |
புனித முதலாம் இன்னசெண்ட் (மாசிலோன்) Papa INNOCENTIUS |
இவர் காலத்தில் விசிகோத்து என்னும் இனத்தவர் படையெடுத்து உரோமையை 410இல் அழித்தார்கள் | |||
41/2 | 18 மார்ச் 417 – 26 டிசம்பர் 418 (1 வருடம்) |
புனித சோசிமஸ் Papa ZOSIMUS |
||||
42/3 | 28/29 டிசம்பர் 418 – 4 செப்டம்பர் 422 (3 வருடங்கள்) |
புனித முதலாம் போனிஃபாஸ் Papa BONIFACIUS |
||||
43/4 | 10 செப்டம்பர் 422 – 27 ஜூலை 432 (9 வருடங்கள்) |
புனித முதலாம் செலஸ்தீன் Papa COELESTINUS |
உரோமை, மேற்கு உரோமைப் பேரரசு | கீழைத் திருச்சபையில் புனிதராகப் போற்றப்பெறுகிறார்; விழா நாள்: 8 ஏப்ரல் | ||
44/5 | 31 சூலை 432 – மார்ச்/ஆகஸ்டு 440 (8 வருடங்கள்) |
புனித மூன்றாம் சிக்ஸ்துஸ் Papa XYSTUS Tertius |
||||
45/6 | 29 செப்டம்பர் 440 – 10 நவம்பர் 461 (21 வருடங்கள்) |
புனித முதலாம் லியோ (சிங்கராயர்) (பெரிய சிங்கராயர்) Papa LEO MAGNUS |
உரோமை | உரோமை நகரைச் சூறையாட வந்த ஆட்டிலா என்னும் ஹுன் இனத்தலைவரைச் சந்தித்து, உரையாடி, உரோமையைக் காப்பாற்றினார். விழா நாள்:10 நவம்பர். கீழைத் திருச்சபையிலும் புனிதராகப் போற்றப்பெறுகிறார்; விழா நாள்: 18 பெப்ரவரி. | ||
46/7 | 19 நவம்பர் 461 – 29 பெப்ரவரி 468 (6 வருடங்கள்) |
புனித ஹிலாரியுஸ் Papa HILARIUS |
சார்தீனியா, மேற்கு உரோமைப் பேரரசு | |||
47/8 | 3 மார்ச் 468 – 10 மார்ச் 483 (15 வருடங்கள்) |
புனித சிம்ப்ளீசியுஸ் Papa SIMPLICIUS |
தீவொளி, இத்தாலியா | |||
48/9 | 13 மார்ச் 483 – 1 மார்ச் 492 (8 வருடங்கள்) |
புனித மூன்றாம் ஃபெலிக்ஸ் (இரண்டாம் ஃபெலிக்ஸ்) Papa FELIX Tertius (Secundus) |
உரோமை | சில ஏடுகளில் இரண்டாம் ஃபெலிக்ஸ் என்றும் குறிக்கப்படுகிறார் | ||
49/10 | 1 மார்ச் 492 – 21 நவம்பர் 496 (4 வருடங்கள்) |
புனித முதலாம் ஜெலாசியுஸ் Papa GELASIUS |
ஆப்பிரிக்கா | |||
50/11 | 24 நவம்பர் 496 – 19 நவம்பர் 498 (1 வருடம்) |
இரண்டாம் அனஸ்தாசியுஸ் Papa ANASTASIUS Secundus |
||||
51/12 | 22 நவம்பர் 498 – 19 ஜூலை 514 (15 வருடங்கள்) |
புனித சிம்மாக்குஸ் Papa SYMMACHUS |
சார்தீனியா |
6 - 10ஆம் நூற்றாண்டுகள்
தொகு6ஆம் நூற்றாண்டு
தொகுஎண் வரிசை | பணிக்காலம் | படம் | பெயர் (தமிழ்-இலத்தீன்) |
இயற்பெயர் | பிறப்பிடம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
52/1 | 20 ஜூலை 514 – 19 ஜூலை 523 (8 வருடங்கள்) |
புனித ஹோர்மிஸ்டாஸ் Papa HORMISDAS |
ஃப்ரோசினோனே, தெற்கு இலாத்சியும், இத்தாலியா | இவர் சில்வேரியுஸ் என்னும் திருத்தந்தையின் தந்தை ஆவார் | ||
53/2 | 13 ஆகஸ்ட் 523 – 18 மே 526 (2 வருடங்கள்) |
புனித முதலாம் யோவான் (அருளப்பர்) Papa IOANNES |
டஸ்கனி, இத்தாலியா | |||
54/3 | 13 ஜூலை 526 – 22 செப்டம்பர் 530 (4 வருடங்கள்) |
புனித நான்காம் ஃபெலிக்ஸ் (மூன்றாம் ஃபெலிக்ஸ்) Papa FELIX Quartus (Tertius) |
சாம்னியம், தெற்கு இத்தாலியா | சில ஏடுகளில் இவர் பெயர் மூன்றாம் ஃபெலிக்ஸ் என்றும் காணக்கிடக்கிறது | ||
55/4 | 22 செப்டம்பர் 530 – 17 அக்டோபர் 532 (2 வருடங்கள்) |
இரண்டாம் போனிஃபாஸ் Papa BONIFACIUS Secundus |
உரோமை; கிழக்கு கோத்திய பெற்றோருக்குப் பிறந்தார் | |||
56/5 | 2 ஜனவரி 533 – 8 மே 535 (2 வருடங்கள்) |
இரண்டாம் யோவான் (அருளப்பர்) Papa IOANNES Secundus |
மெர்க்கூரியஸ் | உரோமை | இவர்தம் இயற்பெயர் "மெர்க்கூரியஸ்" என்னும் பிற சமயத் தெய்வத்தின் பெயராக இருந்ததால் இவர் அதைப் பயன்படுத்தவில்லை. இவ்வாறு செயல்பட்ட முதல் திருத்தந்தை. | |
57/6 | 13 மே 535 – 22 ஏப்ரல் 536 (346 நாட்கள்) |
புனித முதலாம் அகாப்பெட்டஸ் (அகாப்பிட்டஸ்) Papa AGAPETUS |
உரோமை, கிழக்கு கோத்திய அரசு | விழா நாள்கள் 22 ஏப்ரல், 20 செப்டம்பர். கீழைத் திருச்சபையிலும் புனிதராகப் போற்றப்பெறுகிறார்; விழா நாள்: 17 ஏப்ரல். | ||
58/7 | 1 ஜூன் 536 – 11 நவம்பர் 537 (1 வருடம்) |
புனித சில்வேரியஸ் Papa SILVERIUS |
நாடுகடத்தப்பட்டார்; விழா நாள்: 20 ஜூன்; இவர் திருத்தந்தை ஹோர்மிஸ்தாஸ் என்பவரின் மகன். | |||
59/8 | 29 மார்ச் 537 – 7 ஜூன் 555 (18 வருடங்கள்) |
விஜீலியஸ் Papa VIGILIUS |
உரோமை | |||
60/9 | 16 ஏப்ரல் 556 – 4 மார்ச் 561 (5 வருடங்கள்) |
முதலாம் பெலாஜியுஸ் Papa PELAGIUS |
உரோமை | |||
61/10 | 17 ஜூலை 561 – 13 ஜூலை 574 (12 வருடங்கள்) |
மூன்றாம் யோவான் (அருளப்பர்) Papa IOANNES Tertius |
கற்றெலீனஸ் | உரோமை, கிழக்கு உரோமைப் பேரரசு | ||
62/11 | 2 ஜூன் 575 – 30 ஜூலை 579 (4 வருடங்கள்) |
முதலாம் பெனடிக்ட் (ஆசீர்வாதப்பர்) Papa BENEDICTUS |
||||
63/12 | 26 நவம்பர் 579 – 7 பெப்ரவரி 590 (10 வருடங்கள்) |
இரண்டாம் பெலாஜியுஸ் Papa PELAGIUS Secundus |
உரோமை | |||
64/13 | 3 செப்டம்பர் 590 – 12 மார்ச் 604 (13 வருடங்கள்) |
புனித முதலாம் கிரகோரி, (புனித ஆசீர்வாதப்பர் சபை) (பெரிய கிரகோரி) Papa GREGORIUS MAGNUS |
உரோமை | "இறையடியாருக்கு அடியார்" (Servus servorum Dei = Servant of the servants of God) என்னும் சிறப்புப் பெயரையும் "பாலமாக அமைபவர்/பெருந்தலைவர்" (Pontifex Maximus = Supreme Pontiff) என்னும் பெயரையும் முதன்முறையாகப் பயன்படுத்தினார். விழா நாள்: 3 செப்டம்பர். கீழைத் திருச்சபையிலும் புனிதராகப் போற்றப்பெறுகிறார். விழா நாள்: 12 மார்ச். |
7ஆம் நூற்றாண்டு
தொகுஎண் வரிசை | பணிக்காலம் | படம் | பெயர் (தமிழ்-இலத்தீன்) |
இயற்பெயர் | பிறப்பிடம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
65/1 | 13 செப்டம்பர் 604 – 22 பெப்ரவரி 606 (1 வருடம்) |
சபீனியன் Papa SABINIANUS |
பிளேரா, கிழக்கு உரோமைப் பேரரசு, இத்தாலியா | |||
66/2 | 19 பெப்ரவரி 607 – 12 நவம்பர் 607 (267 நாட்கள்) |
மூன்றாம் போனிஃபாஸ் Papa BONIFACIUS Tertius |
உரோமை | |||
67/3 | 25 ஆகஸ்ட் 608 – 8 மே 615 (6 வருடங்கள்) |
புனித நான்காம் போனிஃபாஸ் (புனித ஆசீர்வாதப்பர் சபை) Papa BONIFACIUS Quartus |
மார்சிக்கா, கிழக்கு உரோமைப் பேரரசு | புனித ஆசீர்வாதப்பர் சபையைச் சார்ந்த இந்தத் திருத்தந்தை முதன்முறையாகத் தம் முன்னோடியின் பெயரைத் தமதாக எடுத்துக்கொண்டார். இவர் உரோமையில் ஜூப்பிட்டர் என்னும் பிற சமயக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலைக் கிறித்தவ கோவிலாக மாற்றினார். "எல்லாக் கடவுளர்க்கும்" என்னும் பொருள்படும் "Pantheon" கோவில் இன்று எல்லாப் புனிதர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட கிறித்தவ கோவிலாக உள்ளது. | ||
68/4 | 19 அக்டோபர் 615 – 8 நவம்பர் 618 (3 வருடங்கள்) |
முதலாம் ஆதேயோதாத்துஸ் (Deusdedit) Papa ADEODATUS |
உரோமை | இவர் சில வேளைகளில் Deusdedit ("கடவுளின் கொடை") என்றும் அழைக்கப்படுகிறார். அப்போது, திருத்தந்தை இரண்டாம் ஆதேயோதாத்துஸ் "திருத்தந்தை ஆதேயோதாத்துஸ்" என்னும் பெயர் பெறுவார். | ||
69/5 | 23 டிசம்பர் 619 – 25 அக்டோபர் 625 (5 வருடங்கள்) |
ஐந்தாம் போனிஃபாஸ் Papa BONIFACIUS Quintus |
நேப்பிள்ஸ், இத்தாலியா | |||
70/6 | 27 அக்டோபர் 625 – 12 அக்டோபர் 638 (12 வருடங்கள்) |
முதலாம் ஹோனோரியஸ் Papa HONORIUS |
கம்பானியா, பிசான்சியப் பேரரசு | |||
71/7 | அக்டோபர் 638 – 2 ஆகஸ்ட் 640 (1 வருடம்) |
செவெரீனுஸ் Papa SEVERINUS |
உரோமை | |||
72/8 | 24 டிசம்பர் 640 – 12 அக்டோபர் 642 (1 வருடம்) |
நான்காம் யோவான் (அருளப்பர்) Papa IOANNES Quartus |
சாதர், தல்மாசியா (இன்றைய குரோவாசியா | |||
73/9 | 24 நவம்பர் 642 – 14 மே 649 (6 வருடங்கள்) |
முதலாம் தியடோர் Papa THEODORUS |
பாலஸ்தீனம் | |||
74/10 | ஜூலை 649 – 16 செப்டம்பர் 655 (6 வருடங்கள்) |
புனித முதலாம் மார்ட்டின் Papa MARTINUS |
தோடி நகர் அருகில், உம்பிரியா, பிசான்சியப் பேரரசு | விழா நாள்: 12 நவம்பர். கீழைச் சபையிலும் புனிதராகப் போற்றப்பெறுகிறார்; விழா நாள்: 14 ஏப்ரல். | ||
75/11 | 10 ஆகஸ்ட் 654 – 2 ஜூன் 657 (2 வருடங்கள்) |
புனித முதலாம் யூஜின் Papa EUGENIUS |
உரோமை | |||
76/12 | 30 ஜூலை 657 – 27 ஜனவரி 672 (14 வருடங்கள்) |
புனித வித்தாலியன் Papa VITALIANUS |
சேஞ்ஞி, பிசான்சியப் பேரரசு | |||
77/13 | 11 ஏப்ரல் 672 – 17 ஜூன் 676 (4 வருடங்கள்) |
இரண்டாம் ஆதேயோதாத்துஸ் (புனித ஆசீர்வாதப்பர் சபை) Papa ADEODATUS Secundus |
உரோமை, பிசான்சியப் பேரரசு | திருத்தந்தை முதலாம் ஆதேயோதாத்துஸ் என்பவர் Deusdedit ("கடவுளின் கொடை") என்று அழைக்கப்படும்போது, இரண்டாம் ஆதேயோதாத்துஸ் வெறுமனே ஆதேயோதாத்துஸ் என்னும் பெயரால் அறியப்படுகிறார். இவர் புனித ஆசீர்வாதப்பர் சபை உறுப்பினர். | ||
78/14 | 2 நவம்பர் 676 – 11 ஏப்ரல் 678 (1 வருடம்) |
டோனுஸ் Papa DONUS |
உரோமை, பிசான்சியப் பேரரசு | |||
79/15 | 27 ஜூன் 678 – 10 ஜனவரி 681 (2 வருடங்கள்) |
புனித ஆகத்தோ Papa AGATHO |
சிசிலி | இவர் கீழைச் சபையிலும் புனிதராகப் போற்றபெறுகிறார்; விழா நாள்: 20 பெப்ரவரி. | ||
80/16 | டிசம்பர் 681 – 3 ஜூலை 683 (1 வருடம்) |
புனித இரண்டாம் லியோ (சிங்கராயர்) Papa LEO Secundus |
சிசிலி | Feast day 3 ஜூலை | ||
81/17 | 26 ஜூன் 684 – 8 மே 685 (317 நாட்கள்) |
புனித இரண்டாம் பெனடிக்ட் (ஆசீர்வாதப்பர்) Papa BENEDICTUS Secundus |
உரோமை, பிசான்சியப் பேரரசு | விழா நாள்: 7 மே | ||
82/18 | 12 ஜூலை 685 – 2 ஆகஸ்ட் 686 (1 வருடம்) |
ஐந்தாம் யோவான் (அருளப்பர்) Papa IOANNES Quintus |
சிரியா | |||
83/19 | 21 அக்டோபர் 686 – 22 செப்டம்பர் 687 (335 நாட்கள்) |
கோனோன் Papa CONON |
||||
84/20 | 15 டிசம்பர் 687 – 8 செப்டம்பர் 701 (13 வருடங்கள்) |
புனித முதலாம் செர்ஜியுஸ் Papa SERGIUS |
சிசிலி |
8ஆம் நூற்றாண்டு
தொகுஎண் வரிசை | பணிக்காலம் | படம் | பெயர் (தமிழ்-இலத்தீன்) |
இயற்பெயர் | பிறப்பிடம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
85/1 | 30 அக்டோபர் 701 – 11 ஜனவரி 705 (3 வருடங்கள்) |
ஆறாம் யோவான் (அருளப்பர்) Papa IOANNES Sextus |
கிரேக்க நாடு | |||
86/2 | 1 மார்ச் 705 – 18 அக்டோபர் 707 (2 வருடங்கள்) |
ஏழாம் யோவான் (அருளப்பர்) Papa IOANNES Septimus |
கிரேக்க நாடு | முன்னிருந்தவர் பெயரையே தொடர்ந்த இரண்டாமவர் | ||
87/3 | 15 ஜனவரி 708 – 4 பெப்ரவரி 708 (21 நாட்கள்) |
சிசினியுஸ் Papa SISINNIUS |
சிரியா | |||
88/4 | 25 மார்ச் 708 – 9 ஏப்ரல் 715 (7 வருடங்கள்) |
கான்ஸ்டண்டைன் Papa CONSTANTINUS |
சிரியா | |||
89/5 | 19 மே 715 – 11 பெப்ரவரி 731 (15 வருடங்கள்) |
புனித இரண்டாம் கிரகோரி Papa GREGORIUS Secundus |
உரோமை | விழா நாள்: 11 பெப்ரவரி | ||
90/6 | 18 மார்ச் 731 – 28 நவம்பர் 741 (10 வருடங்கள்) |
மூன்றாம் கிரகோரி Papa GREGORIUS Tertius |
சிரியா | முன்னிருந்தவர் பெயரையே தொடர்ந்த மூன்றாமவர் | ||
91/7 | 3 டிசம்பர் 741 – 14/22 மார்ச் 752 (10 வருடங்கள்) |
புனித சக்கரியா Papa ZACHARIAS |
கிரேக்க நாடு | விழா நாள்: 15 மார்ச் | ||
எண் வரிசையிலிருந்து நீக்கம் | 23 மார்ச் 752 – 25 மார்ச் 752 (திருத்தந்தையாகப் பதவி ஏற்கவில்லை) |
ஸ்தேவான் (தேர்வான திருத்தந்தை) (முடியப்பர்) Papa Electus STEPHANUS |
இவர் இரண்டாம் ஸ்தேவான் எனவும் அழைக்கப்படுகிறார். இவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நாட்களுக்கு பின், ஆயராகத் திருப்பொழிவு பெற்று திருத்தந்தை பதவி ஏற்பதற்குமுன் இறந்துவிட்டார். கத்தோலிக்க திருச்சபையின் பட்டியலில் 16ஆம் நூற்றாண்டில் சேர்க்கப்பட்டிருந்தாலும், 1961இல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டார். இப்போது கத்தோலிக்க திருச்சபை இவரைத் திருத்தந்தையாக எண்ணிக்கையில் சேர்ப்பதில்லை. | |||
92/8 | 26 மார்ச் 752 – 26 ஏப்ரல் 757 (5 வருடங்கள்) |
இரண்டாம் ஸ்தேவான் (முடியப்பர்), (மூன்றாம் ஸ்தேவான்) Papa STEPHANUS Secundus (Tertius) |
இவர் மூன்றாம் ஸ்தேவான் எனவும் அழைக்கப்படுகிறார். | |||
93/9 | 29 மே 757 – 28 ஜூன் 767 (10 வருடங்கள்) |
புனித முதலாம் பவுல் (சின்னப்பர்) Papa PAULUS |
உரோமை | |||
94/10 | 1/7 ஆகஸ்ட் 767 – 24 சனவரி 772 (4 வருடங்கள்) |
மூன்றாம் ஸ்தேவான் (முடியப்பர்), (நான்காம் ஸ்தேவான்) Papa STEPHANUS Tertius (Quartus) |
சிசிலி | நான்காம் ஸ்தேவான் எனவும் அழைக்கப்படுகிறார். | ||
95/11 | 1 பெப்ரவரி 772 – 26 டிசம்பர் 795 (23 வருடங்கள்) |
முதலாம் ஹேட்ரியன் Papa HADRIANUS |
உரோமை | |||
96/12 | 26 டிசம்பர் 795 – 12 சூன் 816 (20 வருடங்கள்) |
புனித மூன்றாம் லியோ (சிங்கராயர்) Papa LEO Tertius |
உரோமை |
9ஆம் நூற்றாண்டு
தொகுஎண் வரிசை | பணிக்காலம் | படம் | பெயர் (தமிழ்-இலத்தீன்) |
இயற்பெயர் | பிறப்பிடம் | தேர்ந்தெடுக்கப்பட்ட வயது / இறப்பு அல்லது பணிவிலகியது | திருத்தந்தையாக பணியாற்றிய வருடங்கள் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|---|---|
97/1 | 12 சூன் 816 – 24 சனவரி 817 | நான்காம் ஸ்தேவான் (முடியப்பர்), (ஐந்தாம் ஸ்தேவான்) Papa STEPHANUS Quartus (Quintus) |
<1 | சில குறிப்புகளில் ஐந்தாம் ஸ்தேவான் எனவும் அழைக்கப்படுகிறார். | ||||
98/2 | 25 சனவரி 817 – 11 பெப்ருவரி 824 | புனித முதலாம் பாஸ்கால் Papa PASCHALIS |
உரோமை | 7 | ||||
99/3 | 8 மே 824 – ஆகஸ்ட் 827 | இரண்டாம் யூஜின் Papa EUGENIUS Secundus |
உரோமை | 3 | ||||
100/4 | ஆகஸ்ட் 827 – செப்டம்பர் 827 | வாலண்டைன் Papa VALENTINUS |
உரோமை | <1 | ||||
101/5 | 827 – சனவரி 844 | நான்காம் கிரகோரி Papa GREGORIUS Quartus |
உரோமை | 17 | ||||
102/6 | சனவரி 844 – 7 சனவரி 847 | இரண்டாம் செர்ஜியுஸ் Papa SERGIUS Secundus |
உரோமை | 3 | ||||
103/7 | சனவரி 847 – 17 சூலை 855 | புனித நான்காம் லியோ (சிங்கராயர்), (புனித ஆசீர்வாதப்பர் சபை) Papa LEO Quartus |
உரோமை | 8 | இவர் புனித ஆசீர்வாதப்பர் சபை உறுப்பினர். | |||
104/8 | 855 – 7 ஏப்ரல் 858 | மூன்றாம் பெனடிக்ட் (ஆசீர்வாதப்பர்) Papa BENEDICTUS Tertius |
உரோமை | |||||
105/9 | 24 ஏப்ரல் 858 – 13 நவம்பர் 867 | புனித முதலாம் நிக்கோலாஸ் (Nicholas the Great) Papa NICOLAUS MAGNUS (பெரிய நிக்கோலாஸ்) |
உரோமை | 9 | ||||
106/10 | 14 டிசம்பர் 867 – 14 டிசம்பர் 872 | இரண்டாம் ஹேட்ரியன் Papa HADRIANUS Secundus |
உரோமை | 5 | ||||
107/11 | 14 டிசம்பர் 872 – 16 டிசம்பர் 882 | எட்டாம் யோவான் (அருளப்பர்) Papa IOANNES Octavus |
உரோமை | 10 | ||||
108/12 | 16 டிசம்பர் 882 – 15 மே 884 | முதலாம் மரீனுஸ் Papa MARINUS |
கல்லேசே, உரோமை | 1 | ||||
109/13 | 17 மே 884 – c.செப்டம்பர் 885 | புனித மூன்றாம் ஹேட்ரியன் Papa HADRIANUS Tertius |
உரோமை | |||||
110/14 | 885 – 14 செப்டம்பர் 891 | ஐந்தாம் ஸ்தேவான் (முடியப்பர்), (ஆறாம் ஸ்தேவான்) Papa STEPHANUS Quintus (Sextus) |
உரோமை | சில ஏடுகளில் ஆறாம் ஸ்தேவான் என்று குறிக்கப்படுகிறார். | ||||
111/15 | 19 செப்டம்பர் 891 – 4 ஏப்ரல் 896 | ஃபொர்மோசுஸ் Papa FORMOSUS |
பழைய ஓஸ்தியா, உரோமை, இத்தாலியா | 4 | இவர் இறந்தபின்பு இவரது உடல் தோண்டியெடுக்கப்பட்டு இவர்மீது பெரும்பாலும் அரசியல் பின்னணியில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த விசித்திர விசாரணை நடந்த ஒன்பதாம் நூற்றாண்டில் திருத்தந்தையர் அரசியல் சூழ்ச்சிகளுக்கு ஆளாயினர். | |||
112/16 | 4 ஏப்ரல் 896 – 19 ஏப்ரல் 896 | ஆறாம் போனிஃபாஸ் Papa BONIFACIUS Sextus |
உரோமை | <1 | ||||
113/17 | 22 மே 896 – ஆகஸ்ட் 897 | ஆறாம் ஸ்தேவான் (முடியப்பர்), (ஏழாம் ஸ்தேவான்) Papa STEPHANUS Sextus (Septimus) |
1 | இவர் சில ஏடுகளின் ஏழாம் ஸ்தேவான் என்று குறிக்கப்படுகிறார். | ||||
114/18 | ஆகஸ்ட் 897 – நவம்பர் 897 | ரொமானுஸ் Papa ROMANUS |
கல்லேசே, உரோமை | <1 | ||||
115/19 | டிசம்பர் 897 | இரண்டாம் தியடோர் Papa THEODORUS Secundus |
உரோமை | <1 | ||||
116/20 | சனவரி 898 – சனவரி 900 | ஒன்பதாம் யோவான் (அருளப்பர்), புனித ஆசீர்வாதப்பர் சபை Papa IOANNES Nonus |
தீவொளி, இத்தாலியா | இவர் புனித பெனடிக்ட் (ஆசீர்வாதப்பர்) சபை உறுப்பினர். | ||||
117/21 | 900 – 903 | நான்காம் பெனடிக்ட் (ஆசீர்வாதப்பர்) Papa BENEDICTUS Quartus |
உரோமை |
10ஆம் நூற்றாண்டு
தொகுஎண் வரிசை | பணிக்காலம் | படம் | பெயர் (தமிழ்-இலத்தீன்) |
இயற்பெயர் | பிறப்பிடம் | தேர்ந்தெடுக்கப்பட்ட வயது / இறப்பு அல்லது பணிவிலகியது | திருத்தந்தையாக பணியாற்றிய வருடங்கள் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|---|---|
118/1 | சூலை 903 – செப்டம்பர் 903 | ஐந்தாம் லியோ (சிங்கராயர்) Papa LEO Quintus |
அர்தேயா, உரோமை | <1 | ||||
119/2 | 29 சனவரி 904 – 14 ஏப்ரல் 911 | மூன்றாம் செர்ஜியுஸ் Papa SERGIUS Tertius |
உரோமை | 7 | மூன்றாம் செர்ஜியுஸ் ஆட்சியிலிருந்து ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் திருத்தந்தைப் பதவி அரசியல் செல்வாக்கு கொண்ட தியோஃபிலாக்டஸ் என்னும் குடும்பத்தால் கட்டுப்படுத்தப்பட்டது; திருத்தந்தையரைத் தேர்ந்தெடுப்பதில் தலையீடு. திருத்தந்தையர் ஆட்சியின் "இருண்ட காலம்". அப்போது பல சீரழிவுகள் ஏற்பட்டன. | |||
120/3 | ஏப்ரல் 911 – சூன் 913 | மூன்றாம் அனஸ்தாசியுஸ் Papa ANASTASIUS Tertius |
உரோமை | 2 | ||||
121/4 | சூலை/ஆகஸ்ட் 913 – பெப்ருவரி/மார்ச் 914 | லாண்டோ Papa LANDO |
சபீனா, இத்தாலியா | <1 | ||||
122/5 | மார்ச் 914 – மே 928 | பத்தாம் யோவான் (அருளப்பர்) Papa IOANNES Decimus |
ரொமாஞ்ஞா, இத்தாலியா | 14 | ||||
123/6 | மே 928 – டிசம்பர் 928 | ஆறாம் லியோ (சிங்கராயர்) Papa LEO Sextus |
உரோமை | <1 | ||||
124/7 | டிசம்பர் 928 – பெப்ருவரி 931 | ஏழாம் ஸ்தேவான் (முடியப்பர்), (எட்டாம் ஸ்தேவான்) Papa STEPHANUS Septimus (Octavus) |
உரோமை | 2 | சில ஏடுகளில் இவர் எட்டாம் ஸ்தேவான் என்று குறிக்கப்படுகிறார். | |||
125/8 | பெப்ரவரி/மார்ச் 931 – டிசம்பர் 935 | பதினொன்றாம் யோவான் (அருளப்பர்) Papa IOANNES Undecimus |
உரோமை | 4 | ||||
126/9 | 3 சனவரி 936 – 13 சூலை 939 | ஏழாம் லியோ (சிங்கராயர்), (புனித ஆசீர்வாதப்பர் சபை) Papa LEO Septimus |
3 | இவர் புனித ஆசீர்வாதப்பர் சபை உறுப்பினர். | ||||
127/10 | 14 சூலை 939 – அக்டோபர் 942 | எட்டாம் ஸ்தேவான் (முடியப்பர்), (ஒன்பதாம் ஸ்தேவான்) Papa STEPHANUS Octavus (Nonus) |
இவர் செருமனியில் பிறந்தவர் | 3 | இவர் சில ஏடுகளில் ஒன்பதாம் ஸ்தேவான் என்று குறிக்கப்படுகிறார். | |||
128/11 | 30 அக்டோபர் 942 – மே 946 | இரண்டாம் மரீனுஸ் Papa MARINUS Secundus |
உரோமை | 3 | ||||
129/12 | 10 மே 946 – டிசம்பர் 955 | இரண்டாம் அகாப்பெட்டஸ் Papa AGAPETUS Secundus |
உரோமை | 9 | ||||
130/13 | 16 டிசம்பர் 955 – 14 மே 964 | பன்னிரண்டாம் யோவான் (அருளப்பர்) Papa IOANNES Duodecimus |
அக்டேவியன் | உரோமை | 8 | ஓட்டோ மன்னர் இவரைச் சட்டத்திற்கு மாறாக 963இல் பதவிநீக்கம் செய்தார். திருத்தந்தையர் ஆட்சியின் "இருண்ட காலம்" முடிவுற்றது. | ||
131/14 | 22 மே 964 – 23 ஜூன் 964 | ஐந்தாம் பெனடிக்ட் (ஆசீர்வாதப்பர்) Papa BENEDICTUS Quintus |
உரோமை | <1 | பன்னிரண்டாம் யோவானுக்குப் பிறகு ஓட்டோ மன்னர் எட்டாம் லியோவைத் திருத்தந்தை ஆக்கினார். அவரை எதிர்-திருத்தந்தையாகக் கண்ட உரோமை மக்கள் ஐந்தாம் பெனடிக்டைத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தனர். இதை ஓட்டோ மன்னர் எதிர்த்தார். அவர் பெனடிக்டைப் பதவியிறக்கம் செய்தார். அதைப் பெனடிக்ட் ஏற்றார். இவ்வாறு எட்டாம் லியோ முறையான திருத்தந்தை ஆனார். | |||
132/15 | சூலை 964 – 1 மார்ச் 965 | எட்டாம் லியோ (சிங்கராயர்) Papa LEO Octavus |
உரோமை | <1 | பன்னிரண்டாம் யோவானுக்குப் பிறகு ஓட்டோ மன்னர் எட்டாம் லியோவைத் திருத்தந்தை ஆக்கினார். அவரை எதிர்-திருத்தந்தையாகக் கண்ட உரோமை மக்கள் ஐந்தாம் பெனடிக்டைத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தனர். இதை ஓட்டோ மன்னர் எதிர்த்தார். அவர் பெனடிக்டைப் பதவியிறக்கம் செய்தார். அதைப் பெனடிக்ட் ஏற்றார். இவ்வாறு எட்டாம் லியோ முறையான திருத்தந்தை ஆனார். | |||
133/16 | 1 அக்டோபர் 965 – 6 செப்டம்பர் 972 | பதின்மூன்றாம் யோவான் (அருளப்பர்) Papa IOANNES Tertius Decimus |
உரோமை | 6 | ||||
134/17 | 19 சனவரி 973 – சூன் 974 | ஆறாம் பெனடிக்ட் (ஆசீர்வாதப்பர்) Papa BENEDICTUS Sextus |
உரோமை, திருத்தந்தை நாடுகள் | 1 | ஓட்டோ மன்னரின் ஆதரவில் பதவியேற்ற இவர், அம்மன்னரின் இறப்பிற்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியில் சிறையிடப்பட்டு, பதவியிறக்கப்பட்டு, கொல்லப்பட்டார். | |||
135/18 | அக்டோபர் 974 – 10 சூலை 983 | ஏழாம் பெனடிக்ட் (ஆசீர்வாதப்பர்) Papa BENEDICTUS Septimus |
உரோமை | 8 | ||||
136/19 | டிசம்பர் 983 – 20 ஆகஸ்ட் 984 | பதினான்காம் யோவான் (அருளப்பர்) Papa IOANNES Quartus Decimus |
பியேத்ரோ கம்பனோரா | பவீயா | <1 | |||
137/20 | ஆகஸ்ட் 985 – மார்ச் 996 | பதினைந்தாம் யோவான் (அருளப்பர்) Papa IOANNES Quintus Decimus |
உரோமை | 10 | ||||
138/21 | 3 மே 996 – 18 பெப்ருவரி 999 | ஐந்தாம் கிரகோரி Papa GREGORIUS Quintus |
கரிந்தியா நகர் புரூனோ | செருமனி, புனித உரோமைப் பேரரசு | 2 | இவரே செருமனி நாட்டிலிருந்து முதன்முறையாகத் திருத்தந்தை நிலைக்கு உயர்ந்தவர். | ||
139/22 | 2 ஏப்ரல் 999 – 12 மே 1003 | இரண்டாம் சில்வெஸ்தர் Papa SILVESTER Secundus |
ஜெர்பெர்ட் தோரியாக் | ஓவேர்ன், பிரான்சு | 4 | இவரே பிரான்சு நாட்டைச் சார்ந்த முதல் திருத்தந்தை |
11 - 15ஆம் நூற்றாண்டுகள்
தொகு11ஆம் நூற்றாண்டு
தொகுஎண் வரிசை | பணிக்காலம் | படம் | பெயர் (தமிழ்-இலத்தீன்) |
இயற்பெயர் | பிறப்பிடம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
140/1 | ஜூன் 1003 – டிசம்பர் 1003 |
பதினேழாம் யோவான் (அருளப்பர்) Papa IOANNES Septimus Decimus |
சிக்கோனே | உரோமை, திருத்தந்தை நாடுகள் | ||
141/2 | 25 டிசம்பர் 1003 – சூலை 1009 (5 வருடங்கள்) |
பதினெட்டாம் யோவான் (அருளப்பர்) Papa IOANNES DuodeVicesimus |
ஜொவான்னி ஃபசானோ; (ஃபசியானுஸ்) | ரப்பஞ்ஞானோ, திருத்தந்தை நாடுகள் | ||
142/3 | 31 சூலை 1009 – 12 மே 1012 (2 வருடங்கள்) |
நான்காம் செர்ஜியுஸ் Papa SERGIUS Quartus |
பியேத்ரோ போக்காப்பேக்கொரா | உரோமை, திருத்தந்தை நாடுகள், புனித உரோமைப் பேரரசு | ||
143/4 | 18 மே 1012 – 9 ஏப்ரல் 1024 (11 வருடங்கள்) |
எட்டாம் பெனடிக்ட் (ஆசீர்வாதப்பர்) Papa BENEDICTUS Octavus |
இரண்டாம் தியோஃபிலாக்டஸ், தூஸ்குலும் மேல்நர் | உரோமை, திருத்தந்தை நாடுகள், புனித உரோமைப் பேரரசு | ||
144/5 | ஏப்ரல்/மே 1024 – 20 அக்டோபர் 1032 (8 வருடங்கள்) |
பத்தொன்பதாம் யோவான் (அருளப்பர்) Papa IOANNES UndeVicesimus |
ரொமானுஸ், தூஸ்குலும் மேல்நர் | உரோமை, திருத்தந்தை நாடுகள், புனித உரோமைப் பேரரசு | ||
145/6 | 1032 – 1044 | ஒன்பதாம் பெனடிக்ட் (ஆசீர்வாதப்பர்) Papa BENEDICTUS Nonus |
மூன்றாம் தியோஃபிலாக்டஸ், தூஸ்குலும் மேல்நர் | உரோமை, திருத்தந்தை நாடுகள், புனித உரோமைப் பேரரசு | முதல் பதவிக் காலம் | |
146/7 | 1045 | மூன்றாம் சில்வெஸ்தர் Papa SILVESTER Tertius |
யோவான், சபீனா ஆயர் | உரோமை, திருத்தந்தை நாடுகள், புனித உரோமைப் பேரரசு | இவர் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாரா என்பது பற்றி ஐயம் உள்ளது; எதிர்-திருத்தந்தையாகக் கருதப்படுகிறார்; சூத்ரியில் கூடிய சங்கம் இவரைப் பதவியிறக்கம் செய்தது. | |
147/8 | 1045 – 1046 | ஒன்பதாம் பெனடிக்ட் (ஆசீர்வாதப்பர்) Papa BENEDICTUS Nonus |
மூன்றாம் தியோஃபிலாக்டஸ், தூஸ்குலும் மேல்நர் | உரோமை, திருத்தந்தை நாடுகள், புனித உரோமைப் பேரரசு | இரண்டாம் பதவிக் காலம்; சூத்ரியில் கூடிய சங்கம் இவரைப் பதவியிறக்கம் செய்தது. | |
148/9 | ஏப்ரல்/மே 1045 – 20 டிசம்பர் 1046 (1 வருடம்) |
ஆறாம் கிரகோரி Papa GREGORIUS Sextus, |
யொஹான்னஸ் க்ராசியானுஸ் | உரோமை, திருத்தந்தை நாடுகள், புனித உரோமைப் பேரரசு | சூத்ரியில் கூடிய சங்கம் இவரைப் பதவியிறக்கம் செய்தது. | |
149/10 | 24 டிசம்பர் 1046 – 9 அக்டோபர் 1047 (289 நாட்கள்) |
இரண்டாம் கிளமெண்ட் (சாந்தப்பர்) Papa CLEMENS Secundus |
சூட்கெர் | சாக்சனி மாநிலம், புனித உரோமைப் பேரரசு | ||
150/11 | நவம்பர் 1047 – 1048 |
ஒன்பதாம் பெனடிக்ட் (ஆசீர்வாதப்பர்) Papa BENEDICTUS Nonus |
மூன்றாம் தியோஃபிலாக்டஸ், தூஸ்குலும் மேல்நர் | உரோமை, திருத்தந்தை நாடுகள், புனித உரோமைப் பேரரசு | மூன்றாம் பதவிக் காலம்; பதவியிறக்கம் செய்யப்பட்டு, சபைநீக்கம் செய்யப்பட்டார். | |
151/12 | 17 ஜூலை 1048 – 9 ஆகஸ்ட் 1048 (23 நாட்கள்) |
இரண்டாம் தாமசுஸ் Papa DAMASUS Secundus |
போப்போ | பில்தெனாவு, பவாரியா மாநிலம், புனித உரோமைப் பேரரசு | ||
152/13 | 12 பெப்ரவரி 1049 – 19 ஏப்ரல் 1054 (5 வருடங்கள்) |
ஒன்பதாம் லியோ (சிங்கராயர்) Papa LEO Nonus |
புரூனோ, டாக்ஸ்புர்க் மேல்நர் | ஏகுய்ஸ்ஹைம், சுவாபியா பிரதேசம், புனித உரோமைப் பேரரசு | ஒன்பதாம் லியோவும் கான்ஸ்தாந்திநோபுள் முதன்மை ஆயர் முதலாம் மிக்கேல் செருலாரியுசும் ஒருவரையொருவர் 1054இல் சபைநீக்கம் செய்தனர். இவ்வாறு கீழைச் சபைக்கும் மேலைச் சபைக்கும் இடையே "பெரும் பிளவு" உண்டாயிற்று. | |
153/14 | 13 ஏப்ரல் 1055 – 28 ஜூலை 1057 (2 வருடங்கள்) |
இரண்டாம் விக்டர் Papa VICTOR Secundus |
கெப்ஹார்ட், கால்வ், டோல்லன்ஸ்டைன், ஹிர்ஷ்பெர்க் பகுதிகளின் மேல்நர் | செருமானிய அரசு, புனித உரோமைப் பேரரசு | ||
154/15 | 2 ஆகஸ்ட் 1057 – 29 மார்ச் 1058 (241 நாட்கள்) |
ஒன்பதாம் ஸ்தேவான் (முடியப்பர்), (பத்தாம் ஸ்தேவான்), (புனித ஆசீர்வாதப்பர் சபை) Papa STEPHANUS Nonus (Decimus) |
ஃப்ரடெரிக் தெ லொரேன் | லொரேன், புனித உரோமைப் பேரரசு | இவர் சில ஏடுகளில் பத்தாம் ஸ்தேவான் எனக் குறிக்கப்படுகிறார். இவர் புனித ஆசீர்வாதப்பர் சபை உறுப்பினர். | |
155/16 | 6 டிசம்பர் 1058 – 27 சூலை 1061 (2 வருடங்கள்) |
இரண்டாம் நிக்கோலாஸ் Papa NICOLAUS Secundus |
ஜெரார்ட் தெ புர்கோஞ் | செவ்ரோன் கோட்டை, ஆர்ல் அரசு | ||
156/17 | 30 செப்டம்பர் 1061 – 21 ஏப்ரல் 1073 (11 வருடங்கள்) |
இரண்டாம் அலெக்சாண்டர் Papa ALEXANDER Secundus |
அன்சேல்மோ தா பாஜ்ஜியோ | மிலான், இத்தாலிய அரசு, புனித உரோமைப் பேரரசு | ||
157/18 | 22 ஏப்ரல் 1073 – 25 மே 1085 (12 வருடங்கள்) |
புனித ஏழாம் கிரகோரி புனித ஆசீர்வாதப்பர் சபை Papa GREGORIUS Septimus |
ஹில்டப்ராண்ட் | சொவானா, இத்தாலிய அரசு, புனித உரோமைப் பேரரசு | உரோமை ஆயர் மட்டுமே "திருத்தந்தை" (Papa = Pope) என அழைக்கப்படலாம் என்று விதித்தார். இவர் புனித ஆசீர்வாதப்பர் சபையைச் சார்ந்தவர். | |
158/19 | 24 மே 1086 – 16 செப்டம்பர் 1087 (1 வருடம்) |
முத்திப்பேறு பெற்ற மூன்றாம் விக்டர் (புனித ஆசீர்வாதப்பர் சபை) Papa VICTOR Tertius |
தெசிதேரியோ; தெசிதேரியுஸ்; தோஃபேரியுஸ் | பெனெவெந்தோ | இவர் புனித ஆசீர்வாதப்பர் சபையைச் சார்ந்தவர். | |
159/20 | 12 மார்ச் 1088 – 29 சூலை 1099 (11 வருடங்கள்) |
முத்திப்பேறு பெற்ற இரண்டாம் அர்பன் (புனித ஆசீர்வாதப்பர் சபை) Papa URBANUS Secundus |
லெஜெரி ஓடோ | லெஜெரி, ஷம்பாஞ் மாவட்டம், பிரான்சு | முதலாம் சிலுவைப் போரைத் தொடங்கினார். இவர் புனித ஆசீர்வாதப்பர் சபையைச் சார்ந்தவர். | |
160/21 | 13 ஆகஸ்ட் 1099 – 21 சனவரி 1118 (18 வருடங்கள்) |
இரண்டாம் பாஸ்கால் புனித ஆசீர்வாதப்பர் சபை) Papa PASCHALIS Secundus |
ரனியேரோ | ப்ளேடா, திருத்தந்தை நாடுகள், புனித உரோமைப் பேரரசு | இவர் புனித ஆசீர்வாதப்பர் சபையைச் சார்ந்தவர். |
12ஆம் நூற்றாண்டு
தொகுஎண் வரிசை | பணிக்காலம் | படம் | பெயர் (தமிழ்-இலத்தீன்) |
இயற்பெயர் | பிறப்பிடம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
161/1 | 24 சனவரி 1118 – 28 சனவரி 1119 (1 வருடம்) |
இரண்டாம் ஜெலாசியுஸ் (புனித ஆசீர்வாதப்பர் சபை) Papa GELASIUS Secundus |
ஜொவான்னி கொனியூலோ | கயேத்தா, காப்புவா சிற்றரசு, இத்தாலியா | இவர் புனித ஆசீர்வாதப்பர் சபையைச் சார்ந்தவர். | |
162/2 | 2 பெப்ரவரி 1119 – 13 டிசம்பர் 1124 (5 வருடங்கள்) |
இரண்டாம் கலிஸ்டஸ் Papa CALLISTUS Secundus |
குய்தோ, பர்கண்டி | பர்கண்டி, புனித உரோமைப் பேரரசு | 1123இல் முதலாம் இலாத்தரன் பொதுச்சங்கத்தைத் தொடங்கிவைத்தார். | |
163/3 | 15 டிசம்பர் 1124 – 13 பெப்ரவரி 1130 (5 வருடங்கள்) |
இரண்டாம் ஹோனோரியஸ் (ஒழுங்கு சபை) Papa HONORIUS Secundus |
லம்பேர்த்தோ ஸ்கான்னாபெக்கி | ஃபியஞ்ஞானோ, புனித உரோமைப் பேரரசு | இவர் சான் ரேனோ புனித மரியா ஒழுங்கு சபை உறுப்பினர். | |
164/4 | 14 பெப்ரவரி 1130 – 24 செப்டம்பர் 1143 (13 வருடங்கள்) |
இரண்டாம் இன்னசெண்ட் (மாசிலோன்), (ஒழுங்கு சபை Papa INNOCENTIUS Secundus |
கிரகோரியோ பாப்பாரெஸ்கி | உரோமை, திருத்தந்தை நாடுகள், புனித உரோமைப் பேரரசு | இலாத்தரன் ஒழுங்கு சபை உறுப்பினர்; இவர் 1139இல் இரண்டாம் இலாத்தரன் பொதுச்சங்கத்தைத் தொடங்கிவைத்தார். | |
165/5 | 26 செப்டம்பர் 1143 – 8 மார்ச் 1144 (164 நாட்கள்) |
இரண்டாம் செலஸ்தீன் Papa COELESTINUS Secundus |
குய்தோ | சித்தா தி கஸ்தேல்லோ, திருத்தந்தை நாடுகள், புனித உரோமைப் பேரரசு | ||
166/6 | 12 மார்ச் 1144 – 15 பெப்ரவரி 1145 (340 நாட்கள்) |
இரண்டாம் லூசியஸ் (ஒழுங்கு சபை) Papa LUCIUS Secundus |
ஜெரார்தோ காச்சியானெமீச்சி தால் ஓர்சோ | பொலோஞ்ஞா, திருத்தந்தை நாடுகள், புனித உரோமைப் பேரரசு | இவர் ஃபரேதியானோ தி லூக்கா ஒழுங்கு சபை உறுப்பினர் | |
167/7 | 15 பெப்ரவரி 1145 – 8 சூலை 1153 (8 வருடங்கள்) |
முத்திப்பேறு பெற்ற மூன்றாம் யூஜின் (சிஸ்தேர்சிய சபை) Papa EUGENIUS Tertius |
பெர்னார்தோ தா பீஸா | பீஸா, பீஸா குடியரசு, புனித உரோமைப் பேரரசு | இவர் சிஸ்தேர்சிய சபை உறுப்பினர். | |
168/8 | 8 சூலை 1153 – 3 டிசம்பர் 1154 (1 வருடம்) |
நான்காம் அனஸ்தாசியுஸ் Papa ANASTASIUS Quartus |
கொர்ராதோ தெமேத்ரி தெல்லா சுபூர்ரா | உரோமை, திருத்தந்தை நாடுகள், புனித உரோமைப் பேரரசு | ||
169/9 | 4 டிசம்பர் 1154 – 1 செப்டம்பர் 1159 (4 வருடங்கள்) |
நான்காம் ஹேட்ரியன் (புனித அகுஸ்தீன் சபை) Papa HADRIANUS Quartus |
நிக்கோலாஸ் ப்ரேக்ஸ்பீயர் | ஹெர்ட்ஃபோர்ட்ஷைர், இங்கிலாந்து அரசு | இங்கிலாந்திலிருந்து வந்த முதல் திருத்தந்தை இவர். இவருக்குப் பிறகு இங்கிலாந்திலிருந்து யாரும் திருத்தந்தை ஆகவுமில்லை. இவர் அயர்லாந்தை இங்கிலாந்து அரசர் இரண்டாம் ஹென்றிக்குக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இவர் புனித அகுஸ்தீன் சபையைச் சார்ந்தவர். | |
170/10 | 7 செப்டம்பர் 1159 – 30 ஆகஸ்ட் 1181 (21 வருடங்கள்) |
மூன்றாம் அலக்சாண்டர் Papa ALEXANDER Tertius |
ரோலாண்டோ | சீயேனா, இத்தாலிய அரசு, புனித உரோமைப் பேரரசு | இவர் 1179இல் மூன்றாம் இலாத்தரன் பொதுச்சங்கத்தைக் கூட்டினார். | |
171/11 | 1 செப்டம்பர் 1181 – 25 நவம்பர் 1185 (4 வருடங்கள்) |
மூன்றாம் லூசியுஸ் Papa LUCIUS Tertius |
உபால்டோ | லூக்கா, இத்தாலிய அரசு, புனித உரோமைப் பேரரசு | ||
172/12 | 25 நவம்பர் 1185 – 19 அக்டோபர் 1187 (1 வருடம்) |
மூன்றாம் அர்பன் Papa URBANUS Tertius |
உபேர்த்தோ க்ரிவெல்லி | குஜ்ஜோனே, இத்தாலிய அரசு, புனித உரோமைப் பேரரசு | ||
173/13 | 21 அக்டோபர் 1187 – 17 டிசம்பர் 1187 (57 நாட்கள்) |
எட்டாம் கிரகோரி (ஒழுங்கு சபை) Papa GREGORIUS Octavus |
அல்பேர்த்தோ தி மோர்ரா | பெனவெந்தோ, திருத்தந்தை நாடுகள், புனித உரோமைப் பேரரசு | ப்ரேமோந்த்ரே ஒழுங்கு சபை உறுப்பினர். இவர் மூன்றாம் சிலுவைப் போரைப் பரிந்துரைத்தார். | |
174/14 | 19 டிசம்பர் 1187 – 20 மார்ச் 1191[3] (3 வருடங்கள்) |
மூன்றாம் கிளமெண்ட்(சாந்தப்பர்) Papa CLEMENS Tertius |
பவுலோ ஸ்கொலாரி | உரோமை, திருத்தந்தை நாடுகள், புனித உரோமைப் பேரரசு | ||
175/15 | 21 மார்ச் 1191 – 8 ஜனவரி 1198 (6 வருடங்கள்) |
மூன்றாம் செலஸ்தீன் Papa COELESTINUS Tertius |
ஜசீந்தோ | உரோமை, திருத்தந்தை நாடுகள், புனித உரோமைப் பேரரசு | ||
176/16 | 8 சனவரி 1198 – 16 சூலை 1216 (18 வருடங்கள்) |
மூன்றாம் இன்னசெண்ட்(மாசிலோன்) Papa INNOCENTIUS Tertius |
லோத்தாரியோ தேயி கோந்தி தி செஞ்ஞி | கவிஞ்ஞானோ, திருத்தந்தை நாடுகள், புனித உரோமைப் பேரரசு | 1215இல் நான்காம் இலாத்தரன் பொதுச்சங்கத்தைக் கூட்டினார். நான்காம் சிலுவைப் போரைத் தொடங்கினார். எசுப்பானியா, போர்த்துகல் ஆகிய நாடுகளில் சமயக் கொள்கை விசாரணையைத் தொடங்கினார். |
13ஆம் நூற்றாண்டு
தொகுஎண் வரிசை | பணிக்காலம் | படம் | பெயர் (தமிழ்-இலத்தீன்) |
இயற்பெயர் | பிறப்பிடம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
177/1 | 18 ஜூலை 1216 – 18 மார்ச் 1227 (10 வருடங்கள்) |
மூன்றாம் ஹோனோரியஸ் Papa HONORIUS Tertius |
சென்சியோ | உரோமை, திருத்தந்தை நாடுகள், புனித உரோமைப் பேரரசு | ஐந்தாம் சிலுவைப் போரைத் தொடங்கிவைத்தார்.]]. | |
178/2 | 19 மார்ச் 1227 – 22 ஆகஸ்ட் 1241 (14 வருடங்கள்) |
ஒன்பதாம் கிரகோரி Papa GREGORIUS Nonus |
ஊகொலீனோ தேயி கோந்தி தி சேஞ்ஞி | அனாஞி, திருத்தந்தை நாடுகள், புனித உரோமைப் பேரரசு | அங்கேரி நாட்டு புனித எலிசபெத்து என்பவரைப் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்; பிரான்சு நாட்டில் சமய விசாரணை தொடங்கிவைத்தார். | |
179/3 | 25 அக்டோபர் 1241 – 10 நவம்பர் 1241 (17 நாட்கள்) |
நான்காம் செலஸ்தீன் Papa COELESTINUS Quartus |
கொஃப்ஃப்ரேடோ கஸ்திலியோனிமிலான், இத்தாலிய அரசு, புனித உரோமைப் பேரரசு | பட்டமளிப்பு விழாவுக்கு முன் இறந்துபோனார். | ||
180/4 | 25 ஜூன் 1243 – 7 டிசம்பர் 1254 (11 வருடங்கள்) |
நான்காம் இன்னசெண்ட் (மாசிலோன்) Papa INNOCENTIUS Quartus |
சினிபால்தோ ஃபியேஸ்கி | ஜேனொவா, ஜேனொவா குடியரசு, புனித உரோமைப் பேரரசு | இவர் 1245இல் முதலாம் லயன்ஸ் சங்கத்தைத் தொடங்கினார். | |
181/5 | 12 டிசம்பர் 1254 – 25 மே 1261 (6 வருடங்கள்) |
நான்காம் அலக்சாண்டர் Papa ALEXANDER Quartus |
ரினால்தோ தேயி கோந்தி தெ யேன்னே | யென்னே, திருத்தந்தை நாடுகள், புனித உரோமைப் பேரரசு | ||
182/6 | 29 ஆகஸ்ட் 1261 – 2 அக்டோபர் 1264 (3 வருடங்கள்) |
நான்காம் அர்பன் Papa URBANUS Quartus |
துரோய், ஷம்பாஞ், பிரான்சு | |||
183/7 | 5 பெப்ரவரி 1265 – 29 நவம்பர் 1268 (3 வருடங்கள்) |
நான்காம் கிளமெண்ட்(சாந்தப்பர்) Papa CLEMENS Quartus |
கி ஃபவுக்கோய் | சேங்க் ழில், லாங்கெதோக், [பிரான்சு] | ||
(தகவல் இல்லை) | 29 நவம்பர் 1268 – 1 செப்டம்பர் 1271 (2 வருடங்கள்) |
இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலம் | 1268 முதல் 1271 வரை சுமார் மூன்றாண்டு காலம் சட்டப்பூர்வமான திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படவில்லை. திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்மார் இடையே ஒத்த கருத்து ஏற்படாததே இதற்குக் காரணம். | |||
184/8 | 1 செப்டம்பர் 1271 – 10 சனவரி 1276 (4 வருடங்கள்) |
முத்திப்பேறு பெற்ற பத்தாம் கிரகோரி Papa GREGORIUS Decimus |
தெபால்தோ, விசுகோந்தியர் குலம் | பியச்சேன்சா, இத்தாலிய அரசு, புனித உரோமைப் பேரரசு | 1274இல் இரண்டாம் லியோன் பொதுச்சங்கத்தைக் கூட்டினார் | |
185/9 | 21 சனவரி 1276 – 22 சூன் 1276 |
முத்திப்பேறு பெற்ற ஐந்தாம் இன்னசெண்ட் (மாசிலோன்), சாமிநாதர் சபை Papa INNOCENTIUS Quintus |
பியர் தே தரெந்தேசே | சவோயா மாவட்டம், புனித உரோமைப் பேரரசு | இவர் புனித சாமிநாதர் சபையைச் சேர்ந்தவர். | |
186/10 | 11 சூலை 1276 – 18 ஆகஸ்ட் 1276 |
ஐந்தாம் ஹேட்ரியன் (திருத்தந்தை) Papa HADRIANUS Quintus |
ஜேனொவா, ஜேனொவா குடியரசு, புனித உரோமைப் பேரரசு | |||
187/11 | 8 செப்டம்பர் 1276 – 20 மே 1277 |
இருபத்தொன்றாம் யோவான் (அருளப்பர்) Papa IOANNES Vicesimus Primus |
பேத்ரோ ஹிஸ்பானோ | லிசுபன், போர்த்துகல் | 13ஆம் நூற்றாண்டில் "யோவான்" என்ற பெயர்கொண்ட திருத்தந்தையரை எண்ணியதில் குழப்பம் ஏற்பட்டது. இருபதாம் யோவான் என்னும் பெயர்கொண்ட திருத்தந்தை ஒருவர் இருக்கவில்லை என்று பின்னர் தெரியவந்தது. இருபத்தொன்றாம் யோவான் மருத்துவத்தில் ஆர்வம் கொண்டவர். அவர் தம் மருத்துவ சோதனைக் கூடத்தில் இருந்தபோது கூரை இடிந்துவிழுந்து இறந்துபோனார். | |
188/12 | 25 நவம்பர் 1277 – 22 ஆகஸ்ட் 1280 (2 வருடங்கள்) |
மூன்றாம் நிக்கோலாஸ் Papa NICOLAUS Tertius |
ஜொவான்னி கயெத்தானோ ஓர்ஸீனி | உரோமை, திருத்தந்தை நாடுகள், புனித உரோமைப் பேரரசு | ||
189/13 | 22 பெப்ரவரி 1281 – 28 மார்ச் 1285 (4 வருடங்கள்) |
நான்காம் மார்ட்டின் Papa MARTINUS Quartus |
சீமோன் தே ப்ரியோன் | மேம்பிசியேன், தூரேய்ன், பிரான்சு | ||
190/14 | 2 ஏப்ரல் 1285 – 3 ஏப்ரல் 1287 (2 வருடங்கள்) |
நான்காம் ஹோனோரியஸ் Papa HONORIUS Quartus |
ஜாக்கமோ சவேல்லி | உரோமை, திருத்தந்தை நாடுகள், புனித உரோமைப் பேரரசு | ||
191/15 | 22 பெப்ரவரி 1288 – 4 ஏப்ரல் 1292 (4 வருடங்கள்) |
ஐந்தாம் நிக்கோலாஸ் (பிரான்சிஸ்கு சபை) Papa NICOLAUS Quartus |
ஜிரோலமோ மாஷி | லிஷானோ, திருத்தந்தை நாடுகள், புனித உரோமைப் பேரரசு | இவர் புனித பிரான்சிஸ்கு சபை உறுப்பினராக இருந்தார். | |
(தகவல் இல்லை) | 4 ஏப்ரல் 1292 – 5 ஜூலை 1294 (2 வருடங்கள்) |
இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலம் | 1292 முதல் 1294 வரை சுமார் ஈராண்டு காலம் சட்டப்பூர்வமான திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படவில்லை. திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்மார் இடையே ஒத்த கருத்து ஏற்படாததே இதற்குக் காரணம். | |||
192/16 | 5 சூலை 1294 – 13 டிசம்பர் 1294 (223 நாட்கள்) |
புனித ஐந்தாம் செலஸ்தீன், (புனித ஆசீர்வாதப்பர் சபை) Papa COELESTINUS Quintus |
பியேத்ரோ தா மொர்ரோனே | சாந்தாஞ்சலோ லிமோசானோ, சிசிலி அரசு | வரலாற்றில் பதவி துறந்த ஒருசில திருத்தந்தையருள் இவரும் ஒருவர். இவர் புனித ஆசீர்வாதப்பர் சபை உறுப்பினராக இருந்தார். | |
193/17 | 24 டிசம்பர் 1294 – 11 அக்டோபர் 1303 (8 வருடங்கள்) |
எட்டாம் போனிஃபாஸ் Papa BONIFACIUS Octavus |
பெனெதெத்தோ கயெத்தானி | அனாஞ்ஞி, திருத்தந்தை நாடுகள், புனித உரோமைப் பேரரசு |
14ஆம் நூற்றாண்டு
தொகுஎண் வரிசை | பணிக்காலம் | படம் | பெயர் (தமிழ்-இலத்தீன்) |
இயற்பெயர் | பிறப்பிடம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
194/1 | 22 அக்டோபர் 1303 – 7 ஜூலை 1304 (0 ஆண்டுகள், 259 நாட்கள்) |
முத்திப்பேறு பெற்ற பதினோராம் பெனடிக்ட் (ஆசீர்வாதப்பர்), (சாமிநாதர் சபை) Papa BENEDICTUS Undecimus |
நிக்கொலோ பொக்கஸீனி | த்ரெவீஸோ, இத்தாலியா, புனித உரோமைப் பேரரசு | புனித சாமிநாதர் சபை உறுப்பினர். | |
195/2 | 5 ஜூன் 1305 – 20 ஏப்ரல் 1314 (8 ஆண்டுகள், 319 நாட்கள்) |
ஐந்தாம் கிளமெண்ட்(சாந்தப்பர்) Papa CLEMENS Quintus |
பெர்த்ராண்ட் தெ கோத் | வில்லானந்த்ரோ, காஸ்கொனி, பிரான்சு | அவிஞ்ஞோன் நகரில் தங்கிய திருத்தந்தை. 1311-1312இல் வியன்னா சங்கத்தைக் கூட்டினார். பிரான்சிய மன்னர் நான்காம் பிலிப்பு என்பவரின் வற்புறுத்தலின் காரணமாக, "கோவில் வீரர்கள்" என்னும் குழுவினரைத் துன்புறுத்தும் செயல் இவர் ஆட்சியில் தொடங்கியது. | |
(தகவல் இல்லை) | 20 ஏப்ரல் 1314 – 7 ஆகஸ்ட் 1316 |
இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலம் | 1314 முதல் 1316 வரை சுமார் ஈராண்டு காலம் சட்டப்பூர்வமான திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படவில்லை. திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்மார் இடையே ஒத்த கருத்து ஏற்படாததே இதற்குக் காரணம். | |||
196/3 | 7 ஆகஸ்ட் 1316 – 4 டிசம்பர் 1334 (18 ஆண்டுகள், 119 நாட்கள்) |
இருபத்திரண்டாம் யோவான் (அருளப்பர்) Papa IOANNES Vicesimus Secundus |
ழாக் தூஸ் | கஹோர்ஸ், கெர்சி, பிரான்சு | அவிஞ்ஞோன் நகரில் தங்கிய திருத்தந்தை. | |
197/4 | 20 டிசம்பர் 1334 – 25 ஏப்ரல் 1342 (7 ஆண்டுகள், 126 நாட்கள்) |
பன்னிரண்டாம் பெனடிக்ட் (ஆசீர்வாதப்பர்), (சிஸ்தேர்சிய சபை) Papa BENEDICTUS Duodecimus |
ழாக் ஃபூர்னியே | சாவர்தன், ஃபுவா வட்டம், பிரான்சு | அவிஞ்ஞோன் நகரில் தங்கிய திருத்தந்தை. சிஸ்தேர்சிய சபை உறுப்பினர். | |
198/5 | 7 மே 1342 – 6 டிசம்பர் 1352 (10 ஆண்டுகள், 213 நாட்கள்) |
ஆறாம் கிளமெண்ட் (சாந்தப்பர்), (புனித ஆசீர்வாதப்பர் சபை) Papa CLEMENS Sextus |
பியேர் ரோஜேர் | மோமோந்த், லிமுஸீன், பிரான்சு | அவிஞ்ஞோன் நகரில் தங்கிய திருத்தந்தை. | |
199/6 | 18 டிசம்பர் 1352 – 12 செப்டம்பர் 1362 (9 ஆண்டுகள், 268 நாட்கள்) |
ஆறாம் இன்னசண்ட் (மாசிலோன்) Papa INNOCENTIUS Sextus |
எத்தியேன் ஓபேர்ட் | லெ மோன், லிமுஸீன், பிரான்சு | அவிஞ்ஞோன் நகரில் தங்கிய திருத்தந்தை. | |
200/7 | 28 செப்டம்பர் 1362 – 19 டிசம்பர் 1370 (8 ஆண்டுகள், 82 நாட்கள்) |
முத்திப்பேறு பெற்ற ஐந்தாம் அர்பன்,(புனித ஆசீர்வாதப்பர் சபை) Papa URBANUS Quintus |
கிய்யோம் தெ க்ரிமோர்த் | க்ரிசாக், லாங்கெதோக் பிரான்சு | அவிஞ்ஞோன் நகரில் தங்கிய திருத்தந்தை. புனித ஆசீர்வாதப்பர் சபை உறுப்பினர். | |
201/8 | 30 டிசம்பர் 1370 – 26 மார்ச் 1378 (7 ஆண்டுகள், 86 நாட்கள்) |
ஒன்பதாம் கிரகோரி Papa GREGORIUS Undecimus |
பியர் ரோஜேர் தெ போஃபோர்ட் | மோமோந்த், லிமுஸீன், பிரான்சு | அவிஞ்ஞோன் நகரில் தங்கிய திருத்தந்தை. உரோமை நகருக்குத் திரும்பிச் சென்றார். கடைசி பிரான்சிய திருத்தந்தை | |
202/9 | 8 ஏப்ரல் 1378 – 15 அக்டோபர் 1389 (11 ஆண்டுகள், 190 நாட்கள்) |
ஆறாம் அர்பன் Papa URBANUS Sextus |
பர்த்தலமேயோ ப்ரிஞ்ஞானோ | நேப்பிள்ஸ் அரசு | யாரைத் திருத்தந்தையாக ஏற்பது என்பது குறித்து மேற்கு திருச்சபையில் பிளவு ஏற்பட்டது ("பெரும் பிளவு") | |
203/10 | 2 நவம்பர் 1389 – 1 அக்டோபர் 1404 (14 ஆண்டுகள், 334 நாட்கள்) |
ஒன்பதாம் போனிஃபாஸ் Papa BONIFACIUS Nonus |
பியேத்ரோ தொமாசெல்லி | நேப்பிள்ஸ் அரசு | யாரைத் திருத்தந்தையாக ஏற்பது என்பது குறித்து மேற்கு திருச்சபையில் பிளவு ஏற்பட்டது ("பெரும் பிளவு") |
15ஆம் நூற்றாண்டு
தொகு- R இத்திருத்தந்தை பதவி துறந்தார்.
- B எட்டாம் இன்னசெண்ட், மற்றும் நான்காம் யூஜின் என்பவருக்கு முன் பதவியேற்ற ஏறக்குறைய அனைத்துத் திருத்தந்தையரின் பிறந்த நாள் துல்லியமாகத் தெரியவில்லை. எனவே கீழ்வரும் பட்டியலில் மிகக் குறைந்த ஊக வயது தரப்பட்டுள்ளது.
எண் வரிசை | காலம் | படம் | பெயர் (தமிழ்-இலத்தீன்) |
இயற்பெயர் | பிறப்பிடம் | பணிக்காலத் தொடக்கத்தில் / முடிவில் வயது | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|---|
204/1 | 17 அக்டோபர் 1404 – 6 நவம்பர் 1406 (2 ஆண்டுகள், 20 நாட்கள்) |
ஏழாம் இன்னசெண்ட் (மாசிலோன்) Papa INNOCENTIUS Septimus |
கோசிமோ ஜெந்தீலே மிலியொராத்தி | சுல்மோனா, நேப்பிள்ஸ் அரசு | 65 / 67 [B] | யாரைத் திருத்தந்தையாக ஏற்பது என்பது குறித்து மேற்கு திருச்சபையில் பிளவு ஏற்பட்டது ("பெரும் பிளவு") | |
205/2 | 30 நவம்பர் 1406 – 4 ஜூலை 1415 (8 ஆண்டுகள், 216 நாட்கள்) |
பன்னிரண்டாம் கிரகோரி Papa GREGORIUS Duodecimus |
ஆஞ்செலோ கொர்ரேர் | வெனிஸ், வெனிஸ் குடியரசு | 60 / 69 [R][B] | யாரைத் திருத்தந்தையாக ஏற்பது என்பது குறித்து மேற்கு திருச்சபையில் பிளவு ஏற்பட்டது ("பெரும் பிளவு"); எதிர்-திருத்தந்தையாகிய இருபத்திமூன்றாம் யோவான் கூட்டிய கொன்ஸ்தான்ஸ் சங்கத்தின்போது பன்னிரண்டாம் கிரகோரி தம் பதவியை விட்டு விலகினார். எதிர்-திருத்தந்தையாகிய இருபத்திமூன்றாம் யோவானின் பெயரை இருபதாம் நூற்றாண்டில் திருச்சபையில் மறுமலர்ச்சி கொணரும் வண்ணம் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைக் கூட்டிய திருத்தந்தையாகிய ஜியுசேப்பே ரொன்கால்லி அக்டோபர் 28, 1958இல் தமதாகத் தேர்ந்துகொண்டார். | |
(தகவல் இல்லை) | 4 ஜூலை 1415 – 11 நவம்பர் 1417 |
இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலம் | சட்டப்பூர்வமான திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்த ஈராண்டு இடைவெளிக்காலம். | ||||
206/3 | 11 நவம்பர் 1417 – 20 பெப்ரவரி 1431 (13 ஆண்டுகள், 101 நாட்கள்) |
ஐந்தாம் மார்ட்டின் Papa MARTINUS Quintus |
ஒடோனே கொலோன்னா | ஜெனஸ்ஸானோ, திருத்தந்தை நாடுகள் | 48 / 62 [B] | 1431இல் பாசல் சங்கத்தைக் கூட்டினார் | |
207/4 | 3 மார்ச் 1431 – 23 பெப்ரவரி 1447 (15 ஆண்டுகள், 357 நாட்கள்) |
நான்காம் யூஜின், (புனித அகுஸ்தீன் சபை) Papa EUGENIUS Quartus |
கபிரியேலோ கொண்டுல்மெர் | வெனிஸ், வெனிஸ் குடியரசு | 47 / 63 [B] | புனித அகுஸ்தீன் சபை உறுப்பினர். இவர் 1433இல் சிஜிஸ்முண்ட் என்பவரைப் புனித உரோமைப் பேரரசராக உரோமையில் முடிசூட்டினார். பாசல் சங்கத்தை ஃபெர்ராரா நகருக்கு மாற்றினார். பின்னர் அது கொள்ளைநோய் காரணமாக ஃப்ளோரன்ஸ் நகருக்கு மாற்றப்பட்டது. | |
208/5 | 6 மார்ச் 1447 – 24 மார்ச் 1455 (8 ஆண்டுகள், 18 நாட்கள்) |
ஐந்தாம் நிக்கோலாஸ் Papa NICOLAUS Quintus |
தொம்மாசோ பரெந்துச்செல்லி | சர்சானா, ஜேனொவா குடியரசு | 49 / 57 | 1450இல் திருச்சபையின் ஜூபிலி ஆண்டு கொண்டாடினார். 1452இல் மூன்றாம் ஃப்ரெடெரிக் என்பவரை புனித உரோமைப் பேரரசராக உரோமையில் முடிசூட்டினார். | |
209/6 | 8 ஏப்ரல் 1455 – 6 ஆகஸ்ட் 1458 (3 ஆண்டுகள், 120 நாட்கள்) |
மூன்றாம் கலிஸ்டஸ் Papa CALLISTUS Tertius |
அல்ஃபோன்சோ தெ போர்ஜியா | வலேன்சியா, அரகோன் அரசு | 76 / 79 | முதல் எசுப்பானிய திருத்தந்தை | |
210/7 | 19 ஆகஸ்ட் 1458 – 15 ஆகஸ்ட் 1464 (5 ஆண்டுகள், 362 நாட்கள்) |
இரண்டாம் பயஸ் (பத்திநாதர்) Papa PIUS Secundus |
எனேயா சில்வியோ பிக்கொலோமினி | கொர்சிஞ்ஞானோ, சியேனா குடியரசு | 52 / 58 | ||
211/8 | 30 ஆகஸ்ட் 1464 – 26 ஜூலை 1471 (6 ஆண்டுகள், 330 நாட்கள்) |
இரண்டாம் பவுல்(சின்னப்பர்) Papa PAULUS Secundus |
பியேத்ரோ பார்போ | வெனிஸ், வெனிஸ் குடியரசு | 47 / 54 | நான்காம் யூஜின் என்னும் திருத்தந்தையின் உடன்பிறப்பின் மகன். | |
212/9 | 9 ஆகஸ்ட் 1471 – 12 ஆகஸ்ட் 1484 (13 ஆண்டுகள், 3 நாட்கள்) |
ஆறாம் சிக்ஸ்டஸ்,(புனித பிரான்சிஸ்கு சபை) Papa XYSTUS Quartus |
பிரான்சிஸ்கோ தெல்லா ரோவெரே | செல்லே லீகுரே, ஜேனொவா குடியரசு | 57 / 70 | இவர் பிரான்சிஸ்கு சபைத் துறவியாக இருந்தார். வத்திக்கானில் உள்ள சிஸ்டைன் சிற்றாலயம் உருவாக்கப் பணியைத் தொடங்கினார். எசுப்பானிய அரசர் பெர்டினாண்டு மற்றும் அரசி இசபெல்லா என்பவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இவர் எசுப்பானிய யூத கிறித்தவர்கள் சமய விசாரணைக்கு உட்பட வேண்டுமென விதித்தார். | |
213/10 | 29 ஆகஸ்ட் 1484 – 25 சூலை 1492 (7 ஆண்டுகள், 331 நாட்கள்) |
எட்டாம் இன்னசெண்ட்(மாசிலோன்) Papa INNOCENTIUS Octavus |
ஜொவான்னி பத்தீஸ்தா சீபோ | ஜேனொவா, ஜேனொவா குடியரசு | 51 / 59 [B] | சமய விசாரணைத் தலைவராக தோமாஸ் தோர்க்கேமாதா என்பவரை நியமித்தார். | |
214/11 | 11 ஆகஸ்ட் 1492 – 18 ஆகஸ்ட் 1503 (11 ஆண்டுகள், 7 நாட்கள்) |
ஆறாம் அலெக்சாண்டர் Papa ALEXANDER Sextus |
ரோட்ரிகோ தெ லான்சோல், போர்ஜியா | வலேன்சியா அரசு, அரகோன் ஆட்சி | 61 / 72 | இவர் மூன்றாம் கலிஸ்டஸ் என்னும் திருத்தந்தையின் உடன்பிறப்பின் மகன். இவரது பிள்ளைகள் சேசரே போர்ஜியா, லுக்ரேசியா போர்ஜியா ஆவர். 1493இல் இவர் பூமி உருண்டையில் ஐரோப்பாவுக்கு அப்பாற்பட்ட நாடுகளை மேற்கு, கிழக்கு என்று இரண்டாகப் பிரித்து, அவற்றோடு வணிகத் தொடர்பு கொள்ளவும் அவ்விடங்களில் கிறித்தவ சமயத்தைப் பரப்பவும் கத்தோலிக்க நாடுகளாகிய எசுப்பானியா, போர்த்துகல் ஆகிவற்றிடம் பொறுப்புக் கொடுத்தார். இந்தியா உட்பட்ட கிழக்கு நாடுகள் போர்த்துகல்லின் பொறுப்பில் விடப்பட்டன. |
16 - 20ஆம் நூற்றாண்டுகள்
தொகு16ஆம் நூற்றாண்டு
தொகுஎண் வரிசை | காலம் | படம் | பெயர் (தமிழ்-இலத்தீன்) |
இயற்பெயர் | பிறப்பிடம் | பணிக்காலத் தொடக்கத்தில் / முடிவில் வயது | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|---|
215/1 | 22 செப்டம்பர் 1503 – 18 அக்டோபர் 1503 (0 ஆண்டுகள், 26 நாட்கள்) |
மூன்றாம் பயஸ்(பத்திநாதர்) Papa PIUS Tertius |
பிரான்செஸ்கோ தொடெஸ்கீனி பீக்கொலோமினி | சீயேனா, சீயேனா குடியரசு | 64 / 64 | இவர் இரண்டாம் பயஸ் என்னும் திருத்தந்தையின் உடன்பிறப்பின் மகன் ஆவார். | |
216/2 | 31 அக்டோபர் 1503 – 21 பெப்ரவரி 1513 (9 ஆண்டுகள், 113 நாட்கள்) |
இரண்டாம் ஜூலியுஸ் Papa IULIUS Secundus |
ஜூலியானோ தெல்லா ரோவெரே | ஆல்பிசோலா, ஜேனொவா குடியரசு | 59 / 69 | இவர் ஆறாம் சிக்ஸ்துஸ் என்னும் திருத்தந்தையின் உடன்பிறப்பின் மகன் ஆவார். இவர் 1512இல் ஐந்தாம் இலாத்தரன் பொதுச்சங்கத்தைக் கூட்டினார். வத்திக்கானில் தூய பேதுரு பெருங்கோவிலைக் கட்டுவதற்குத் தொடக்கத் திட்டங்கள் வரைந்தார். சிஸ்டைன் சிற்றாலயத்தில் சுவர் ஓவியங்கள் வரையும் பணியை மைக்கிலாஞ்சலோ என்னும் தலைசிறந்த ஓவியரிடம் ஒப்படைத்தார். முதன்முறையாக, திருத்தந்தை நாடுகள் என்று அழைக்கப்படும் நாட்டுப் பகுதியைத் தம் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். | |
217/3 | 9 மார்ச் 1513 – 1 டிசம்பர் 1521 (8 ஆண்டுகள், 267 நாட்கள்) |
பத்தாம் லியோ Papa LEO Decimus |
ஜொவான்னி தெ லொரேன்சோ தே மேதிச்சி | புளோரன்சு, புளோரன்சு குடியரசு | 37 / 45 | இவர் லொரேன்சோ தே மேதிச்சி என்னும் ஆளுநரின் மகன் ஆவார். இவர் மார்ட்டின் லூதர் தவறான கொள்கைகளைப் பரப்பினார் என்று குற்றம் சாட்டி அவரைச் சபைநீக்கம் செய்தார். சமய விசாரணையை எசுப்பானியாவிலிருந்து போர்த்துகல்லுக்கு விரிவாக்கினார். | |
218/4 | 9 ஜனவரி 1522 – 14 செப்டம்பர் 1523 (1 ஆண்டு, 248 நாட்கள்) |
நான்காம் ஹேட்ரியன் Papa HADRIANUS Sextus |
அட்ரியான் புளோரிசோன் பேயன்ஸ் | உட்ரெக்ட், உட்ரெக்ட் மறைமாவட்டம், புனித உரோமைப் பேரரசு, இன்றைய ஓலாந்து | 62 / 64 | ஓலாந்து பகுதியிலிருந்து வந்த ஒரே டச்சு திருத்தந்தை இவர் ஆவார். இவருக்குப் பிறகு இத்தாலியரல்லாத திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் போலந்து நாட்டைச் சார்ந்த திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் (அருள் சின்னப்பர்) (ஆட்சிக்காலம்: 1978-2004) ஆவார். திருத்தந்தை நான்காம் ஹேட்ரியன் பிற்கால புனித உரோமைப் பேரரசு மன்னராகிய ஐந்தாம் சார்லஸ் என்பவருக்கு ஆசிரியராக இருந்தார். | |
219/5 | 26 நவம்பர் 1523 – 25 செப்டம்பர் 1534 (10 ஆண்டுகள், 303 நாட்கள்) |
ஏழாம் கிளமெண்ட்(சாந்தப்பர்) Papa CLEMENS Septimus |
ஜூலியோ தி ஜூலியானோ தே மேதிச்சி | புளோரன்சு, புளோரன்சு குடியரசு | 45 / 56 | இவர் பத்தாம் லியோ என்னும் திருத்தந்தையின் உறவினர் ஆவார். இவர் ஆட்சியின்போது 1527இல் பேரரசின் இராணுவம் உரோமை நகரைச் சூறையாடியது. இங்கிலாந்தின் மன்னர் எட்டாம் ஹென்றி தம் மனைவியாகிய கத்தரீனாவை விவாகரத்து செய்ய அனுமதி கோரியதை ஏழாம் கிளமெண்ட் ஏற்கவில்லை. 1530இல் பொலோஞ்ஞா நகரில் ஐந்தாம் சார்லசைப் பேரரசராக முடிசூட்டினார். | |
220/6 | 13 அக்டோபர் 1534 – 10 நவம்பர் 1549 (15 ஆண்டுகள், 28 நாட்கள்) |
மூன்றாம் பவுல்(சின்னப்பர்) Papa PAULUS Tertius |
ஃப்ர்னேஸே அலெஸ்ஸாண்ட்றோ | கனீனோ, லாத்சியோ, திருத்தந்தை நாடுகள் | 66 / 81 | 1545இல் திரெந்து நகரில் பொதுச்சங்கத்தைக் கூட்டினார். இச்சங்கம் மார்ட்டின் லூதர் போன்ற சீர்திருத்தவாதிகளின் கொள்கைகளை ஆய்ந்தது. கத்தோலிக்க திருச்சபையில் சீர்திருத்தம் கொணர பல திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்தியது. கிறித்தவக் கோட்பாடுகளுக்கு விளக்கம் அளித்தது. | |
221/7 | 7 பெப்ரவரி 1550 – 29 மார்ச் 1555 (5 ஆண்டுகள், 50 நாட்கள்) |
மூன்றாம் ஜூலியுஸ் Papa IULIUS Tertius |
ஜொவான்னி மரியா சியோக்கி தெல் மோந்தே | உரோமை, திருத்தந்தை நாடுகள் | 62 / 67 | ||
222/8 | 9 ஏப்ரல் 1555 – 30 ஏப்ரல் or 1 மே 1555 (0 years, 21/22 days) |
இரண்டாம் மர்செல்லுஸ் Papa MARCELLUS Secundus |
மர்செல்லோ செர்வீனி | மோந்தேஃபானோ, மார்த்கே, திருத்தந்தை நாடுகள் | 53 / 53 | ஆட்சிப் பெயராகத் தம் இயற்பெயரைப் பயன்படுத்திய கடைசி திருத்தந்தை இவரே ஆவார். | |
223/9 | 23 மே 1555 – 18 ஆகஸ்ட் 1559 (4 ஆண்டுகள், 87 நாட்கள்) |
நான்காம் பவுல் (சின்னப்பர்), (தேயாத்தீன் சபை) Papa PAULUS Quartus |
ஜொவான்னி பியேத்ரோ கராஃபா | கப்ரீலியா இர்ப்பீனா, கம்பானியா, நேப்பிள்ஸ் அரசு | 78 / 83 | ||
224/10 | 26 டிசம்பர் 1559 – 9 டிசம்பர் 1565 (5 ஆண்டுகள், 348 நாட்கள்) |
நான்காம் பயஸ் Papa PIUS Quartus |
ஜொவான்னி ஆஞ்செலோ மேதிச்சி | மிலான், மிலான் மாநிலம் | 60 / 66 | தடைபட்ட திரெந்து பொதுச்சங்கத்தை மீண்டும் 1562இல் கூட்டினார். சங்கம் 1563இல் நிறைவுற்றது. | |
225/11 | 7 ஜனவரி 1566 – 1 மே 1572 (6 ஆண்டுகள், 115 நாட்கள்) |
புனித ஐந்தாம் பயஸ் (பத்திநாதர்), (சாமிநாதர் சபை) Papa PIUS Quintus |
மிக்கேலே கிஸ்லியேரி | போஸ்கோ, மிலான் மாநிலம் | 61 / 68 | இவர் சாமிநாதர் சபை உறுப்பினர். 1570இல் இங்கிலாந்து அரசியாகிய முதலாம் எலிசபெத்தை இவர் சபைநீக்கம் செய்தார். இவர் காலத்தில் 1571ஆம் ஆண்டு துருக்கிக் கடற்கரையில் அமைந்த லெப்பாந்தோ நகரில் நிகழ்ந்த போரில் கிறித்தவ நாடுகளின் ஐக்கியம் ஓட்டோமான் பேரரசின் கடற்படையைத் தோற்கடித்தது. இவ்வாறு, ஓட்டோமான் ஆட்சி ஐரோப்பாவில் பரவுவது தடுக்கப்பட்டது. | |
226/12 | 13 மே 1572 – 10 ஏப்ரல் 1585 (12 ஆண்டுகள், 332 நாட்கள்) |
பதின்மூன்றாம் கிரகோரி GREGORIUS Tertius Decimus |
ஊகோ போன்கொம்பாஞ்ஞி | பொலோஞ்ஞா, திருத்தந்தை நாடுகள் | 70 / 83 | 1582இல் ஜூலியன் நாட்காட்டியைச் சீர்திருத்தி அமைத்தார். திருத்தப்பெற்ற நாட்காட்டி இன்றுவரை வழக்கத்தில் உள்ளது. | |
227/13 | 24 ஏப்ரல் 1585 – 27 ஆகஸ்ட் 1590 (5 ஆண்டுகள், 125 நாட்கள்) |
ஐந்தாம் சிக்ஸ்துஸ் (பிரான்சிஸ்கன் சபை) Papa XYSTUS Quintus |
ஃபெலீச்சே பெரெத்தி | குரோத்தாம்மாரே, மார்க்கே, திருத்தந்தை நாடுகள் | 63 / 68 | இவர் பிரான்சிஸ்கன் சபைத் துறவி ஆவார். | |
228/14 | 15 செப்டம்பர் 1590 – 27 செப்டம்பர் 1590 (0 ஆண்டுகள், 12 நாட்கள்) |
ஏழாம் அர்பன் Papa URBANUS Septimus |
ஜொவான்னி பத்தீஸ்தா கஸ்தாஞ்ஞா | உரோமை, திருத்தந்தை நாடுகள் | 69 / 69 | பன்னிரண்டு நாட்கள் மட்டுமே பதவியில் இருந்த இவர் வரலாற்றிலேயே மிகக் குறைந்த கால ஆட்சிசெய்த திருத்தந்தை ஆவார். முடிசூட்டப்படும் முன்னேயே காலமானார். | |
229/15 | 5 டிசம்பர் 1590 – 15/16 அக்டோபர் 1591 (0 years, 314/315 days) |
பதினான்காம் கிரகோரி Papa GREGORIUS Quartus Decimus |
நிக்கோலோ ஸ்ஃபொண்ட்றாத்தி | மிலான் மாநிலம் | 55 / 56 | ||
230/16 | 29 அக்டோபர் 1591 – 30 டிசம்பர் 1591 (0 ஆண்டுகள், 62 நாட்கள்) |
ஒன்பதாம் இன்னசெண்ட் (மாசிலோன்) Papa INNOCENTIUS Nonus |
ஜொவான்னி அந்தோனியோ ஃபக்கினேத்தி | பொலோஞ்ஞா, திருத்தந்தை நாடுகள் | 72 / 72 | ||
231/17 | 30 ஜனவரி 1592 – 3 மார்ச் 1605 (13 ஆண்டுகள், 32 நாட்கள்) |
எட்டாம் கிளமெண்ட்(சாந்தப்பர்) Papa CLEMENS Octavus |
இப்பொலீத்தோ ஆல்தோப்ராந்தீனி | ஃபானோ, மார்க்கே, திருத்தந்தை நாடுகள் | 55 / 69 |
17ஆம் நூற்றாண்டு
தொகுஎண் வரிசை | காலம் | படம் | பெயர் (தமிழ்-இலத்தீன்) |
இயற்பெயர் | பிறப்பிடம் | பணிக்காலத் தொடக்கத்தில் / முடிவில் வயது | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|---|
232/1 | 1 ஏப்ரல் 1605 – 27 ஏப்ரல் 1605 (0 ஆண்டுகள், 26 நாட்கள்) |
ஒன்பதாம் லியோ (சிங்கராயர்) Papa LEO Undecimus |
அலெஸ்ஸாண்ட்றோ ஒட்டவியானோ தே மேதிச்சி | புளோரன்ஸ், புளோரன்ஸ் மாநிலம் | 69 / 69 | ||
233/2 | 16 மே 1605 – 28 சனவரி 1621 (15 ஆண்டுகள், 257 நாட்கள்) |
ஐந்தாம் பவுல் (சின்னப்பர்) Papa PAULUS Quintus |
கமில்லோ பொர்கேஸே | உரோமை, திருத்தந்தை நாடுகள் | 52 / 68 | பல சிறப்புமிக்க கட்டடங்களை எழுப்பினார். வத்திக்கானில் புனித பேதுரு பெருங்கோவிலின் முகப்பை எழிலுற அமைத்தார். | |
234/3 | 9 பெப்ரவரி 1621 – 8 ஜூலை 1623 (2 ஆண்டுகள், 149 நாட்கள்) |
பதினைந்தாம் கிரகோரி Papa GREGORIUS Quintus Decimus |
அலெஸ்ஸாண்ட்றோ லுடோவிசி | பொலோஞ்ஞா, திருத்தந்தை நாடுகள் | 67 / 69 | ||
235/4 | 6 ஆகஸ்ட் 1623 – 29 ஜூலை 1644 (20 ஆண்டுகள், 358 நாட்கள்) |
எட்டாம் அர்பன் Papa URBANUS Octavus |
மஃபேயோ பார்பெரீனி | புளோரன்ஸ், டஸ்கனி பெருமாநிலம் | 55 / 76 | கலிலேயோ கலிலேயி இவரது ஆட்சிக் காலத்தில் விசாரிக்கப்பட்டார். | |
236/5 | 15 செப்டம்பர் 1644 – 7 ஜனவரி 1655 (10 ஆண்டுகள், 114 நாட்கள்) |
பத்தாம் இன்னசெண்ட் (மாசிலோன்) Papa INNOCENTIUS Decimus |
ஜொவான்னி பத்திஸ்தா பம்ஃபீலி | உரோமை, திருத்தந்தை நாடுகள் | 70 / 80 | ||
237/6 | 7 ஏப்ரல் 1655 – 22 மே 1667 (12 ஆண்டுகள், 45 நாட்கள்) |
ஏழாம் அலெக்சாண்டர் Papa ALEXANDER Septimus |
ஃபாபியோ கீஜி | சியேனா, டஸ்கனி பெருமாநிலம் | 56 / 68 | ||
238/7 | 20 ஜூன் 1667 – 9 டிசம்பர் 1669 (2 ஆண்டுகள், 172 நாட்கள்) |
ஒன்பதாம் கிளமெண்ட் (சாந்தப்பர்) Papa CLEMENS Nonus |
ஜூலியோ ரொஸ்பீலியோசி | பிஸ்தோயா, டஸ்கனி பெருமாநிலம் | 67 / 69 | ||
239/8 | 29 ஏப்ரல் 1670 – 22 ஜூலை 1676 (6 ஆண்டுகள், 84 நாட்கள்) |
பத்தாம் கிளமெண்ட் Papa CLEMENS Decimus |
எமீலியோ அல்த்தியேரி | உரோமை,திருத்தந்தை நாடுகள் | 79 / 86 | ||
240/9 | 21 செப்டம்பர் 1676 – 11/12 ஆகஸ்ட் 1689 (12 years, 324/325 days) |
முத்திப்பேறு பெற்ற பதினொன்றாம் இன்னசெண்ட் (மாசிலோன்) Papa INNOCENTIUS Undecimus |
பெனெதேத்தோ ஒடெஸ்கால்க்கி | கோமோ, மிலான் மாநிலம் | 65 / 78 | ||
241/10 | 6 அக்டோபர் 1689 – 1 பெப்ரவரி 1691 (1 ஆண்டு, 118 நாட்கள்) |
எட்டாம் அலெக்சாண்டர் Papa ALEXANDER Octavus |
பியேத்ரோ வீத்தோ ஓட்டோபோனி | வெனிஸ், வெனிஸ் குடியரசு | 79 / 80 | ||
242/11 | 12 ஜூலை 1691 – 27 செப்டம்பர் 1700 (9 ஆண்டுகள், 77 நாட்கள்) |
பன்னிரண்டாம் இன்னசெண்ட் (மாசிலோன்) Papa INNOCENTIUS Duodecimus |
அந்தோனியோ பிஞ்ஞத்தெல்லி | ஸ்பினத்ஸோலா, நேப்பிள்ஸ் அரசு | 76 / 85 | ||
243/12 | 23 நவம்பர் 1700 – 19 மார்ச் 1721 (20 ஆண்டுகள், 116 நாட்கள்) |
பதினொன்றாம் கிளமெண்ட் (சாந்தப்பர்) Papa CLEMENS Undecimus |
ஜொவான்னி ஃப்ரான்சேஸ்கோ அல்பானி | உர்பீனோ, மார்க்கே, திருத்தந்தை நாடுகள் | 51 / 71 | இந்தியா, சீனா போன்ற நாடுகளில் கிறித்தவ மறையைப் பரப்பும்போது எந்த அளவுக்கு அந்நாடுகளின் கலாச்சாரத்தைத் தழுவுவது என்னும் விவாதம் இவர் காலத்தில் நிகழ்ந்தது. |
18ஆம் நூற்றாண்டு
தொகுஎண் வரிசை | காலம் | படம் | பெயர் (தமிழ்-இலத்தீன்) |
இயற்பெயர் | பிறப்பிடம் | பணிக்காலத் தொடக்கத்தில் / முடிவில் வயது | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|---|
244/1 | 8 மே 1721 – 7 மார்ச் 1724 (2 ஆண்டுகள், 304 நாட்கள்) |
பதின்மூன்றாம் இன்னசெண்ட் (மாசிலோன்) Papa INNOCENTIUS Tertius Decimus |
மிக்கேலாஞ்செலோ தே கோண்டி | போலி, லாத்சியோ, திருத்தந்தை நாடுகள் | 65 / 68 | ||
245/2 | 29 மே 1724 – 21 பெப்ரவரி 1730 (5 ஆண்டுகள், 268 நாட்கள்) |
பதின்மூன்றாம் பெனடிக்ட் (ஆசீர்வாதப்பர்) Papa BENEDICTUS Tertius Decimus |
பியர்ஃபிரான்செஸ்கோ ஒர்சீனி | நேப்பிள்ஸ் | 75 / 81 | சாமிநாதர் சபையைச் சார்ந்தவர். | |
246/3 | 12 ஜூலை 1730 – 6 பெப்ரவரி 1740 (9 ஆண்டுகள், 209 நாட்கள்) |
பன்னிரண்டாம் கிளமெண்ட் (சாந்தப்பர்) Papa CLEMENS Duodecimus |
லொரேன்சோ கோர்சீனி | பிளாரன்ஸ் | 78 / 87 | ||
247/4 | 17 ஆகஸ்ட் 1740 – 3 மே 1758 (17 ஆண்டுகள், 259 நாட்கள்) |
பதினான்காம் பெனடிக்ட் (ஆசீர்வாதப்பர்) Papa BENEDICTUS Quartus Decimus |
ப்ரோஸ்பெரோ லோரேன்சோ லம்பெர்த்தீனி | பொலோஞ்ஞா, திருத்தந்தை நாடுகள் | 65 / 83 | ||
248/5 | 6 ஜூலை 1758 – 2 பெப்ரவரி 1769 (10 ஆண்டுகள், 211 நாட்கள்) |
பதின்மூன்றாம் கிளமெண்ட் (சாந்தப்பர்) Papa CLEMENS Tertius Decimus |
கார்லோ தெல்லா தோர்ரே ரெத்ஸோனிக்கோ | வெனிஸ், வெனிஸ் குடியரசு | 65 / 75 | ||
249/6 | 19 மே 1769 – 22 செப்டம்பர் 1774 (5 ஆண்டுகள், 126 நாட்கள்) |
பதினான்காம் கிளமெண்ட், (பிரான்சிஸ்கன் சபை) Papa CLEMENS Quartus Decimus |
ஜொவான்னி வின்சேன்சோ அந்தோனியோ கன்கானெல்லி | சாந்தர்க்காஞ்செலோ தி ரொமாஞ்ஞா, திருத்தந்தை நாடுகள் | 63 / 68 | சாமிநாதர் சபையைச் சேர்ந்தவர். இவர் காலத்தில் இயேசு சபை முடக்கப்பட்டது. | |
250/7 | 15 பெப்ரவரி 1775 – 29 ஆகஸ்ட் 1799 (24 ஆண்டுகள், 195 நாட்கள்) |
ஆறாம் பயஸ் (பத்திநாதர்) Papa PIUS Sextus |
கோந்தே ஜொவான்னி ஆஞ்செலோ ப்ராஸ்கி | ஸெஸேனா, திருத்தந்தை நாடுகள் | 57 / 81 | இவர் ஆட்சியின்போது 1789இல் பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது. திருச்சபையும் திருத்தந்தை நாடுகளும் வன்மையாகத் தாக்கப்பட்டதை இவர் கண்டித்தார். எனவே பிரான்சிய இராணுவம் இவரை 1798இல் நாடுகடத்தியது. அதைத் தொடர்ந்து இவர் காலமானார். | |
251/8 | 14 மார்ச் 1800 – 20 ஆகஸ்ட் 1823 (23 ஆண்டுகள், 159 நாட்கள்) |
ஏழாம் பயஸ் (பத்திநாதர்), (ஆசீர்வாதப்பர் சபை) Papa PIUS Septimus |
கோந்தே பார்னபா நிக்கோலோ மரியா லூயிஜி கியாராமோந்தி | ஸெஸேனா, திருத்தந்தை நாடுகள் | 57 / 81 | இவர் ஆசீர்வாதப்பர் சபை உறுப்பினர். முதலாம் நெப்போலியனின் முடிசூட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 1809 முதல் 1814 வரை திருத்தந்தை நாடுகளிலிருந்து பிரெஞ்சுப் புரட்சியாளர்களால் நாடுகடத்தப்பட்டார். |
19ஆம் நூற்றாண்டு
தொகுஎண் வரிசை | காலம் | படம் | பெயர் (தமிழ்-இலத்தீன்) |
இயற்பெயர் | பிறப்பிடம் | பணிக்காலத் தொடக்கத்தில் / முடிவில் வயது | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|---|
252/1 | 28 செப்டம்பர் 1823 – 10 பெப்ரவரி 1829 (5 ஆண்டுகள், 135 நாட்கள்) |
பன்னிரண்டாம் லியோ (சிங்கராயர்) Papa LEO Duodecimus |
கோந்தே அன்னீபலே ஃப்ரான்செஸ்கோ க்ளெமேந்தே மெல்க்கியோரே ஜிரோலமோ நிக்கோலா செர்மத்தேயி தெல்லா கெங்கா | கெங்கா அல்லது ஸ்பொலேத்தோ, திருத்தந்தை நாடுகள் | 63 / 68 | ||
253/2 | 31 மார்ச் 1829 – 1 டிசம்பர் 1830 (1 ஆண்டு, 245 நாட்கள்) |
எட்டாம் பயஸ் Papa PIUS Octavus |
பிரான்செஸ்கோ சவேரியோ கஸ்திலியோனி | சிங்கொலி, மார்க்கே, திருத்தந்தை நாடுகள் | 67 / 69 | ||
254/3 | 2 பெப்ரவரி 1831 – 1 ஜூன் 1846 (15 ஆண்டுகள், 119 நாட்கள்) |
பதினாறாம் கிரகோரி Papa GREGORIUS Sextus Decimus |
பர்த்தலமேயோ அல்பேர்த்தோ கப்பெல்லாரி | பெல்லூனோ, வெனிஸ் குடியரசு | 65 / 80 | கமால்தொலேஸே சபை உறுப்பினராக இருந்தவர். ஆயர் நிலை இல்லாதிருந்து திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசித் திருத்தந்தை இவரே. இவர் காலத்திற்குப் பின் இன்றுவரை திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவர் ஏற்கனவே ஆயராக இருந்தவரே ஆவர். | |
255/4 | 16 ஜூன் 1846 – 7 பெப்ரவரி 1878 (31 ஆண்டுகள், 236 நாட்கள்) |
ஒன்பதாம் பயஸ் (பத்திநாதர்), (பிரான்சிஸ்கன் பொதுநிலை உறுப்பினர்) Papa PIUS Nonus |
கோந்தே ஜொவான்னி மரியா மஸ்தாய்-ஃபெர்ரேத்தி | செனிகால்லியா, மார்க்கே, திருத்தந்தை நாடுகள் | 54 / 85 | இவர் முதல் வத்திக்கான் சங்கத்தைக் கூட்டப்போவதாக 1868இல் அறிவித்தார். சங்கம் 1869-1870இல் நடந்தது. அரசியல் குழப்பங்களின் பின்னணியில் ஒத்திவைக்கப்பட்டது. சங்கம் மீண்டும் கூடவில்லை. இச்சங்கத்தின் முக்கிய முடிவுகளில் ஒன்று திருத்தந்தையின் வழுவாவரம் பற்றியதாகும். அதாவது, திருத்தந்தை கிறித்தவ நம்பிக்கை மற்றும் நன்னடத்தை சம்பந்தமாகத் திருச்சபையினர் அனைவரும் ஏற்கவேண்டியதாக ஒரு போதனையை அதிகாரப்பூர்வமாக வழங்கும்போது அவர் தவறு இழைக்காவண்ணம் கடவுள் காப்பார் என்பதாகும். ஏறக்குறைய 31 ஆண்டுகள் இவர் திருத்தந்தைப் பணி ஆற்றி, மிக நீண்ட காலம் ஆட்சி செய்தவராக விளங்குகின்றார். இவர் காலத்தில் திருத்தந்தை நாடுகளை இத்தாலி கைப்பற்றிக் கொண்டது. திருத்தந்தை நாடுகளின் கடைசி ஆட்சியாளர் இவரே. நாடு பறிபோனாலும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை இடமாக வத்திக்கான் என்னும் சிறு நிலப்பகுதி தொடர்ந்து இருந்தது. ஆயினும் இத்தாலி நாடு திருத்தந்தை நாட்டுப் பகுதியைத் தனியதிகாரம் கொண்ட நாடாக ஏற்க மறுத்ததால் திருத்தந்தை தம்மை "வத்திக்கான் கைதி" என்று கருதினார். திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் செப்டம்பர் 3, 2000 ஆண்டில் இவரை "முத்திப்பேறு பெற்றவர்" என்னும் நிலைக்கு உயர்த்திச் சிறப்பித்தார். | |
256/5 | 20 பெப்ரவரி 1878 - 20 ஜூலை 1903 (25 ஆண்டுகள், 150 நாட்கள்) |
பதின்மூன்றாம் லியோ (சிங்கராயர்)பிரான்சிஸ்கன் பொதுநிலை உறுப்பினர் Papa LEO Tertius Decimus |
ஜொவாக்கீனோ வின்சேன்ஸோ ரஃபயேலே லூயிஜி பெச்சி | உரோமை, பிரெஞ்சு பகுதி, இன்று இத்தாலியா | 67 / 93 | தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தி இவர் வெளியிட்ட சுற்றுமடல் "தொழிலாளர்களின் சாசனம்" என்று அழைக்கப்படுகிறது (1891). கட்டற்ற முதலாளியமும் பொதுவுடைமையும் மக்களுக்கு நன்மை பயப்பதில்லை என்றும், குடியரசு முறை ஏற்கத்தக்கது என்றும் இவர் கூறினார். 25 ஆண்டுகளுக்கு மேல் திருத்தந்தைப் பணியாற்றிய இவர் ஒன்பதாம் பயஸ் (31 ஆண்டுகள்), இரண்டாம் யோவான் பவுல் (26 ஆண்டுகள்) ஆகியோருக்கு அடுத்து, நீண்ட காலம் ஆட்சிசெய்த மூன்றாமவராக உள்ளார். |
20ஆம் நூற்றாண்டு
தொகுஎண் வரிசை | காலம் | படம் | பெயர் (தமிழ்-இலத்தீன்) |
இயற்பெயர் | பிறப்பிடம் | பணிக்காலத் தொடக்கத்தில் / முடிவில் வயது | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|---|
257/1 | 4 ஆகஸ்ட் 1903 – 20 ஆகஸ்ட் 1914 (11 ஆண்டுகள், 16 நாட்கள்) |
புனித பத்தாம் பயஸ் (பத்திநாதர்) Papa PIUS Decimus |
ஜியுசேப்பே மெல்க்கியோரெ சார்த்தோ | ரியேஸே, லொம்பார்தி-வெனேசியா, (முன்னாள்) ஆஸ்திரியா | 68 / 79 | இவர் திரு இசையை ஊக்குவித்தார். கத்தோலிக்க வழிபாட்டில் பல சீர்திருத்தங்களைக் கொணர்ந்தார். குறிப்பாக, நற்கருணை பக்தியை வளர்த்தார். கடைசியாக புனிதர் பட்டம் பெற்ற திருத்தந்தை இவரே. | |
258/2 | 3 செப்டம்பர் 1914 – 22 ஜனவரி 1922 (7 ஆண்டுகள், 141 நாட்கள்) |
பதினைந்தாம் பெனடிக்ட் (ஆசீர்வாதப்பர்) Papa BENEDICTUS Quintus Decimus |
ஜாக்கொமோ பவுலோ ஜொவான்னி பத்திஸ்தா தெல்லா கியேசா | ஜேனொவா, சார்தீனிய அரசு | 59 / 67 | முதலாம் உலகப் போரின் போது நாடுகளிடையே அமைதி கொணர அரும்பாடு பட்டார். "அமைதியின் இறைவாக்கினர்" என்று இவரை இன்றைய திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் போற்றியுள்ளார். | |
259/3 | 6 பெப்ரவரி 1922 – 10 பெப்ரவரி 1939 (17 ஆண்டுகள், 4 நாட்கள்) |
பதினொன்றாம் பயஸ் (பத்திநாதர்) Papa PIUS Undecimus |
அக்கில்லே அம்ப்ரோஜியோ தமியானோ ராத்தி | தேசியோ,லொம்பார்தி-வெனேசியா, (முன்னாள்) ஆஸ்திரியா | 64 / 81 | சூன் 7, 1929இல் இத்தாலி அரசும் திருத்தந்தையும் உடன்படிக்கை செய்துகொண்டனர். இத்தாலி நாடு வத்திக்கான் நாட்டைத் தன்னுரிமை கொண்ட நாடாக ஏற்றது. திருத்தந்தை நாடுகளைக் கைப்பற்றியதற்கு ஈடாக இத்தாலி வத்திக்கானுக்குப் பொருளுதவி செய்ய முன்வந்தது. இந்த உடன்படிக்கை வத்திக்கானுக்குச் சொந்தமான இலாத்தரன் அரண்மனையில் கையெழுத்தானதால் இலாத்தரன் உடன்படிக்கை என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகச் செயல்பட்ட திருத்தந்தை தம் நாடுகளை இழந்துவிட்டபோதிலும் உலக அரங்கில் இன்று ஆன்மிகத் தலைவராக விளங்க வழிபிறந்தது. | |
260/4 | 2 மார்ச் 1939 – 9 அக்டோபர் 1958 (19 ஆண்டுகள், 221 நாட்கள்) |
வணக்கத்துக்குரிய பன்னிரண்டாம் பயஸ் (பத்திநாதர்) Papa PIUS Duodecimus |
எவுஜேனியோ மரியா ஜொசேப்பே ஜொவான்னி பச்சேல்லி | உரோமை, இத்தாலியா | 63 / 82 | இவர் இரண்டாம் உலகப் போரின் போது அமைதிக் குரல் எழுப்பினார். நாசி ஆட்சியில் கொடுமைகளுக்கு ஆளான பல யூதர்களுக்கு வத்திக்கானில் தஞ்சம் அளித்தார். ஆயினும் யூதர்களைக் காப்பாற்ற இவர் மேலதிகம் செய்யவில்லை என்று சில யூத குழுக்கள் குறைகூறுகின்றன. இயேசுவின் அன்னை மரியா இவ்வுலக வாழ்வுக்குப்பின் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்னும் உண்மையை இவர் விசுவாச சத்தியமாக நவம்பர் 1, 1950இல் பிரகடனம் செய்தார். | |
261/5 | 28 அக்டோபர் 1958 – 3 ஜூன் 1963 (4 ஆண்டுகள், 218 நாட்கள்) |
முத்திப்பேறு பெற்ற இருபத்திமூன்றாம் யோவான் (அருளப்பர்) Papa IOANNES Vicesimus Tertius |
ஆஞ்செலோ ஜியுசேப்பே ரோன்கால்லி | பெர்கமோ, இத்தாலியா | 76 / 81 | தம் எழுபத்து ஆறாம் வயதில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் அக்டோபர் 8, 1962இல் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைக் கூட்டினார். சங்கம் நடந்துகொண்டிருந்த போதே புற்றுநோய் காரணமாக உயிர்துறந்தார். ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தலைமையில் மேலை நாடுகளும் சோவியத் யூனியன் தலைமையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் பனிப்போரில் ஈடுபட்டிருந்த நாட்களில் இவர் உலக அமைதிக்காக உழைத்தார். அமெரிக்க அதிபர் ஜான் கென்னடியையும் சோவியத் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். உலக அமைதியை வலியுறுத்தி "அவனியில் அமைதி" என்னும் சுற்றுமடலைத் தாம் இறப்பதற்கும் சில மாதங்களுக்கு முன் வெளியிட்டார். 2000, செப்டம்பர் 3ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இவருக்கு முத்திப்பேறு பெற்ற பட்டம் அளித்தார். | |
262/6 | 21 ஜூன் 1963 – 6 ஆகஸ்ட் 1978 (15 ஆண்டுகள், 46 நாட்கள்) |
இறை ஊழியர் ஆறாம் பவுல் (சின்னப்பர்) Papa PAULUS Sextus |
ஜொவான்னி பத்திஸ்தா என்ரிக்கோ அந்தோனியோ மரியா மொந்தீனி | கொன்சேசியோ, ப்ரேஷியா, இத்தாலியா | 65 / 80 | இருபத்திமூன்றாம் யோவான் தொடங்கிவைத்த இரண்டாம் வத்திக்கான் சங்கத்தை நன்முறையில் நடத்தி இவர் டிசம்பர் 8, 1965இல் அதை நிறைவுக்குக் கொணர்ந்தார். சங்கத்தின் முடிவுகளைச் செயல்படுத்தினார். வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு உலகின் பல நாடுகளில் அமைதியின் தூதுவராகச் சென்றார். 1964இல் எருசலேம் சென்றார். அதே ஆண்டு இந்தியா சென்றார். 1965இல் ஐக்கிய நாடுகள் அவையில் உரையாற்றி, "போர் வேண்டாம்!" என்று முழக்கமிட்டார். கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தி குழந்தைப் பேற்றைத் தவிர்ப்பது முறையாகாது என்றும், இயற்கைமுறை மட்டுமே ஏற்புடையது என்றும் அவர் 1968இல் வழங்கிய போதனை சர்ச்சைக்கு உள்ளானது. சமூக நீதி பற்றி அவர் எழுதிய சுற்றுமடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. | |
263/7 | 26 ஆகஸ்ட் 1978 – 28 செப்டம்பர் 1978 (0 ஆண்டுகள், 33 நாட்கள்) |
இறை ஊழியர் முதலாம் யோவான் பவுல் (அருளப்பர் சின்னப்பர்; அருள் சின்னப்பர்) Papa IOANNES PAULUS Primus |
அல்பீனோ லூச்சியானி | ஃபோர்னோ தி கனாலே, வேனெத்தோ, இத்தாலியா | 65 / 65 | தமக்கு முன் பணியாற்றிய இரு திருத்தந்தையரின் பெயர்களையும் இணைத்து இவர் தம் பெயராகக் கொண்டார். 33 நாட்களே பணிபுரிந்தாலும் இவர் தம் எளிமையான போக்கினால் மக்களின் மதிப்பையும் அன்பையும் பெற்றார். | |
264/8 | 16 அக்டோபர் 1978 – 2 ஏப்ரல் 2005 (26 ஆண்டுகள், 168 நாட்கள்) |
முத்திப்பேறு பெற்ற இரண்டாம் யோவான் பவுல் (அருளப்பர் சின்னப்பர்; அருள் சின்னப்பர்) Papa IOANNES PAULUS Secundus |
கரோல் யோசெஃப் வொய்த்தீவா | வாதோவிச், போலந்து | 58 / 84 | ஒன்பதாம் பயஸ் என்னும் திருத்தந்தைக்குப் பிறகு நீண்ட காலம் திருத்தந்தையாகப் பணிபுரிந்தவர் இவரே. போலந்து நாட்டிலிருந்து வந்த முதல் திருத்தந்தை இவர். இவருக்கு முன் இத்தாலியர் அல்லாத ஒருவர் திருத்தந்தையாகப் பணியேற்றது 455 ஆண்டுகளுக்கு முன் ஆகும். இவர் பலருக்குப் புனிதர் பட்டம் கொடுத்து, அவர்களது வாழ்க்கையை மக்களுக்கு முன்மாதிரியாக அளித்தார். உலகின் ஏறக்குறைய எல்லா நாடுகளுக்கும் பயணம் சென்று மக்களுக்கு அமைதி, நீதி ஆகியவை பற்றி அறிவுரையும் கருத்துரையும் வழங்கினார். இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து செயல்படுத்தினார். 2011, மே மாதம் முதல் நாளன்று திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் இவருக்கு முத்திப்பேறு பெற்ற பட்டம் அளித்தார். |
21ஆம் நூற்றாண்டு
தொகுஎண் வரிசை | காலம் | படம் | பெயர் (தமிழ்-இலத்தீன்) |
இயற்பெயர் | பிறப்பிடம் | பணிக்காலத் தொடக்கத்தில் / முடிவில் வயது | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|---|
265/1 | 19 ஏப்ரல் 2005 – 28 பிப்ரவரி 2013 (7 ஆண்டுகள், 315 நாட்கள்) |
பதினாறாம் பெனடிக்ட் (ஆசீர்வாதப்பர்) Papa BENEDICTUS Sextus Decimus |
யோசஃப் அலோய்ஸ் ராட்சிங்கர் | மார்க்ட்ல் ஆம் இன், பவேரியா, ஜெர்மனி | 78 / 85 | 1057ஆம் ஆண்டுக்குப் பின், ஒன்பதாம் ஸ்தேவான் என்னும் செருமானியருக்குப் பிறகு, பதவி ஏற்ற முதல் செருமானிய நாட்டுத் திருத்தந்தை இவர். இவர் தலைசிறந்த இறையியல் அறிஞர். பல இறையியல் நூல்களை வெளியிட்டிருக்கிறார். சமய நம்பிக்கையில் வன்முறைக்கு இடமில்லை என்னும் கருத்தை வலியுறுத்தியபோது இசுலாம் பற்றி இவர் தெரிவித்த குறிப்பு இவருக்கு எதிர்ப்பைக் கொணர்ந்தது. பின்னர் அவர் இஸ்தான்புல் சென்றபோது "நீலப் பள்ளிவாசலுக்குள்" நுழைந்து அமைதியாக இறைவேண்டல் செய்தார். இவர் கத்தோலிக்க சமயத்தில் மரபுக் கொள்கைகளைப் பெரிதும் வலியுறுத்துகிறார். சமூக நீதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை பற்றி போதிக்கிறார். | |
266/2 | 19 மார்ச்சு 2013 முதல் (11 ஆண்டுகள், 212 நாட்கள்) |
பிரான்சிசு (இயேசு சபை) Papa FRANCISCVS |
ஹோர்கே மாரியோ பெர்கோலியோ | புவெனஸ் ஐரிஸ், அர்கெந்தீனா | 76 / - | அமெரிக்காக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை இவரே. இயேசு சபையினை சேர்ந்த முதல் திருத்தந்தையும் இவரே. |
திருத்தந்தையர்களின் பட்டியலின் அமைப்பு குறித்த விளக்கம்
தொகுதிருத்தந்தையர்களின் பெயர்களைத் தமிழில் ஆக்கும்போது மூல வடிவத்தின் ஒலிமுறை கையாளப்படுகிறது. சில பெயர்களுக்குக் கிறித்தவ மரபில் தமிழ் வடிவங்கள் ஏற்கனவே உள்ளன. அவை அடைப்புக் குறிகளுக்குள் தரப்பட்டுள்ளன. அத்தகைய பெயர்களின் பட்டியல் கீழ்வருமாறு:
பெயரின் ஆங்கில வடிவம் | பெயரின் தமிழ் வடிவம் | பெயரின் தமிழ் மரபு மொழிபெயர்ப்பு |
---|---|---|
Benedict | பெனடிக்ட் | ஆசீர்வாதப்பர் |
Pius | பயஸ் | பத்திநாதர் |
Leo | லியோ | சிங்கராயர் |
Paul | பவுல் | சின்னப்பர் |
Peter | பேதுரு | இராயப்பர் |
John | யோவான் | அருளப்பர் (அருள்) |
Stephen | ஸ்தேவான் | முடியப்பர் |
Innocent | இன்னசெண்ட் | மாசிலோன் |
Clement | கிளமெண்ட் | சாந்தப்பர் |
- எதிர்-திருத்தந்தையர்கள் அல்லது எதிர்-பாப்புகள் இப்பட்டியலில் இடம் பெறவில்லை.[4]
- பெலிக்ஸ் என்னும் பெயருடைய திருத்தந்தையர்களின் வரிசை எண், எதிர் திருத்தந்தையர்களை சேர்க்காமல் கூடியதாகும்[4]
- இருபதாம் யோவான் என்ற பெயரைக் கொண்ட திருத்தந்தையாக யாரும் இருக்கவில்லை. ஆதலால் 11ஆம் நூற்றாண்டில் சிறு குழப்பம் நிலவியது.[5]
- ஸ்தேவான் (தேர்வான திருத்தந்தை) திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்டு ஆயர்நிலை திருப்பொழிவு பெறுவதற்கு முன் இறந்ததால் கத்தோலிக்க திருச்சபையின் பட்டியலில் திருத்தந்தையாக எண்ணப்படுவதில்லை.
- மரீனுஸ் மற்றும் மார்ட்டின் என்னும் பெயர்களுக்கிடையே இருந்த குழப்பத்தால் "இரண்டாம்" மற்றும் "மூன்றாம்" வரிசை எண்களை விடுத்து நான்காம் மார்ட்டின் என்று ஒரு திருத்தந்தை பெயர் ஏற்றுக்கொண்டார்.[6]
- இரண்டாம் டோனுஸ் என்னும் பெயரிலோ யோவான்னா என்ற பெயரிலோ திருத்தந்தையர் இருந்ததற்கான வரலாற்று ஆதாரம் இல்லை.[7]
- இருபத்திமூன்றாம் யோவான் என்னும் பெயர் கொண்ட ஒரு எதிர்-திருத்தந்தை வரலாற்றில் இருந்த போதிலும் அதே பெயரைக் கர்தினால் ஜியுசேப்பே ரொன்கால்லி அக்டோபர் 28, 1958இல் தமதாகத் தேர்ந்துகொண்டார்.
ஆதாரங்கள்
தொகுமேல்
தொகு- ↑ திருத்தந்தையர் பட்டியல்
- ↑ போன்தியன் பற்றிய துல்லியமான வரலாற்றுக் குறிப்பு
- ↑ மூன்றாம் கிளமெண்ட் இறந்த நாள், மற்றும் மூன்றாம் செலஸ்தீன் தேர்ந்தெடுக்க்ப்பட்ட நாள் பற்றிய தகவல்களுக்கு, காண்க: Katrin Baaken: Zu Wahl, Weihe und Krönung Papst Cölestins III. Deutsches Archiv für Erforschung des Mittelalters Volume 41 / 1985, pp. 203–211
- ↑ 4.0 4.1 Paschal Robinson (1913). "Antipope". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
- ↑ Paschal Robinson (1913). "Chronological Lists of Popes". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
- ↑ Paschal Robinson (1913). "Pope Martin IV". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
- ↑ Paschal Robinson (1913). "Popess Joan". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
பொது
தொகு- John N.D. Kelly, The Oxford Dictionary of Popes, Oxford University Press, 1986.
- AA.VV., Enciclopedia dei Papi, Istituto dell'Enciclopedia italiana, 2000.
- Pontificia Amministrazione della Patriarcale Basilica di San Paolo, I Papi. Venti secoli di storia, Libreria Editrice Vaticana, 2002.